iPhone நிலை ஐகான்களின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுதல்
திரையின் மேற்புறத்தில் உள்ள ஸ்டேட்டஸ் பாரில் உள்ள ஐகான்கள் iPhone பற்றிய தகவல்களை வழங்குகின்றன. Face ID உடன் கூடிய iPhoneஇல், கட்டுப்பாட்டு மையத்தின் மேலே கூடுதல் ஸ்டேட்டஸ் ஐகான்கள் இருக்கும்.
குறிப்பு: நீங்கள் ஃபோகஸை ஆன் செய்தால், அதன் ஐகான் ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும்.
நிலை ஐகான் | இதன் அர்த்தம் என்ன? | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | Wi-Fi. Wi-Fi நெட்வொர்க் மூலம் iPhone இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கிடைக்கக்கூடிய நெட்வொர்க்குகளைப் பார்த்து Wi-Fi உடன் இணைத்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | செல் சிக்னல். பார்களின் எண்ணிக்கை உங்கள் மொபைல் சேவையின் சிக்னல் வலிமையைக் குறிக்கிறது. சிக்னல் இல்லை என்றால், “சேவை இல்லை” என்று காட்டப்படும். | ||||||||||
![]() | இரண்டு செல் சிக்னல்கள். இரண்டு SIMஐ ஆதரிக்கும் மாடல்களில், பார்களின் மேல் வரிசை நீங்கள் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துகிற லைனின் சிக்னல் வலிமையைக் குறிக்கிறது. பார்களின் கீழ் வரிசை உங்கள் மற்றொரு லைனின் சிக்னல் வலிமையைக் குறிக்கிறது. சிக்னல் இல்லை என்றால், “சேவை இல்லை” என்று காட்டப்படும். தொடர்புடைய மொபைல் சேவைத் திட்டத்தின் லேபிள்கள் மற்றும் நெட்வொர்க் வழங்குநர் பெயர்களுடன் ஸ்டேட்டஸ் ஐகான்களைப் பார்க்க, கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்கவும். | ||||||||||
![]() | விமானப் பயன்முறை. விமானப் பயன்முறை ஆன் செய்யப்பட்டுள்ளது—உங்களால் ஃபோன் அழைப்புகளைச் செய்ய முடியாது, மற்ற வயர்லெஸ் செயல்பாடுகள் முடக்கப்படலாம். பயணத்திற்கான அமைப்புகளைத் தேர்வுசெய்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | 5G. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G UC நெட்வொர்க் கிடைக்கிறது, ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (எல்லா நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). iPhoneஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும். | ||||||||||
![]() | 5G UC. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G UC நெட்வொர்க் கிடைக்கிறது, இதில் உங்கள் நெட்வொர்க் வழங்குநருடைய 5Gஇன் அதிக அலைவரிசைப் பதிப்பும் இருக்கும். ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (எல்லா நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). iPhoneஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும். | ||||||||||
![]() | 5G+. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G+ நெட்வொர்க் கிடைக்கிறது, இதில் உங்கள் நெட்வொர்க் வழங்குநருடைய 5Gஇன் அதிக அலைவரிசைப் பதிப்பும் இருக்கும். ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (எல்லா நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). iPhoneஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும். | ||||||||||
![]() | 5G UW. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G UW நெட்வொர்க் கிடைக்கிறது, இதில் உங்கள் நெட்வொர்க் வழங்குநருடைய 5Gஇன் அதிக அலைவரிசைப் பதிப்பும் இருக்கும். ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (எல்லா நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). iPhoneஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும். | ||||||||||
![]() | 5G E. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G E நெட்வொர்க் கிடைக்கிறது, மேலும் iPhoneஐ அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (எல்லா நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | LTE. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் LTE நெட்வொர்க் கிடைக்கிறது, மேலும் iPhoneஐ அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (எல்லா நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | UMTS. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 4G UMTS (GSM) அல்லது LTE நெட்வொர்க் (நெட்வொர்க் வழங்குநரைப் பொறுத்து) கிடைக்கிறது, மேலும் iPhoneஐ அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (எல்லா நாடுகளிலும் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | UMTS/EV-DO. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 3G UMTS (GSM) அல்லது EV-DO (CDMA) நெட்வொர்க் கிடைக்கிறது, மேலும் iPhoneஐ அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம். மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | EDGE. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் EDGE (GSM) நெட்வொர்க் கிடைக்கிறது, மேலும் iPhoneஐ அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம். மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | GPRS/1xRTT. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் GPRS (GSM) அல்லது 1xRTT (CDMA) நெட்வொர்க் கிடைக்கிறது, மேலும் iPhoneஐ அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம். மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | SOS மட்டும். உங்கள் மொபைல் சேவை வழங்குநரிடமிருந்து முழுச் சேவையும் கிடைக்கவில்லை என்றாலும் பிற நெட்வொர்க் வழங்குநர்களின் நெட்வொர்க்குகள் மூலம் அவசரகால அழைப்புகளைச் செய்யலாம் (எல்லா நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது). அவசரகாலச் சேவைகளைத் தொடர்புகொள்ள SOSஐப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | சாட்டிலைட் அம்சங்கள். “அவசரகால SOS”, “இடம் அறி”, “சாலையோர உதவி”, “சாட்டிலைட் மூலம் மெசேஜ்கள்” ஆகியவை நீங்கள் உள்ள இடத்தில் கிடைக்கும் (iPhone 14 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில் ஆதரிக்கப்படும்). சாட்டிலைட் மூலம் அவசரகால SOS அம்சத்தைப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | Wi-Fi அழைப்பு. Wi-Fi அழைப்பைச் செய்யும் வகையில் iPhone அமைக்கப்பட்டுள்ளது. ஐகானுக்கு அடுத்து நெட்வொர்க் வழங்குநர் பெயரையும் iPhone காட்டுகிறது. Wi-Fiஐப் பயன்படுத்தி அழைப்புகளைச் செய்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் இணைப்பு. மற்றொரு சாதனத்தின் தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் மூலம் iPhone இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் ஒன்றில் இணைத்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | VPN. VPNஐப் பயன்படுத்தி நெட்வொர்க்குடன் iPhone இணைக்கப்பட்டுள்ளது. | ||||||||||
![]() | வழிசெலுத்தல். iPhone படிப்படியான வழிகளை வழங்குகிறது. டிரைவிங் வழிகளைப் பெறுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | தனிப்பட்ட ஹாட்ஸ்பாட். iPhone தனிப்பட்ட ஹாட்ஸ்பாட்டை வழங்குகிறது. தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் மூலம் உங்கள் இணைய இணைப்பைப் பகிர்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | ஃபோன் அழைப்பு. iPhone ஃபோன் அழைப்பில் உள்ளது. ஃபோன் அழைப்புகளைச் செய்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | FaceTime. iPhone FaceTime அழைப்பில் உள்ளது. FaceTime அழைப்புகளைச் செய்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | திரைப் பதிவு. iPhone உங்கள் திரையைப் பதிவுசெய்கிறது. திரையைப் பதிவுசெய்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | கேமரா பயன்பாட்டில் உள்ளது. ஒரு செயலி உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது. உங்கள் iPhoneஇல் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோனை எந்தெந்தச் செயலிகள் அணுகலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | மைக்ரோஃபோன் பயன்பாட்டில் உள்ளது. ஒரு செயலி உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது. உங்கள் iPhoneஇல் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோனை எந்தெந்தச் செயலிகள் அணுகலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | ஒத்திசைத்தல். iPhone உங்கள் கம்ப்யூட்டருடன் ஒத்திசைக்கப்படுகிறது. iPhoneஐ மற்ற சாதனங்களுடன் ஒத்திசைத்தல் கட்டுரையைப் பார்க்கவும். | ||||||||||
![]() | நெட்வொர்க் செயல்பாடு. நெட்வொர்க் செயல்பாடு உள்ளது என்பதைக் காட்டுகிறது. சில மூன்றாம் தரப்புச் செயலிகளும் இதைப் பயன்படுத்தி செயலில் உள்ள செயலாக்கத்தைக் காட்டலாம். இணையத்துடன் இணைத்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | அழைப்பை ஃபார்வேர்டு செய்தல். அழைப்பை ஃபார்வேர்டு செய்தல் அமைக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஃபார்வேர்டு செய்தலை அமைத்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | லாக் செய்தல். iPhone லாக் செய்யப்பட்டுள்ளது. iPhoneஐ வேக் செய்து அன்லாக் செய்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | தொந்தரவு செய்ய வேண்டாம். “தொந்தரவு செய்ய வேண்டாம்” அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளது. ”ஃபோகஸ்” அம்சத்தை ஆன் செய்தல் அல்லது திட்டமிடுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | செங்குத்துத் திசையமைப்பை லாக் செய்தல். iPhone திரை செங்குத்துத் திசையமைப்பில் லாக் செய்யப்பட்டுள்ளது. திரைத் திசையமைப்பை மாற்றுதல் அல்லது லாக் செய்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | இருப்பிடச் சேவைகள். ஒரு செயலி இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்துகிறது. உங்கள் iPhoneஇன் இருப்பிடத்தை எந்தெந்தச் செயலிகள் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | அலாரம். அலாரம் அமைக்கப்பட்டுள்ளது. அலாரத்தை அமைத்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | ஹெட்ஃபோன்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆன் செய்யப்பட்டு Bluetooth வரம்பிற்குள் உள்ள Bluetooth® ஹெட்ஃபோன்களுடன் iPhone இணைக்கப்படும். Bluetooth ஹெட்ஃபோன்களை அமைத்து அவற்றில் கேட்டல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | பேட்டரி. iPhone பேட்டரி அளவைக் காட்டுகிறது. ஐகான் மஞ்சள் நிறத்தில் இருந்தால் குறைந்த ஆற்றல் பயன்முறை ஆனில் உள்ளது என்று அர்த்தம். iPhone பேட்டரி சதவீதத்தைக் காட்டுதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | பேட்டரி சார்ஜ் ஆகிறது. iPhone பேட்டரி சார்ஜ் ஆகிறது. பேட்டரியை சார்ஜ் செய்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | Bluetooth பேட்டரி. இணைக்கப்பட்ட Bluetooth சாதனத்தின் பேட்டரி அளவைக் காட்டுகிறது. Bluetooth ஆக்சஸரீக்களுடன் இணைத்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | AirPlay. AirPlay ஆனில் உள்ளது. ஸ்ட்ரீம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | குரல் கட்டுப்பாடு. அமைப்புகள் > அணுகல்தன்மை என்பதில் “குரல் கட்டுப்பாடு” அம்சம் ஆன் செயப்பட்டுள்ளதால் iPhoneஐப் பயன்படுத்த உங்கள் குரலைப் பயன்படுத்தலாம். | ||||||||||
![]() | TTY. மென்பொருள் RTT / TTY அல்லது வன்பொருள் TTY ஆன் செய்யப்பட்டுள்ளது. RTT, TTY ஆகியவற்றைஅமைத்தல் மற்றும் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | CarPlay. CarPlay உடன் iPhone இணைக்கப்பட்டுள்ளது. CarPlay உடன் இணைத்தல் பிரிவைப் பார்க்கவும். | ||||||||||
![]() | Siri Eyes Free. உங்கள் காரில் Siriஇடம் ஒரு கேள்வியை அல்லது கோரிக்கையைக் கேட்கலாம். உங்கள் காரில் Siriஐப் பயன்படுத்துதல்-ஐப் பார்க்கவும். |