iPhone சாதனத்தில் Apple News Todayஐக் கோருதல்
Apple News எடிட்டர்கள் வழங்கும் அன்றைய நாளின் சிறந்த செய்திகளின் ஆடியோ செய்தித்துணுக்கான Apple News Todayஐ நீங்கள் கேட்கலாம். Apple News+ சந்தா மூலம், News செயலி மற்றும் பாட்காஸ்ட்கள் செயலியில் தேர்ந்தெடுக்கப்பட்ட Apple News+ செய்திகளின் ஆடியோ பதிப்புகளையும் நீங்கள் கேட்கலாம்.
குறிப்பு: Apple News, Apple News+ மற்றும் ஆடியோ அம்சம் அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்கள் கிடைக்கும் தன்மைக்கான இணையதளம் என்ற இணைப்பைப் பார்க்கவும்.
Apple News Todayஐ பிளே செய்தல்
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News
செயலிக்குச் செல்லவும்.
-ஐத் தட்டி, Apple News Todayஇன் ஒரு எபிசோடைத் தட்டவும்.
“இப்போதே கேளுங்கள்” என்பதற்குக் கீழே உள்ள “இன்றைய ஃபீட்” பிரிவிலும் Apple News Today செய்தித்துணுக்குகள் காட்டப்படும்.
கூடுதல் ஆடியோ கட்டுப்பாடுகளுக்கு, முழு திரை பிளேயரைத் திறக்க கீழே உள்ள மினி பிளேயரைத் தட்டவும்.
ஆடியோ செய்திகளைக் கேளுங்கள் என்பதைப் பார்க்கவும்.
மினி பிளேயருக்குத் திரும்ப, முழு திரை பிளேயரைச் சிறிதாக்க கீழே ஸ்வைப் செய்யவும்.
முழு திரை பிளேயரை மூட,
-ஐத் தட்டி, “ஆடியோ பிளேயரை மூடுக” என்பதைத் தட்டவும். மினி பிளேயரை மூட,
என்பதைத் தட்டவும்.
நீங்கள் Apple News+ சந்தாதாரர் இல்லையென்றால், செய்தித்துணுக்கு முடிவடையும்போது Apple News+ ஆடியோ செய்தியின் முன்னோட்டம் பிளே செய்யப்படும்.
Apple News Today காட்டும் குறிப்புகளின் அறிவிப்புகளைப் பெறுதல்
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News
செயலிக்குச் செல்லவும்.
“பின்தொடர்பவை” என்பதைத் தட்டி, திரையின் கீழ்ப்பகுதிக்கு ஸ்வைப் செய்து, “நிர்வகி” என்பதற்குக் கீழே உள்ள “அறிவிப்புகள் & மின்னஞ்சல்” என்பதைத் தட்டவும்.
Apple News Todayக்கான அறிவிப்புகளை ஆன் செய்யவும்.