இரண்டு iPhone சாதனங்களை அருகருகே வைத்துக்கொண்டு SharePlayஐத் தொடங்குதல்
SharePlayஐப் பயன்படுத்தி, உங்கள் நண்பரின் iPhoneக்கு அருகில் உங்கள் iPhoneஐ வைத்து ஒத்திசைக்கப்பட்ட நிலையில், ஆதரிக்கப்படும் உள்ளடக்கத்தை விரைவாக ஸ்ட்ரீம் செய்யலாம், இசையைக் கேட்கலாம், கேம்களை விளையாடலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
SharePlayஐத் தொடங்குதல்
உங்கள் iPhoneஇல், SharePlayஐ ஆதரிக்கும் செயலியில், நீங்கள் பகிர விரும்பும் உள்ளடக்கத்தைத் தட்டவும்.
நீங்கள் பகிர விரும்பும் நபரின் iPhoneக்கு அருகில் உங்கள் iPhoneஐ வைத்துக்கொள்ளவும்.
அவர்கள் உங்கள் தொடர்புகளில் இல்லையென்றால் (அல்லது அவர்கள் தொடர்புகளில் நீங்கள் இல்லையென்றால்), முதலில் உங்கள் தொடர்புத் தகவலை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். iPhoneஇல் NameDropஐப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்.
SharePlay என்பதைத் தட்டவும்.
நீங்கள் பகிர விரும்பும் நபர் உங்கள் SharePlay அழைப்பை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.
குறிப்பு: இரண்டு iPhone சாதனங்களிலும் iOS 17 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை. AirDrop ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும், அனுப்புநரும் பெறுநரும் அவரவர் தொடர்புகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். SharePlayஐ ஆதரிக்கும் சில செயலிகளுக்குச் சந்தா தேவை. ஒரு திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியை மற்றவர்களுடன் ஒன்றிணைந்து பார்க்க, ஒவ்வொரு பங்கேற்பாளரும் குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தங்கள் சாதனத்தில் அந்த உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கொண்டிருக்க வேண்டும், அதாவது சந்தாசேர்தல் அல்லது அவற்றை வாங்குவதன் மூலம் அவற்றிற்கான அணுகலைப் பெற முடியும். சில திரைப்படங்கள் அல்லது டிவி நிகழ்ச்சிகளைப் பகிர்வதை வேறு சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் SharePlay ஆதரிக்காமல் போகலாம்.