iPhoneஇல் VoiceOverஐ ஆன் செய்து பயிற்சி செய்தல்
திரையைப் பார்க்க முடியாவிட்டாலும் நீங்கள் சைகை அடிப்படையிலான ஸ்கிரீன் ரீடரான VoiceOver அம்சம் மூலம் iPhoneஐப் பயன்படுத்தலாம். VoiceOver உங்கள் திரையில் என்ன இருக்கிறது என்பதற்கான கேட்கக்கூடிய விளக்கங்களை வழங்குகிறது-உதாரணமாக, பேட்டரி அளவைக் கேட்கவும், யார் அழைக்கிறார்கள் அல்லது உங்கள் விரலில் எந்த ஐட்டம் உள்ளது என்பன குறித்து அறியவும் இது பயன்படுத்தபடுகிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, VoiceOverக்கான பேசும் குரலையும் நீங்கள் பிரத்தியேகமாக்கலாம்.
நீங்கள் திரையைத் தொடும்போது அல்லது அதன் மீது உங்கள் விரலை இழுக்கும்போது, ஐகான்கள் மற்றும் உரை உட்பட உங்கள் விரலில் உள்ள ஐட்டத்தின் பெயரை VoiceOver சொல்லும். பட்டன், இணைப்பு போன்றவற்றுடன் தொடர்புகொள்ளவோ ஒரு ஐட்டத்தில் இருந்து மற்றொன்றுக்குச் செல்லவோ, VoiceOver சைகைகளைப் பயன்படுத்தவும்.
நீங்கள் ஒரு புதிய திரைக்குச் செல்லும்போது, VoiceOver ஒலியை பிளே செய்து, திரையில் (பொதுவாக மேல் இடது மூலையில்) உள்ள முதல் ஐட்டத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறது. திரை கிடைமட்டம் அல்லது செங்குத்து நோக்குநிலைக்கு மாறும்போது, திரை மங்கலாக்கப்பட்டோ பூட்டப்பட்டோ இருக்கும்போது, நீங்கள் iPhoneஐப் பயன்படுத்தும்போது பூட்டுத் திரையில் செயலில் இருப்பது என்ன என்பதை VoiceOver அம்சம் உங்களுக்குத் தெரிவிக்கிறது.
VoiceOverஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல்
முக்கியம்: iPhoneஐக் கட்டுப்படுத்த நீங்கள் பயன்படுத்தும் சைகைகளை VoiceOver மாற்றுகிறது. VoiceOver ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, iPhoneஐ இயக்க, நீங்கள் VoiceOver சைகைகளைப் பயன்படுத்த வேண்டும்.
VoiceOverஐ ஆன் அல்லது ஆஃப் செய்ய, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
அமைப்புகள்
> அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் சென்று, VoiceOverஐ ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.
நீங்கள் VoiceOverஐச் சேர்த்திருந்தால், கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்தவும்.
VoiceOverஐ ஆன் செய்ய அமைத்திருந்தால் அணுகல்தன்மை சுருக்கவழியைப் பயன்படுத்தவும்.
Siri: இதுபோன்ற ஒன்றைச் சொல்லவும்: “Turn on VoiceOver” அல்லது “Turn off VoiceOver.” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்று அறிக.
Siriக்கு VoiceOver எப்போது ஆன் செய்யப்படுகிறது என்பது தெரியும், மேலும் திரையில் காட்டப்படுவதவிட அதிகமான தகவல்களை உங்களுக்குத் திரும்பத் தெரிவிக்கிறது. திரையில் Siri காட்டப்படுவதைப் படிக்க, VoiceOver அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
VoiceOver பற்றித் தெரிந்துகொள்ள, தொடர்புமுறை டுடோரியலைப் பயன்படுத்துதல்
VoiceOverஇன் தொடர்புமுறை டுடோரியல் மூலம் நீங்கள் VoiceOver அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளலாம் மற்றும் அத்தியாவசிய சைகைகளைப் பயிற்சி செய்யலாம்.
VoiceOver ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, அமைப்புகள் > அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் சென்று, தொடங்குவதற்கு VoiceOver டுடோரியலைத் தட்டவும்.
VoiceOver சைகைகளைப் பயிற்சி செய்தல்
எந்த செயலையும் செய்யாமல் அல்லது iPhoneஐப் பாதிக்காமல், VoiceOver சைகைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் அவை என்ன செய்கின்றன என்பதைக் கேட்கவும், VoiceOver பயிற்சிப் பகுதியைப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு ஏற்றதைக் கண்டறிய, பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்திப் பார்க்கவும். இருமுறை தட்டல் அல்லது ஸ்வைப் சைகை போன்றவை வேலை செய்யவில்லை எனில், ஒரு விரைவு அசைவை முயற்சிக்கவும். ஸ்வைப் செய்ய, உங்கள் விரல் அல்லது விரல்களால் திரையை விரைவாக பிரஷ் செய்ய முயலவும். பல விரல் சைகைகளைப் பயன்படுத்தி சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு, உங்கள் விரல்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு திரையைத் தொடவும்.
அமைப்புகள்
> அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் செல்லவும்.
VoiceOverஐ ஆன் செய்து, அதற்கான பயிற்சியைத் தட்டி, தொடங்குவதற்கு இருமுறை தட்டவும்.
பின்வரும் சைகைகளை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு விரல்களால் பயிற்சி செய்யவும்:
தட்டவும்
இருமுறை தட்டவும்
மூன்று முறை தட்டவும்
இடதுபுறம், வலதுபுறம், மேலே அல்லது கீழே ஸ்வைப் செய்யவும்
பயிற்சி முடிந்ததும், “முடிந்தது” என்பதைத் தட்டி, வெளியேற இருமுறை தட்டவும்.