iPhone சாதனத்தில் உள்ள வாலெட் செயலியில் உங்கள் Apple கணக்கு பேலன்ஸைச் சரிபார்த்தல்
வாலெட் செயலியில் உங்கள் Apple கணக்கின் பேலன்ஸைச் சரிபார்க்கலாம், பணத்தைச் சேர்க்கலாம், Apple கிஃப்ட் கார்டுகளை ரிடீம் செய்யலாம். தயாரிப்புகள், ஆக்சஸரிகள், கேம்கள், செயலிகள் ஆகியவற்றுடன் iCloud+, Apple Music போன்ற சந்தாக்களுடன் மேலும் பலவற்றையும் வாங்க உங்கள் Apple கணக்கு பேலன்ஸைப் பயன்படுத்தலாம். Apple Store (அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை) அல்லது apple.comஇல் பணம் செலுத்துவதற்கு விரைவான, வசதியான வழியாக உங்கள் Apple கணக்கு பேலன்ஸைப் பயன்படுத்தலாம்.
Apple வாலெட்டில் Apple கணக்கைச் சேர்த்தல் மற்றும் கணக்கு பேலன்ஸைப் பார்வையிடுதல்
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வாலெட்
செயலிக்குச் செல்லவும்.
-ஐத் தட்டி, “Apple கணக்கைச் சேர்” என்பதைத் தட்டவும்.
கணக்கு பேலன்ஸ் கார்டுக்குக் கீழே காட்டப்படும்.
உங்கள் Apple கணக்கு பேலன்ஸில் பணத்தைச் சேர்த்தல்
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வாலெட்
செயலிக்குச் செல்லவும்.
Apple கணக்கைத் தட்டி, “பணத்தைச் சேர்” என்பதைத் தட்டவும்.
தொகையைத் தேர்ந்தெடுத்து, பேமெண்ட் செய்ய திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Apple Gift Card அல்லது குறியீட்டை ரீடிம் செய்தல்
நீங்கள் Apple Gift Card அல்லது குறியீட்டைப் பெறும்போது, உங்கள் Apple கணக்கு பேலன்ஸில் நிதியைச் சேர்க்கலாம்.
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வாலெட்
செயலிக்குச் செல்லவும்.
Apple கணக்கைத் தட்டி,
-ஐத் தட்டி, “ரிடீம் செய்க” என்பதைத் தட்டவும்.
“கேமராவைப் பயன்படுத்து” என்பதைத் தட்டி, கேமரா ஃப்ரேமுக்குள் பரிசு கார்டு தோன்றும் வகையில் iPhoneஐ சரியான இடத்தில் நிலையாக வைக்கவும்.
இல்லையெனில், “குறியீட்டை நேரடியாக உள்ளிடு” என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
Apple Storeஇல் உங்கள் Apple கணக்கு பேலன்ஸைப் பயன்படுத்துதல்
Apple Storeஇல் செக்-அவுட்டின்போது (அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை) Apple Payஐப் பயன்படுத்தி, உங்கள் Apple கணக்கு பேலன்ஸை செலுத்தலாம்.
உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வாலெட்
செயலிக்குச் செல்லவும்.
Apple கணக்கைத் தட்டி, பக்கவாட்டு பட்டனை இருமுறை கிளிக் செய்யவும்.
Face ID, Touch ID அல்லது உங்கள் பாஸ்கோடு மூலம் அங்கீகரிக்கவும்.
திரையில் “முடிந்தது” அல்லது செக்மார்க்கைப் பார்க்கும் வரை, உங்கள் iPhoneஇன் மேல்பகுதியை கார்டு ரீடருக்கு அருகில் பிடித்துக் கொள்ளவும்.