உங்கள் சிறாரின் உடல்நல அறிக்கைகள் மற்றும் தகவலை Apple Watchஇல் பார்த்தல்
உங்கள் சிறாரின் அனுமதியுடன், அவரின் செயல்பாடு மற்றும் உடல்நலத் தகவலின் அறிக்கைகளை நீங்கள் பார்க்கலாம்.
குறிப்பு: உங்கள் சிறார்களுக்கான Apple Watch அம்சம் சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை. ஆதரவுள்ள நெட்வொர்க் வழங்குநர்கள் உட்பட, கிடைக்கும் தன்மை குறித்த தகவல்களுக்கு, Apple Watch GPS + Cellular என்பதைப் பார்க்கவும்.
உங்கள் சிறாரின் உடல்நல விவரங்கள் மற்றும் மருத்துவ ஐடியை அவரின் Apple Watchஇல் சேர்த்தல்
உங்கள் சிறாரின் வாட்ச்சை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் iPhoneஇல் உள்ள Apple Watch செயலிக்கு
செல்லவும்.
“எனது Watch” என்பதைத் தட்டி, பின்னர் குடும்ப வாட்ச்சுகளுக்குக் கீழே உள்ள ஒரு வாட்ச்சைத் தட்டவும்.
ஐகானைத் தட்டி, உடல்நலம் என்பதைத் தட்டி, “[குடும்ப உறுப்பினரின் பெயர்] உடல்நலத் தரவுகளைக் கோரவும்” என்பதைத் தட்டவும்.
“உடல்நலத் தரவைக் கோருக” என்பதைத் தட்டியதும், நிர்வகிக்கப்படும் வாட்ச்சிற்கு அறிவிப்பு அனுப்பப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர் தனது உடல்நலத் தரவுகளைப் பகிர்வதற்குத் தேர்வுசெய்த பிறகு, பின்வருவனவற்றைச் செய்யவும்:
“உடல்நல விவரங்கள்” என்பதைத் தட்டி, பிறந்த தேதி, உயரம், எடை போன்ற தகவல்களை உள்ளிடவும் அல்லது திருத்தவும்.
“மருத்துவ ஐடியை அமை” என்பதைத் தட்டி, அவசரகாலத் தொடர்புகளையும், மேலும் பலவற்றையும் சேர்க்கவும்.
உங்கள் குடும்ப உறுப்பினர் தனது உடல்நலம் செயலியில் இருந்து இந்தத் தகவலை உங்களுடன் பகிர்வதற்குத் தேர்வுசெய்திருந்தால், உடல்நல விவரங்களையும் மருத்துவ ஐடியையும் Apple Watchஐ நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் iPhone மற்றும் வாட்ச்சில் நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் iPhoneஇல்: உடல்நலம் செயலிக்குச் சென்று, “பகிர்தல்” என்பதைத் தட்டி, உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரைத் தட்டி, “சுயவிவரம்” என்பதைத் தட்டவும்.
நிர்வகிக்கப்படும் Apple Watchஇல்: Apple Watchஇல் அமைப்புகள்
செயலிக்குச் சென்று, “உடல்நலம்” என்பதைத் தட்டவும்.
உங்கள் சிறாரின் Apple Watchஇல் இருந்து அவர்களின் உடல்நலத் தகவல்களைப் பார்த்தல்
உங்கள் குடும்ப உறுப்பினர் தனது உடல்நலத் தரவுகளைப் பகிர்வதற்குத் தேர்வுசெய்திருந்தால், அவர்களின் செயல்பாடு குறித்த கூடுதல் தகவல்களையும், அத்துடன் செவித்திறன், சூரிய ஒளியில் செலவிட்ட நேரம், இதயத்துடிப்பு மற்றும் பலவற்றையும் நீங்கள் பார்க்கலாம்.
iPhoneஇல் உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.
“பகிர்தல்” என்பதைத் தட்டி, “உங்களுடன் பகிரப்படுபவை” என்பதற்குக் கீழே உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரைத் தட்டவும்.
“உடல்நல வகைகள்” என்பதைத் தட்டி, ஒரு வகையைத் தட்டவும்.
அடுத்து என்ன?
“பள்ளிநேரம்” அம்சத்தை அமைக்கும்போது, உங்கள் சிறாரின் Apple Watchஇல் அறிவிப்புகளைத் தடுப்பதன் மூலமும் அனைத்துச் செயலிகளையும் ஆஃப் செய்வதன் மூலமும் உங்கள் சிறார் பள்ளியில் கவனம் செலுத்த உதவலாம். உங்கள் சிறாரின் Apple Watchஇல் பள்ளிநேரத்தைப் பயன்படுத்தத் தொடங்குதல் என்பதைப் பார்க்கவும்.