iPhone 14 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் “விபத்துக் கண்டறிதல்” அம்சத்தை நிர்வகித்தல்
“விபத்துக் கண்டறிதல்” என்றால் என்ன?
உங்கள் iPhone 14 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள் (ஏதேனும் மாடல்) மோசமான கார் விபத்தைக் கண்டறிந்தால், அது உங்களை அவசரகாலச் சேவைகளுடன் இணைப்பதற்கும் உங்கள் அவசரகாலச் தொடர்புகளுக்கு அதுகுறித்துத் தெரிவிப்பதற்கும் உதவும்.
“விபத்துக் கண்டறிதல்” அம்சம் எவ்வாறு செயல்படுகிறது?
மோசமான கார் விபத்தை உங்கள் iPhone கண்டறிந்தால், அது ஓர் எச்சரிக்கையைக் காட்டும், அதை நீங்கள் ரத்துசெய்யாவிட்டால் 20 விநாடிகளுக்குப் பிறகு அவசரகால ஃபோன் அழைப்பைத் தானாகத் தொடங்கும். நீங்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தால், அவசரகாலச் சேவைகளுக்கான ஆடியோ மெசேஜை உங்கள் iPhone பிளே செய்யும், இது நீங்கள் மோசமான விபத்துக்கு உள்ளாகியிருப்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும், மேலும் தோராயமான தேடல் பரப்பளவுடன் கூடிய உங்கள் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை மதிப்புகளை அவர்களுக்கு வழங்கும்.
ஒரு விபத்து கண்டறியப்பட்டால், “விபத்துக் கண்டறிதல்” அம்சம் பிற வழிகளில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள அவசரகால அழைப்புகள் எதையும் ஓவர் ரைடு செய்யாது.
மொபைல் அல்லது Wi-Fi இணைப்பு இல்லாத இடத்தில் நீங்கள் மோசமான கார் விபத்தில் சிக்கி சுயநினைவு இல்லாமல் இருந்தால், சாட்டிலைட் மூலம் அவசரகால SOS அம்சம் கிடைக்கக்கூடிய இடங்களில் அதைப் பயன்படுத்தி அவசரகாலச் சேவைகளைத் தொடர்புகொள்ள iPhone முயலும்.
“விபத்துக் கண்டறிதலை” ஆன் அல்லது ஆஃப் செய்தல்
“விபத்துக் கண்டறிதல்” இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். மோசமான கார் விபத்துக்குப் பிறகு எச்சரிக்கைகளையும் தானியங்குஅவசரகால அழைப்புகளையும் Apple செய்வதை ஆஃப் செய்ய, அமைப்புகள் > அவசரகால SOS என்பதற்குச் சென்று “மோசமான விபத்தைக் கண்டறியும்போது அழை” அம்சத்தை ஆஃப் செய்யவும். உங்கள் சாதனத்தில் விபத்துகளைக் கண்டறிவதற்கான மூன்றாம் தரப்பு செயலிகள் பதிவுசெய்யப்பட்டிருந்தால், அவற்றுக்கும் அறிவிக்கப்படும்.
உங்களிடம் CarPlay அல்லது Apple Watch இருந்தால்
உங்கள் iPhoneஇல் “விபத்து கண்டறிதல் சேவை” ஆன் செய்யப்பட்டு, CarPlay மூலம் உங்கள் வாகனத்துடன் அது இணைக்கப்பட்டிருந்தால், “விபத்து கண்டறிதல்” அம்சங்கள் (அவசரகாலச் சேவைகளை டயல் செய்வது) உங்கள் iPhone வழியாகச் செயல்படுத்தப்படும்.
சம்பவத்தின்போது நீங்கள் Apple Watch அணிந்திருந்தால், அவசரகாலச் சேவைகளை iPhone டயல் செய்யும், ஆனால் “விபத்துக் கண்டறிதல்” அம்சங்கள் Apple Watch மூலம் செயல்படுத்தப்படும்.
மேலும் தகவல்களுக்கு, விபத்துக்குள்ளான சமயத்தில் உதவியை அழைப்பதற்காக, iPhone அல்லது Apple Watchஇல் “விபத்துக் கண்டறிதல்” அம்சத்தைப் பயன்படுத்துதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.