iPhoneஇல் உள்ள iMessage பற்றிய அறிமுகம்
iMessage என்பது ஒரு பாதுகாப்பான மெசேஜிங் சேவையாகும். iPhone, iPad, Mac, Apple Watch, Apple Vision Pro ஆகியவற்றில் உள்ள மெசேஜஸ் செயலியில் மெசேஜ்களை அனுப்பவும் பெறவும் இதைப் பயன்படுத்தலாம்.
iMessage பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணுக்கு யாராவது மெசேஜ் அனுப்பினால், அந்த மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களைப் பெறும்படி அமைக்கப்பட்டுள்ள உங்களின் எல்லா Apple சாதனங்களிலும் அந்த மெசேஜைப் பெறுவீர்கள். உங்கள் சாதனங்களில் இருந்து அனுப்பப்படும் அனைத்து மெசேஜ்களும் iMessage உரையாடலில் காட்டப்படும். எனவே நீங்கள் எங்கிருந்தாலும் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும்.
சில iMessage அம்சங்களைப் பயன்படுத்த உங்களுக்கு Apple கணக்கு தேவை. நீங்கள் iTunes Store அல்லது App Storeஇல் இருந்து வாங்குதல்களைச் செய்திருந்தால் அல்லது iCloudஇல் உள்நுழைந்திருந்தால் உங்களிடம் Apple கணக்கு உள்ளது என்று அர்த்தம்.

iMessageஇல் தகவல்தொடர்பு செய்வது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
Wi-Fi அல்லது மொபைல் சேவை மூலம் நீங்கள் மெசேஜ்களை அனுப்பலாம்.
iMessage பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மெசேஜ்கள், உங்கள் மொபைல் மெசேஜிங் திட்டத்தில் SMS, MMS அல்லது RCSக்கு ஒதுக்கப்பட்டுள்ள மெசேஜ் வரம்புகளிலிருந்து கழிக்கப்படாது. ஆனால் மொபைல் டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
Apple சாதனத்தில் iMessageஐப் பயன்படுத்தும் மற்றவர்களுடன் நீங்கள் தகவல்தொடர்பு செய்யும்போது, மெசேஜ்கள் நீல நிற பபுள்களில் காட்டப்படும். (SMS, MMS மற்றும் RCS மெசேஜ்கள் பச்சை நிற பபுள்களில் காட்டப்படும்.)
மெசேஜை அனுப்புவதற்கான பட்டன்
நீல நிறத்தில் இருந்தால் உங்கள் மெசேஜ் iMessage மூலம் அனுப்பப்படும் என்று அர்த்தம்; அனுப்புவதற்கான பட்டன் பச்சை நிறத்தில் இருந்தால் அந்த மெசேஜ் SMS, MMS, RCS அல்லது உங்கள் மொபைல் சேவை மூலம் அனுப்பப்படும் என்று அர்த்தம்.
நீங்கள் வேறொருவருடன் உரையாடும்போது, மெசேஜை டைப் செய்கிறீர்களா என்பதை ஒருவருக்கொருவர் பார்க்க முடியும். நீங்கள் உரையாடும் நபர் படித்ததற்கான உறுதிப்படுத்தலை ஆன் செய்திருந்தால், அவர்கள் உங்கள் மெசேஜைத் திறந்துள்ளாரா என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
ஸ்டைல்கள், வரைபடங்கள், Memoji, இன்லைன் பதில்கள், திருத்துதல், அனுப்பியதைச் செயல்தவிர்த்தல், திட்டமிடுதல், கூட்டுப்பணியாற்றுதல், குழு உரையாடல் மேலாண்மை போன்ற பலதரப்பட்ட செயலிகளையும் அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் Tapbacks மூலம் பதிலளிக்கும்போதும், ஆடியோ மெசேஜ்களை அனுப்பும்போதும், சாட்டிலைட் மூலம் மெசேஜ் அனுப்பும்போதும் பல வகையான விருப்பத்தேர்வுகள் உள்ளன.
நீங்கள் iMessage பயன்படுத்தும்போது, ஸ்பேம் அல்லது ஜங்க் மெசேஜ்களை Appleக்குப் புகாரளிக்கலாம்.
பாதுகாப்பிற்காக, iMessage பயன்படுத்தி அனுப்பப்படும் மெசேஜ்கள் அனைத்தும் முழுவதுமாக என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும், மேலும் நீங்கள் கான்டாக்ட் கீ சரிபார்ப்பு அம்சத்தையும் பயன்படுத்தலாம்.