iPhoneஇல் உள்ள மேப்ஸ் செயலியில் டிரைவிங் வழிகளைப் பெறுதல்
சேருமிடத்தை அடைவதற்கான விளக்கமான டிரைவிங் வழிகளை நீங்கள் பெறலாம்.
குறிப்பிட்ட சில நகரங்களில் வாகனம் ஓட்டும்போது, ஜீப்ரா கிராஸிங், சைக்கிள் பாதைகள், கட்டடங்கள் ஆகியவற்றுக்கான துல்லியமான விவரங்களும், சிக்கலான சந்திப்புகளை நீங்கள் நெருங்கும்போது சரியான லேனைக் கண்டறிய உதவக்கூடிய பாதைக் காட்சியும் உங்களுக்குக் காட்டப்படும் (ஆதரிக்கப்படும் மாடல்கள்).
குறிப்பு: குறிப்பிட்ட சில பகுதிகளில், படிப்படியான வழி அறிவிப்புகளும் பல நிறுத்தஙகளுக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கிறது. நாடு மற்றும் வட்டாரத்தைப் பொறுத்து அம்சங்கள் மாறுபடும். iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.
டிரைவிங் வழிகளைப் பெறுதல்
உங்கள் iPhoneஇல் மேப்ஸ்
செயலிக்குச் செல்லவும்.
மேப்பில் ஏதேனும் ஒரு இடத்தில் தொட்டுப் பிடித்திருக்கவும் அல்லது தேடல் புலத்தில் ஒரு முகவரியை உள்ளிட்டு, வழிகள் அல்லது
-ஐத் தட்டவும்.
நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கான வழித்தடத்தைப் பெற, “செல்” அல்லது “வழிகள்” என்பதைத் தட்டவும்.
Siri: இதுபோன்ற எதையேனும் கூட நீங்கள் சொல்லலாம்: “Give me driving directions home.” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.
டிரைவிங் ஃபோகஸ்” ஆன் செய்யப்பட்டிருந்தாலும் iPhone தானாக லாக் செய்யப்பட்டாலும், மேப்ஸ் செயலி திரையிலேயே காட்டப்படுவதுடன் வழிகளையும் தொடர்ந்து அறிவிக்கும். வேறொரு செயலியை நீங்கள் திறந்தாலும், படிப்படியான வழிகள் காட்டப்படும். (வேறொரு செயலியில் இருந்து மேப்ஸ் செயலிக்குச் செல்ல, திரையின் மேற்பகுதியில் உள்ள வழிகளுக்கான பேனரைத் தட்டவும் அல்லது ஸ்டேட்டஸ் பாரில் உள்ள வழிசெலுத்தல் இண்டிகேட்டர் -ஐத் தட்டவும்.)
எதிர்காலப் புறப்பாடு அல்லது வருகைக்கான பயண நேரத்தைக் கணக்கிடுதல்
உங்கள் iPhoneஇல் மேப்ஸ்
செயலிக்குச் செல்லவும்.
பயண வழிகளைப் பெறவும் (மேலே காட்டப்பட்டுள்ளன).
“இப்போது” என்பதைத் தட்டிய பிறகு, புறப்பாடு அல்லது வருகைக்கான நேரத்தையோ தேதியையோ தேர்ந்தெடுத்து, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
கணிக்கப்பட்ட டிராஃபிக்கின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட பயண நேரம் மாறக்கூடும்.
சுங்கச்சாவடிகள் அல்லது நெடுஞ்சாலைகளைத் தவிர்த்தல்
உங்கள் iPhoneஇல் மேப்ஸ்
செயலிக்குச் செல்லவும்.
பயண வழிகளைப் பெறவும் (மேலே காட்டப்பட்டுள்ளன).
“தவிர்” என்பதைத் தட்டி (சேருமிடத்திற்குக் கீழ்), உங்கள் விருப்பங்களைத் தேர்வுசெய்த பிறகு “பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.
திசைகாட்டி அல்லது வேக வரம்பைக் காட்டுதல் அல்லது மறைத்தல்
அமைப்புகள்
> செயலிகள் > மேப்ஸ் என்பதற்குச் செல்லவும்.
“டிரைவிங்” என்பதைத் தட்டிய பிறகு (சேருமிடத்திற்குக் கீழ்), திசைகாட்டி அல்லது வேக வரம்பு என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.