iOS 18
iPhoneஇல் வார்த்தை அளவையும் ஜூம் அமைப்பையும் பிரத்தியேகப்படுத்துதல்
உங்கள் iPhone டிஸ்ப்ளேவில் வார்த்தையின் அளவை அதிகரிக்கலாம், வார்த்தையைத் தடிமனாக்கலாம், “டிஸ்ப்ளே ஜூம்” மூலம் திரையைப் பெரிதாக்கிப் பார்க்கலாம்.
iPhoneஇல் உரை அளவை அதிகரித்தல்
அமைப்புகள்
> டிஸ்ப்ளே & ஒளிர்வு என்பதற்குச் செல்லவும்.
“வார்த்தை அளவு” என்பதைத் தட்டவும்.
வார்த்தையின் அளவை மாற்ற ஸ்லைடரை இடது அல்லது வலதுபுறமாக இழுக்கவும்.
iPhoneஇல் உரையைத் தடிமனாக்குதல்
அமைப்புகள்
> டிஸ்ப்ளே & ஒளிர்வு என்பதற்குச் செல்லவும்.
“தடிமனான வார்த்தை” என்பதை ஆன் செய்யவும்.
முழு iPhone திரையையும் பெரிதாக்கிப் பார்த்தல்
ஆதரிக்கப்படும் மாடல்களில், “டிஸ்ப்ளே ஜூம்” அம்சத்தின் மூலம் iPhone திரையைப் பெரிதாக்கிப் பார்க்கலாம்.
அமைப்புகள்
> டிஸ்ப்ளே & ஒளிர்வு என்பதற்குச் செல்லவும்.
“டிஸ்ப்ளே ஜூம்” எனபதைத் தட்டி “பெரிய வார்த்தை” என்பதைத் தட்டவும்.
“முடிந்தது” என்பதைத் தட்டி “ஜூம்டு அமைப்பைப் பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.
இவற்றையும் பாருங்கள்iPhone திரையில் பெரிதாக்குதல்iPhoneஇல் உரையைப் படிப்பதை எளிதாக்குதல்