iPhoneஇல் Apple எப்படி விளம்பரப்படுத்தலை வழங்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்
Apple விளம்பரங்களை வழங்குவதை நீங்களே கட்டுப்படுத்துகிறீர்கள்.
Apple மூலம் வழங்கப்படும் விளம்பரங்கள் App Store, Apple News மற்றும் பங்குகள் செயலியில் காட்டப்படக்கூடும். இந்த விளம்பரங்கள் வேறு எந்தச் செயலிகளில் இருந்தும் தரவை அணுகாது. App Store மற்றும் Apple Newsஇல், உங்களின் இதுவரையான தேடல் மற்றும் பதிவிறக்க விவரங்கள், தொடர்புடைய தேடல் விளம்பரங்களை உங்களுக்கு வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படலாம். Apple News மற்றும் பங்குகள் செயலியில், நீங்கள் படித்த அல்லது பின்பற்றியவற்றை ஓரளவு அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் அறிவிப்புகளைச் செயல்படுத்தியுள்ள வெளியீட்டாளர்கள், உங்களிடம் உள்ள வெளியீட்டுச் சந்தாவின் வகை ஆகியவை இதில் அடங்கும். இந்தச் செயலிகளுக்கு வெளியே இலக்கிடப்பட்ட விளம்பரங்களை உங்களுக்கு வழங்குவதற்காக நீங்கள் படிக்கும் கட்டுரைகள் பயன்படுத்தப்படாது, மேலும் நீங்கள் படிப்பது குறித்துச் சேகரிக்கப்படும் தகவல்கள் உங்கள் Apple கணக்கிற்குப் பதிலாக ரேண்டமான அடையாளத் தகவலில் இணைக்கப்படும்.
விளம்பரங்களைக் காட்டுவதற்கு Apple பயன்படுத்தும் தகவல்களைச் சரிபார்த்தல்
அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்தல் > “விளம்பர இலக்கிடல் தகவல்களைக் காட்டு” என்பதற்குச் செல்லவும்.
App Store, Apple News மற்றும் பங்குகள் செயலியில் இன்னும் தொடர்புடைய விளம்பரங்களை வழங்குவதற்காக, Apple மூலம் தகவல்கள் பயன்படுத்தப்படும். உங்கள் தனிப்பட்ட தரவுகள் பிற தரப்பினருக்கு வழங்கப்படுவதில்லை.
பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆன் அல்லது ஆஃப் செய்தல்
அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்தல் என்பதற்குச் சென்று “பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்கள்” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.
குறிப்பு: பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களை ஆஃப் செய்தால், தொடர்புடைய விளம்பரங்களை உங்களுக்கு வழங்குவதற்கான Appleஇன் திறன் கட்டுப்படுத்தப்படும். நீங்கள் பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கையை இது குறைக்காமல் இருக்கலாம்.
தனியுரிமை மற்றும் Appleஇன் விளம்பர இயங்குதளம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுதல்
அமைப்புகள் > தனியுரிமை & பாதுகாப்பு > Apple விளம்பரப்படுத்தல் > விளம்பரப்படுத்தல் & தனியுரிமை பற்றிய விவரங்கள் என்பதற்குச் செல்லவும்.