உங்கள் சிறாரின் Apple Watchஇல் பள்ளிநேரத்தைப் பயன்படுத்தத் தொடங்குதல்
பள்ளிநேரங்கள் போன்ற நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாட்கள் மற்றும் நேரங்களில், உங்கள் சிறாரின் Apple Watchஇல் அறிவிப்புகளையும் செயலிப் பயன்பாட்டையும் பள்ளிநேரம் அம்சம் தடுக்கும். இது செயலில் இருக்கும்போது, அவர்களின் வாட்ச் முகப்பில் மஞ்சள் நிற வட்டம் காட்டப்படும் மற்றும் “தொந்தரவு செய்ய வேண்டாம்” பயன்முறை ஆன் செய்யப்படும். உங்கள் சிறார் மெசேஜ்களைச் சரிபார்க்கவோ அவசரச் சேவைகளை அழைக்கவோ தற்காலிகமாக “பள்ளிநேரம்” அம்சத்திலிருந்து வெளியேறலாம். அவர்கள் வெளியேறும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். உங்கள் சிறார் தங்கள் மணிக்கட்டைத் தாழ்த்தும்போது பள்ளிநேரம் மீண்டும் ஆன் செய்யப்படும்.
குறிப்பு: உங்கள் சிறார்களுக்கான Apple Watch அம்சம் சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை. ஆதரவுள்ள நெட்வொர்க் வழங்குநர்கள் உட்பட, கிடைக்கும் தன்மை குறித்த தகவல்களுக்கு, Apple Watch GPS + Cellular என்பதைப் பார்க்கவும்.
தொடங்கும் முன்
குடும்ப உறுப்பினரின் Apple Watchஇல் பள்ளிநேர அட்டவணைகளைப் பயன்படுத்த, முதலில் உங்கள் சிறாருக்கு Apple Watchஐ அமைத்து முடிக்கவும். இதைப் பயன்படுத்த watchOS 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் இந்த Apple Watch மாடல்களில் ஒன்று தேவை:
மொபைல் சேவை வசதியுள்ள Apple Watch Series 6 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்
மொபைல் சேவை வசதியுள்ள Apple Watch SE (1ஆவது தலைமுறை) அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள்
Apple Watch Ultra, Apple Watch Ultra 2 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள்
ஆரம்ப வாட்ச் அமைப்பிற்கு iOS 14 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் iPhone 6s அல்லது அதற்குப் பிந்தைய மாடல் உங்களுக்குத் தேவை. உங்கள் சொந்த Apple Watchஇல் “பள்ளிநேரம்” அம்சத்தைப் பயன்படுத்த, watchOS 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை.
குறிப்பு: குடும்ப உறுப்பினருக்காக Apple Watchஐ அமைக்க மொபைல் சேவைத் திட்டம் தேவையில்லை, ஆனால் சில அம்சங்களுக்கு அவசியம்.
பள்ளிநேரத்தை அமைத்தல்
வாட்ச்சை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் iPhoneஇல் உள்ள Apple Watch
செயலிக்குச் செல்லவும்.
“எனது Watch” என்பதைத் தட்டி, பின்னர் குடும்ப வாட்ச்சுகளுக்குக் கீழே உள்ள ஒரு வாட்ச்சைத் தட்டவும்.
ஐகானைத் தட்டி, பின்னர் பள்ளிநேரத்தைத் தட்டவும்.
பள்ளிநேரத்தை ஆன் செய்யவும், பின்னர் “அட்டவணையைத் திருத்து” என்பதைத் தட்டவும்.
வாட்ச்சில் பள்ளிநேரம் செயலில் இருக்க வேண்டிய நாட்கள் மற்றும் நேரங்களைத் தேர்வுசெய்யவும்.
குறிப்பு: பல நாட்களுக்கான அட்டவணைகளை அமைக்க, “நாட்களைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டவும்.
நீங்கள் ஒரு நாளில் பல அட்டவணைகளை அமைக்க விரும்பினால், “நேரத்தைச் சேர்” என்பதைத் தட்டவும்.
பள்ளிநேரத்திலிருந்து வெளியேறுதல்
உங்கள் சிறார் தற்காலிகமாகப் பள்ளிநேரத்திலிருந்து வெளியேறலாம்.
டிஸ்ப்ளேவைத் தட்டி, Digital Crownஐ அழுத்திப் பிடிக்கவும்.
“வெளியேறு” என்பதைத் தட்டவும்.
உங்கள் சிறார் திட்டமிடப்பட்ட நேரங்களில் பள்ளிநேரத்திலிருந்து வெளியேறினால், அவர்கள் தங்கள் மணிக்கட்டைத் தாழ்த்தும்போது பள்ளிநேர வாட்ச் முகப்பு மீண்டும் காட்டப்படும். பள்ளிநேரம் திட்டமிடப்படாத நேரங்களில், அடுத்த திட்டமிடப்பட்ட தொடக்க நேரம் வரை அல்லது உங்கள் சிறார் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள பள்ளிநேரத்தைத் தட்டும் வரை பள்ளிநேரம் செயலில் இருக்காது.
பள்ளிநேரம் எப்போது அன்லாக் செய்யப்பட்டது என்பதைப் பார்த்தல்
வாட்ச்சை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் iPhoneஇல் உள்ள Apple Watch
செயலிக்குச் செல்லவும்.
“எனது Watch” என்பதைத் தட்டி, பின்னர் குடும்ப வாட்ச்சுகளுக்குக் கீழே உள்ள ஒரு வாட்ச்சைத் தட்டவும்.
ஐகானைத் தட்டி, பிறகு பள்ளிநேரம் அன்லாக் செய்யப்பட்ட நாட்கள், நேரங்கள், கால அளவுகள் குறித்த அறிக்கைகளைப் பார்க்க “பள்ளிநேரம்” என்பதைத் தட்டவும்.
Apple Watchஇலும் அறிக்கை காட்டப்படும். அதைப் பார்க்க, Apple Watchஇல் உள்ள அமைப்புகள்
செயலிக்குச் சென்று “பள்ளிநேரம்” என்பதைத் தட்டவும்.
டிஸ்ப்ளே, உறக்கப் பயன்முறைக்குச் செல்லும்போது பள்ளிநேரம் மீண்டும் ஆன் செய்யப்படும்.
உதவிக்குறிப்பு: பள்ளிநேரம் செயலில் இல்லாதபோது, உங்கள் சிறார் அதை ஆன் செய்யலாம். எடுத்துக்காட்டாக, அவர்கள் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு வெளியே, பள்ளிக்குப் பிந்தைய படிப்புக் குழுவில் சேர்ந்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க அவர்கள் விரும்பினால் இதைச் செய்யலாம். பக்கவாட்டு பட்டனை அழுத்தி, கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள ஐகானைத் தட்டவும். பள்ளிநேரத்திலிருந்து வெளியேற, Digital Crownஐ அழுத்திப் பிடித்து, “வெளியேறு” என்பதைத் தட்டவும்.
அடுத்து என்ன?
உங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் Apple Music குடும்பச் சந்தா இருந்தால், உங்கள் சிறார் Wi‑Fi அல்லது மொபைல் டேட்டா இணைப்பு இருக்கும் வரை Apple Musicஐக் கேட்கலாம். அவர்கள் பாட்காஸ்ட்டுகளைப் பின்தொடரவும் ஸ்ட்ரீம் செய்யவும் முடியும். தொடங்க, உங்கள் சிறாரின் Apple Watchஇல் உள்ள இசை அல்லது பாட்காஸ்ட்கள்
செயலியைத் திறக்கவும்.