iPhone சாதனத்தில் சினிமேட்டிக் பயன்முறை வீடியோக்களைத் திருத்துதல்
ஆதரிக்கப்படும் மாடல்களில், சினிமேட்டிக் பயன்முறையின்போது டெப்த் ஆஃப் ஃபீல்டை கேமரா பயன்படுத்தும். இது வீடியோவின் முன்புலத்தையும் பின்புலத்தையும் மங்கலாக்கி சப்ஜெக்ட்டைக் கூர்மையாக்கி மெருகேற்றும். வீடியோவைப் பதிவுசெய்த பிறகு, ஃபோட்டோஸ் செயலியில் உள்ள “சினிமேட்டிக் பயன்முறை” எஃபெக்ட்களை நீங்கள் சரிசெய்யலாம் அல்லது அகற்றலாம்.

சினிமேட்டிக் எஃபெக்ட்டை ஆஃப் செய்தல்
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.
நீங்கள் சினிமேட்டிக் பயன்முறையில் பதிவுசெய்த வீடியோவைத் திறந்து,
-ஐத் தட்டவும்.
திரையின் மேலே உள்ள “சினிமேட்டிக்” என்பதைத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
சினிமேட்டிக் பயன்முறைக்கு மீண்டும் செல்ல, இந்தப் படிகளை மீண்டும் செய்யவும்.
சினிமேட்டிக் பயன்முறை வீடியோவில் ஃபோகஸ் சப்ஜெக்ட்டை மாற்றுதல்
சினிமேட்டிக் பயன்முறையில் பதிவுசெய்யும்போது எங்கு ஃபோகஸ் செய்ய வேண்டும் என்பதை கேமரா தானாகவே அடையாளம் காண்கிறது, மேலும் ஒரு புதிய சப்ஜெக்ட் அடையாளம் காணப்பட்டால் ஃபோகஸைத் தானாகவே மாற்ற முடியும். ஃபோகஸ் சப்ஜெக்ட்டை நேரடியாகவும் மாற்றலாம்.
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.
நீங்கள் சினிமேட்டிக் பயன்முறையில் பதிவுசெய்த வீடியோவைத் திறந்து,
-ஐத் தட்டவும்.
பதிவு செய்யும் போது கேமரா தன்னியக்கமாக ஃபோகஸை எங்கு மாற்றியது என்பதை ஃபிரேம் வியூவரின் கீழ் உள்ள வெள்ளை புள்ளிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஃபோகஸ் நேரடியாக மாற்றப்பட்ட இடத்தை மஞ்சள் புள்ளிகள் குறிக்கின்றன.
வீடியோவை பிளே செய்யவும் அல்லது ஃபோகஸை மாற்ற விரும்பும் இடத்திற்கு ஃபிரேம் வியூவரில் உள்ள வெள்ளைநிற செங்குத்து பாரை ஸ்லைடு செய்யவும்.
ஃபோகஸை மாற்ற, மஞ்சள் நிறத்தில் அவுட்லைன் செய்யப்பட்ட ஒரு சப்ஜெக்ட்டைத் தட்டவும். சப்ஜெக்ட்டில் தானியங்கி ஃபோகஸ் டிராக்கிங்கை அமைக்க இருமுறை தட்டவும்.
ஃபோகஸ் மாற்றப்பட்டிருப்பதைக் குறிக்க ஃபிரேம் வியூவரின் கீழே மஞ்சள் புள்ளி தோன்றும்.
குறிப்பு: கேமராவிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் ஃபோகஸை லாக் செய்ய நீங்கள் திரையைத் தொட்டு பிடிக்கலாம்.
வீடியோ முழுவதும் ஃபோகஸ் பாயின்ட்களை மாற்ற மேலே உள்ள படிநிலைகளை மீண்டும் செய்யவும்.
நேரடியாக செய்த ஃபோகஸ் மாற்றத்தை அகற்ற, ஃப்ரேம் வியூவரின் கீழ் உள்ள மஞ்சள் புள்ளியைத் தட்டி,
-ஐத் தட்டவும்.
உங்கள் மாற்றங்களைச் சேமிக்க “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
தானியங்கு ஃபோகஸ் டிராக்கிங்கிற்கும் நீங்கள் நேரடியாகத் தேர்ந்தெடுத்த ஃபோகஸ் பாயின்ட்களுக்கும் இடையில் மாற -ஐத் தட்டவும்.
உங்கள் மாற்றங்களைச் சேமித்த பிறகு, நீங்கள் செய்த திருத்தங்களை விரும்பவில்லை எனில், சினிமேட்டிக் பயன்முறை வீடியோவை அசலுக்குத் திரும்பப் பெறலாம். வீடியோவைத் திறந்து, -ஐத் தட்டி, “அசலுக்குத் திரும்பு” என்பதைத் தட்டவும்.
சினிமேட்டிக் பயன்முறை வீடியோவில் ஃபீல்ட் டெப்த்தைச் சரிசெய்தல்
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.
நீங்கள் சினிமேட்டிக் பயன்முறையில் பதிவுசெய்த வீடியோவைத் திறந்து,
-ஐத் தட்டவும்.
திரையின் மேல்பகுதியில் உள்ள
என்பதைத் தட்டவும்.
வீடியோவுக்குக் கீழே ஸ்லைடர் தோன்றும்.
ஃபீல்ட் எஃபெக்ட்டின் டெப்த்தை மாற்ற ஸ்லைடரை இடது அல்லது வலதுபுறமாக இழுத்து “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
நீங்கள் சேமித்த பிறகு செய்த திருத்தங்களைச் செயல்தவிர்க்க, வீடியோவைத் திறந்து, -ஐத் தட்டி, “அசலுக்குத் திரும்பு” என்பதைத் தட்டவும்.
உங்கள் Mac சாதனத்திற்கு சினிமேட்டிக் பயன்முறை வீடியோக்களை எக்ஸ்போர்ட் செய்தல்
உங்கள் iPhoneஇல் இருந்து Macகிற்கு அனுப்பி பிற செயலிகளில் திருத்துவதற்காக டெப்த் மற்றும் ஃபோகஸ் மெட்டாடேட்டாவுடன் சினிமேட்டிக் பயன்முறை வீடியோக்களை அனுப்ப AirDropஐப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: iOS 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைக் கொண்ட iPhone சாதனங்களில் சினிமேட்டிக் பயன்முறையில் பதிவுசெய்த வீடியோக்களைத் திருத்த, macOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பை உங்கள் Mac பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.
சினிமேட்டிக் பயன்முறை வீடியோவைத் திறந்து,
-ஐத் தட்டவும்.
திரையின் மேலே உள்ள விருப்பங்களைத் தட்டி, “புகைப்படத் தரவுகள் அனைத்தும்” என்பதை ஆன் செய்தபிறகு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
AirDropஐத் தட்டி, நீங்கள் பகிர விரும்பும் சாதனத்தைத் (நீங்கள் பகிர விரும்பும் சாதனத்தில் AirDrop ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்) தட்டவும்.
உங்கள் Macஇல் சினிமேட்டிக் பயன்முறை வீடியோக்களை ஃபோட்டோஸ் செயலியைப் பயன்படுத்தி திருத்துவது குறித்த தகவல்களுக்கு, சினிமேட்டிக் பயன்முறை வீடியோவைத் திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் Mac சாதனத்தில் Final Cut Pro, iMovie அல்லது Motionஐப் பயன்படுத்தி சினிமேட்டிக் பயன்முறை வீடியோக்களைத் திருத்துவது குறித்த தகவல்களுக்கு, Final Cut Pro, iMovie மற்றும் Motionஇல் சினிமேட்டிக் பயன்முறை வீடியோவைத் திருத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
சினிமேட்டிக் பயன்முறை வீடியோக்களை வெளிப்புற சேமிப்பக சாதனத்திற்கு எக்ஸ்போர்ட் செய்தல்
நீங்கள் சினிமேட்டிக் பயன்முறை வீடியோக்களை ஒரு வெளிப்புற டிரைவ், மெமரி கார்டு அல்லது பிற சேமிப்பக சாதனத்திற்கு நேரடியாக எக்ஸ்போர்ட் செய்யலாம்.
குறிப்பு: திருத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, மாற்றியமைக்கப்படாத அசல் பதிப்பு எக்ஸ்போர்ட் செய்யப்படும்.
லைட்னிங் அல்லது USB-C கனெக்டரைப் பயன்படுத்தி உங்கள் iPhoneஐ சேமிப்பக சாதனத்துடன் இணைக்கவும்.
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.
நீங்கள் எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
-ஐத் தட்டி, “மாற்றியமைக்கப்படாத அசலை எக்ஸ்போர்ட் செய் “ என்பதைத் தட்டவும்.
உங்கள் சேமிப்பக சாதனத்தைத் தட்டி, (இருப்பிடங்களுக்குக் கீழே உள்ளது) “சேமி” என்பதைத் தட்டவும்.