iPhoneஇல் உள்ள மெசேஜஸில் iMessage செயலிகளைப் பயன்படுத்துதல்
நீங்கள் மெசேஜஸ் செயலியை விட்டு வெளியேறாமல் iMessage செயலிகள் மூலம் கேம் விளையாடலாம், ஆடியோ மெசேஜ்களைப் பதிவுசெய்யலாம், பாடல்களைப் பகிரலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம். கிடைக்கக்கூடிய செயலிகளின் பட்டியலை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம் அல்லது App Storeஇல் நீங்கள் கண்டறியும் iMessage செயலிகளைச் சேர்க்கலாம்.

iMessage செயலிகளை மறுவரிசைப்படுத்துதல்
உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ்
செயலிக்குச் செல்லவும்.
புதிய மெசேஜைத் தொடங்கி அல்லது உரையாடலைத் திறந்து,
-ஐத் தட்டவும்.
பட்டியலில் உள்ள செயலி ஐகானை சிறிது சுருங்கும் வரை தொட்டுப் பிடித்து, அதை நீங்கள் விரும்பும் இடத்திற்கு இழுக்கவும்.
செயலி ஐகானை வேறு பக்கத்திற்கு நகர்த்த, அதைத் திரையின் மேல் அல்லது கீழ் விளிம்பிற்கு இழுக்கவும். இந்தப் புதிய பக்கம் தோன்றும் வரை நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கலாம்.
iMessage செயலிகளைச் சேர்த்தல்
புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ மெசேஜ்கள், பேமெண்ட்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் பலவற்றை அனுப்ப நீங்கள் பயன்படுத்தக்கூடிய iMessage செயலிகளுடன் மெசேஜஸ் செயலி கிடைக்கும். மேலும் விருப்பங்களுக்குக் கூடுதல் iMessage செயலிகளைப் பதிவிறக்கலாம்.
உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ்
செயலிக்குச் செல்லவும்.
புதிய மெசேஜைத் தொடங்கி அல்லது உரையாடலைத் திறந்து,
-ஐத் தட்டவும்.
iMessageக்காக App Storeஐத் திறக்க, ஸ்டோர்
என்பதைத் தட்டவும்.
மேலும் விவரங்களையும் மறுஆய்வுகளையும் பார்க்க ஒரு செயலியைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:
செயலியை வாங்குதல்: விலை மீது தட்டவும். உங்கள் Apple கணக்குடன் தொடர்புடைய பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி பேமெண்ட்கள் செலுத்தப்படுகின்றன.
இலவச செயலியைப் பதிவிறக்குதல்: “பெறு” என்பதைத் தட்டவும்.