iPhone சாதனத்தில் உள்ள புத்தகங்கள் செயலியில் புத்தகங்களை ஒழுங்கமைத்தல்
புத்தகங்கள் செயலியில் நீங்கள் வாங்கும் புத்தகங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் உங்கள் லைப்ரரியில் சேமிக்கப்பட்டு “ஆடியோ புத்தகங்கள்”, “படிக்க விரும்புபவை”, “முடித்தவை” போன்ற தொகுப்புகளாக தானாகவே வரிசைப்படுத்தப்படுகின்றன.

தொகுப்பை உருவாக்குதல்
உங்கள் லைப்ரரியை ஒழுங்கமைக்கவும் பிரத்தியேகமாக்கவும் உங்கள் சொந்தத் தொகுப்புகளை உருவாக்கலாம்.
உங்கள் iPhone சாதனத்தில் புத்தகங்கள்
செயலிக்குச் செல்லவும்.
லைப்ரரியைத் தட்டி தொகுப்புகள் என்பதில் “புதிய தொகுப்பு” என்பதைத் தட்டவும்.
தொகுப்புக்குப் பெயரிடவும். உதாரணமாக பீச் ரீட்ஸ் அல்லது புக் கிளப் எனப் பெயரிட்டு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
தொகுப்பில் புத்தகத்தைச் சேர்த்தல்
உங்கள் லைப்ரரி அல்லது புத்தக ஸ்டோரிலிருந்து நீங்கள் உருவாக்கும் தொகுப்புகளுக்குப் புத்தகத்தைச் சேர்க்கலாம்.
உங்கள் iPhone சாதனத்தில் புத்தகங்கள்
செயலிக்குச் செல்லவும்.
ஒரு புத்தகத்திற்குச் சென்று, அட்டையின் கீழே உள்ள
-ஐத் தட்டவும்.
“தொகுப்பில் சேர்” என்பதைத் தட்டி நீங்கள் சேர்க்க விரும்பும் தொகுப்பைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: ஒரே புத்தகத்தை பல தொகுப்புகளில் சேர்க்கலாம்.
உங்கள் புத்தகங்களை ஒழுங்கமைத்தல்
உங்கள் லைப்ரரி அல்லது தொகுப்பில் உள்ள புத்தகங்கள் காட்டப்படும் விதத்தையும் வரிசைப்படுத்தப்படும் விதத்தையும் நீங்கள் மாற்றலாம்.
உங்கள் iPhone சாதனத்தில் புத்தகங்கள்
செயலிக்குச் செல்லவும்.
லைப்ரரியைத் தட்டவும் அல்லது தொகுப்புக்குச் செல்லவும்.
-ஐத் தட்டி பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
புத்தகக் காட்சியை மாற்ற: கிரிட் அல்லது பட்டியலைத் தட்டவும்.
புத்தக வரிசையை மாற்ற: சமீபத்தியது, தலைப்பு, ஆசிரியர் அல்லது நேரடி என்பதைத் தட்டவும்.
“நேரடி” என்பதைத் தேர்ந்தெடுத்தால், புத்தக அட்டையைத் தொட்டு பிடித்து அதை ஒரு புதிய நிலைக்கு இழுக்கவும்.
புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் PDFகளை அகற்றுதல்
முகப்பு, லைப்ரரி மற்றும் உங்கள் லைப்ரரி தொகுப்புகளிலிருந்து புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் PDFகளை அகற்றலாம் அல்லது மறைக்கலாம்.
உங்கள் iPhone சாதனத்தில் புத்தகங்கள்
செயலிக்குச் செல்லவும்.
நீங்கள் அகற்ற விரும்பும் புத்தகம் அல்லது ஆடியோ புத்தகத்திற்குச் சென்று அட்டையின் கீழே உள்ள
-ஐத் தட்டவும்.
“அகற்று” என்பதைத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு: பதிவிறக்கியதை அகற்று என்பதைத் தேர்வுசெய்தால், தலைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கமும் தரவும் இனி உங்கள் iPhoneஇல் சேமிக்கப்படாது. தலைப்பை மீண்டும் பதிவிறக்க,
-ஐத் தட்டி “பதிவிறக்கு” என்பதைத் தட்டவும். “புத்தகத்தை மறை” என்பதைத் தேர்வுசெய்தால், அந்தப் புத்தகம் உங்கள் லைப்ரரி அல்லது தொகுப்புகளில் தோன்றாது. புத்தகங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்களைக் காட்ட, முகப்பில் உள்ள உங்கள் கணக்கு ஐகான் மீது தட்டி, “மறைந்துள்ள வாங்குதல்களை நிர்வகி” என்பதைத் தட்டவும்.
ஒரு புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு உங்கள் iPhone சாதனத்தில் இருந்து பதிவிறக்கங்களைத் தானாகவே அகற்றலாம். “லைப்ரரி” என்பதைத் தட்டி திரையின் மேல் வலதுபக்கத்தில் உள்ள -ஐத் தட்டவும். பதிவிறக்கங்களை அகற்று என்பதைத் தட்டி “முடிந்ததும் தானாக அகற்று” என்பதைத் தட்டவும்.
தொகுப்பை நீக்குதல்
உங்கள் iPhone சாதனத்தில் புத்தகங்கள்
செயலிக்குச் செல்லவும்.
லைப்ரரியைத் தட்டி “தொகுப்புகள்” என்பதைத் தட்டவும்.
நீங்கள் நீக்க விரும்பும் தொகுப்பில் இடதுபக்கம் ஸ்வைப் செய்து “நீக்கு” என்பதைத் தட்டவும்.
குறிப்பு: தொகுப்பை நீக்கினால் அதில் உள்ள புத்தகங்கள் அல்லது ஆடியோ புத்தகங்கள் நீக்கப்படாது. அவை உங்கள் லைப்ரரியில் இருக்கும்.