iPhone சாதனத்தில் உள்ள “வாய்ஸ் மெமோ” செயலியில் பதிவைத் திருத்துதல் அல்லது நீக்குதல்
எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் பதிவுகளை மேம்படுத்தலாம். பகுதிகளை அகற்றலாம், பகுதிகளுக்காக பதிவு செய்யலாம், அல்லது முழு பதிவையும் மாற்றலாம். இனி உங்களுக்குத் தேவையில்லாத பதிவையும் நீக்கலாம்.
குரல் பதிவைத் திருத்துதல்
உங்கள் iPhoneஇல் உள்ள வாய்ஸ் மெமோ
(யுட்டிலிட்டிகள் கோப்புறையில் உள்ளது) செயலிக்குச் செல்லவும்.
பதிவுகளின் பட்டியலில், நீங்கள் திருத்த விரும்பும் பதிவைத் தட்டி,
-ஐத் தட்டிய பிறகு “பதிவைத் திருத்து” என்பதைத் தட்டவும்.
மேலே வலது பக்கத்தில்
-ஐத் தட்டி, நீங்கள் வைத்திருக்க அல்லது நீக்க விரும்புவதைத் தேர்ந்தெடுத்துச் சேர்க்க மஞ்சள் நிற ட்ரிம் ஹேண்டிலை இழுக்கவும்.
இன்னும் துல்லியமாக திருத்த, அலைவடிவத்தைப் பெரிதாக்கிப் பார்க்க பின்ச் செய்யலாம்.
நீங்கள் தேர்ந்தெடுத்ததைச் சரிபார்க்க
-ஐத் தட்டவும்.
தேர்ந்தெடுத்ததை வைத்திருக்க (மீதமுள்ள பதிவை நீக்கிவிட்டு), ட்ரிம் என்பதைத் தட்டவும் அல்லது தேர்ந்தெடுத்ததை நீக்க, “நீக்கு” என்பதைத் தட்டவும்.
பயன்படுத்து என்பதைத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
அசல் பதிவில் திருத்தம் செய்ய “பதிவைச் சேமி” என்பதைத் தட்டவும் அல்லது திருத்தப்பட்ட பதிப்பை புதிய பதிப்பாகச் சேமிக்க “புதிய பதிவாகச் சேமி” (அசல் பதிவு அப்படியே இருக்கும்) என்பதைத் தட்டவும்.
பதிவை மாற்றுதல்
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வாய்ஸ்மெமோ
(யுட்டிலிடிகள் கோப்புறையில் உள்ளது) செயலிக்குச் செல்லவும்.
பதிவுகளின் பட்டியலில், நீங்கள் மாற்ற விரும்பும் பதிவைத் தட்டி,
-ஐத் தட்டிய பிறகு, “பதிவைத் திருத்து” என்பதைத் தட்டவும்.
புதிய ஆடியோவைப் பதிவுசெய்யத் தொடங்கும் இடத்தில் பிளேஹெட்டை வைக்க அலைவடிவத்தை இழுக்கவும்.
மேலும் துல்லியமாக வைக்க அலைவடிவத்தில் பெரிதாக்கிப் பார்க்க, பின்ச் செய்யலாம்.
பதிவைத் தொடங்க “மாற்று” என்பதைத் தட்டவும் (நீங்கள் பதிவுசெய்யும்போது அலைவடிவம் சிவப்பு நிறமாக மாறும்).
இடைநிறுத்த,
-ஐத் தட்டவும். தொடர்வதற்கு, “தொடர்க” என்பதைத் தட்டவும்.
உங்கள் பதிவைச் சரிபார்க்க
-ஐத் தட்டவும்.
“முடிந்தது” என்பதைத் தட்டி, அசல் பதிவை மாற்ற “பதிவைச் சேமி” என்பதை அல்லது மாற்றங்களைச் சேமித்து அதை ஒரு புதிய பதிவாகச் சேமிக்க (அசல் பதிவு அப்படியே இருக்கும்) “புதிய பதிவாகச் சேமி” என்பதைத் தட்டவும்.
பதிவுசெய்ததை நீக்குதல்
உங்கள் iPhoneஇல் உள்ள வாய்ஸ் மெமோ
(யுட்டிலிட்டிகள் கோப்புறையில் உள்ளது) செயலிக்குச் செல்லவும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
பதிவு செய்தவை பட்டியலில், நீங்கள் நீக்க விரும்பும் பதிவைத் தட்டி,
-ஐத் தட்டவும்.
பதிவுகளின் பட்டியலுக்கு மேலே உள்ள “திருத்து” என்பதைத் தட்டி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிவுகளைத் தேர்ந்தெடுத்து,
-ஐத் தட்டவும்.
நீக்கப்பட்ட பதிவுகள், சமீபத்தில் நீக்கப்பட்டவை கோப்புறைக்கு நகர்த்தப்படும். அங்கு அவை இயல்புநிலையில் 30 நாட்களுக்கு வைக்கப்படும். நீக்கிய பதிவுகளை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பதில் மாற்றங்களைச் செய்ய, அமைப்புகள் > செயலிகள் > வாய்ஸ் மெமோ > “நீக்கியவற்றை அழி” என்பதற்குச் சென்று ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
நீக்கப்பட்ட பதிவை மீட்டெடுத்தல் அல்லது அழித்தல்
உங்கள் iPhoneஇல் உள்ள வாய்ஸ் மெமோ
(யுட்டிலிட்டிகள் கோப்புறையில் உள்ளது) செயலிக்குச் செல்லவும்.
“சமீபத்தில் நீக்கியவை” கோப்புறையைத் தட்டி, நீங்கள் மீட்டெடுக்க அல்லது அழிக்க விரும்பும் பதிவைத் தட்டவும்.
“சமீபத்தில் நீக்கியவை” கோப்புறையைப் பார்க்கவில்லை என்றால், மேலே இடதுபக்கம் உள்ள
-ஐத் தட்டவும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவை மீட்டெடுக்க: “மீட்டெடு” என்பதைத் தட்டவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவை நீக்க: “நீக்கு” என்பதைத் தட்டவும்.
சமீபத்தில் நீக்கப்பட்ட கோப்புறையில் உள்ள அனைத்தையும் மீட்டெடுக்க: சமீபத்தில் நீக்கப்பட்ட பட்டியலுக்கு மேலே உள்ள “திருத்து” என்பதைத் தட்டி, “அனைத்தையும் மீட்டெடு” என்பதைத் தட்டவும்.
சமீபத்தில் நீக்கப்பட்ட கோப்புறையில் உள்ள அனைத்தையும் நீக்க: சமீபத்தில் நீக்கப்பட்ட பட்டியலுக்கு மேலே உள்ள “திருத்து” என்பதைத் தட்டி, “அனைத்தையும் நீக்கு” என்பதைத் தட்டவும்.