iPhoneஇல் Apple ஹோமின் புதிய பதிப்பிற்கு மேம்படுத்துதல்
Apple ஹோமின் புதிய பதிப்பை iOS 16.2 அறிமுகப்படுத்தியுள்ளது, இது மிகவும் நம்பகமானது மற்றும் திறம்படச் செயல்படக்கூடியது. இதன் கிடைக்கும்தன்மை மற்றும் விவரங்களுக்கு, Apple ஹோமின் புதிய பதிப்பிற்கு மேம்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
மேம்படுத்துவதற்கு முன், உங்கள் வீட்டில் இணைக்கப்பட்டுள்ள Apple சாதனங்கள் சமீபத்திய மென்பொருளைப் பயன்படுத்துகின்றனவா என்பதை உறுதிசெய்யவும். இதில் எந்தவொரு உரிமையாளரின் சாதனங்களும், பகிரப்பட்ட பயனர்களின் சாதனங்களும் அடங்கும்.
குறிப்பு: ரிமோட் அணுகல், உங்கள் ஹோமைப் பகிர்தல், அறிவிப்புகள், ஆட்டோமேஷன்கள், HomeKit பாதுகாப்பு வீடியோ, அடாப்ட்டிவ் லைட்டிங் போன்ற அம்சங்களுக்கு Apple TV (4ஆவது ஜெனரேஷன் அல்லது அதற்குப் பிந்தைய மாடல்) அல்லது HomePod போன்ற ஹோம் ஹப் அவசியம். Apple ஹோமின் புதிய பதிப்பு உள்ள iPad ஹோம் ஹப்பாக ஆதரிக்கப்படாது. உங்கள் ஸ்மார்ட் ஹோம் ஆக்சஸரிகளை இணைக்கவும் கட்டுப்படுத்தவும் iPadஇல் உள்ள ஹோம் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஹோம் செயலியை மேம்படுத்துதல்
உங்கள் iPhoneஇல் ஹோம் செயலிக்குச்
செல்லவும்.
ஹோம் தாவலில்
-ஐத் தட்டி “ஹோம் அமைப்புகள்” என்பதைத் தட்டவும்.
“மென்பொருள் புதுப்பிப்பு” என்பதைத் தட்டி, “மேலும் அறிக” என்பதைத் தட்டவும், பின்னர் திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
குறிப்பு: சமீபத்திய மென்பொருளைப் பயன்படுத்தாத இணைக்கப்பட்ட சாதனங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும் வரை மேம்படுத்தப்பட்ட ஹோமுக்கான அணுகலை இழக்கும்.