உங்கள் சிறாரின் சாதனத்தில் உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்களும் வீடியோக்களும் உள்ளனவா எனப் பார்த்தல்
“தகவல்தொடர்புப் பாதுகாப்பு” அம்சத்தின் மூலம் உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க முடியாதபடி அல்லது பகிர முடியாதபடி உங்கள் சிறாரை நீங்கள் பாதுகாக்கலாம். தகவல்தொடர்புப் பாதுகாப்பு அம்சம், அனுப்பப்பட்ட அல்லது பெறப்பட்ட படங்கள் அல்லது வீடியோக்களில் நிர்வாணம் தொடர்பான உள்ளடக்கம் இருப்பதைக் கண்டறிந்தால், அதை மங்கலாக்கி, உதவி பெறுவதற்கான விருப்பங்களுடன் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும். சாதனத்தைப் பொறுத்து மெசேஜஸ், AirDrop, தொடர்புகள் போன்ற செயலிகளில் “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” அம்சம் செயல்படும். பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களில் கண்டறியப்படும் கொடூரம் அல்லது வன்முறை உள்ளடக்கமும் மங்கலாக்கப்படும்.
குறிப்பு: 18 வயதிற்குட்பட்ட சிறார்களைப் பொறுத்தவரை (நாடு அல்லது வட்டாரத்திற்கு ஏற்ப வயது மாறுபடும்), “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” அம்சம் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” குறித்த கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் சிறாரின் Apple சாதனத்தில் தகவல்தொடர்புப் பாதுகாப்பு பற்றி என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
உங்கள் சிறாரின் சாதன அமைப்புகளைத் திறக்க:
iPhone அல்லது iPadஇல்: அமைப்புகள் செயலிக்குச் சென்று, “குடும்பம்” என்பதைத் தட்டி, பின்னர் உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.
Mac சாதனத்தில்: சிஸ்டம் அமைப்புகளுக்குச் சென்று, “குடும்பம்” என்பதை கிளிக் செய்து, பின்னர் உங்கள் சிறாரின் பெயரை கிளிக் செய்யவும்.
“தகவல்தொடர்புப் பாதுகாப்பு” என்பதைத் தட்டி அல்லது கிளிக் செய்து, அதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும். உங்கள் சிறாரின் திரை நேர பாஸ்கோடை நீங்கள் உள்ளிட வேண்டியிருக்கலாம்.
பகுப்பாய்வுகள் மற்றும் பயன்பாட்டுத் தரவுகளைப் பகிர்வதன் மூலம், தகவல்தொடர்புப் பாதுகாப்பை மேம்படுத்த Appleக்கு நீங்கள் உதவலாம். மெசேஜ்களும் மீடியா கோப்புகளும் Apple உடன் பகிரப்படாது. “தகவல்தொடர்புப் பாதுகாப்பை மேம்படுத்துதல்” என்பதை ஆன் செய்யவும்.
உதவிக்குறிப்பு: டிஜிட்டல் பாதுகாப்பு குறித்தும், ஆபாச மெசேஜ்கள், நிர்வாண உள்ளடக்கங்கள் போன்ற தலைப்புகள் குறித்தும் உங்கள் சிறாருடன் எப்படிப் பேசுவது என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம். “சிறார் பாதுகாப்பு குறித்த தகவல்களைக் காட்டு” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.