iPhone, iPad, Apple Watch மற்றும் Mac சாதனங்கள் அருகருகே பள்ளி நேரம், திரை நேர அட்டவணைகள் மற்றும் உலாவ அனுமதி கோருதல் போன்ற பல்வேறு பெற்றோர் கட்டுப்பாடுகளைக் காட்டுகின்றன.

பெற்றோர் கட்டுப்பாடுகளின் புதிய அம்சங்கள்

iOS 27, iPadOS 27, macOS 27 மற்றும் watchOS 27இல் பெற்றோர் கட்டுப்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்த்து, பயன்படுத்தத் தொடங்குவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பெற்றோர் கட்டுப்பாடுகளில் புதிதாக என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் குடும்பத்தின் சாதனங்களை எப்படிப் புதுப்பிப்பது என அறிந்துகொள்ளுங்கள்

சிறாரும் பெற்றோரும் சேர்ந்து iPadஐப் பார்க்கின்றனர்.

உங்கள் சிறாரின் முதல் Apple சாதனத்தை அமைக்கத் தொடங்குதல்

சிறார் கணக்கை உருவாக்கி, அவரின் சாதனத்தில் அவர் பயன்படுத்தத் தொடங்கும் செயலிகளைத் தேர்வுசெய்யலாம் மற்றும் அமைக்கும்போது பெற்றோர் கட்டுப்பாடுகளைத் தேர்வுசெய்யலாம். உங்கள் சிறார் ஏற்கெனவே ஒரு கணக்கு வைத்திருந்தால், அந்தக் கணக்கையும் நீங்கள் புதுப்பிக்கலாம்.

உங்கள் சிறாரின் முதல் iPhone அல்லது iPad, Mac அல்லது Apple Watchஐ அமைக்கத் தொடங்குங்கள்.

திரை நேர அமைப்புகள் பேனில் உள்ள நேர ஒதுக்கீடுகள் பிரிவு.

உங்கள் சிறாரின் சாதனத்தில் பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பார்த்தல்

சிறார்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட வயது அடிப்படையிலான பாதுகாப்புகள் உள்ளிட்ட உங்கள் சிறாரின் சாதனங்களில் உள்ள பெற்றோர் கட்டுப்பாடுகள் பற்றிய மேலோட்டத்தைப் பெறலாம்.

பெற்றோர் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தத் தொடங்குதல்

குடும்பப் பகிர்வு அமைப்புகள் பேனலில் குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

குடும்பப் பகிர்வில் எவை சாத்தியம் என்பதைப் பாருங்கள்

சந்தாக்கள், வாங்குதல்கள், iCloud+ சேமிப்பகம் மற்றும் பலவற்றை அதிகபட்சம் ஐந்து பேர் வரை பகிரலாம். ஒவ்வொருவரும் அவர்களின் சொந்தக் கணக்கைப் பயன்படுத்துகின்றனர், எதைப் பகிர வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்கிறீர்கள்.

குடும்பப் பகிர்வைப் பயன்படுத்தத் தொடங்குதல்

உங்கள் சிறாரின் சாதனங்களில் உள்ளடக்கத்தைத் தடுத்தல்

உங்கள் சிறார் தனது சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய செயலிகள் மற்றும் இணையதளங்களை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

உங்கள் சிறாரின் சாதனத்தில் செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கான அணுகலைத் தடுத்தல் அல்லது அனுமதித்தல்

உங்கள் குடும்பத்தினரையும் அவர்களின் சாதனங்களையும் கண்டறிதல்

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம், தொலைந்துபோன சாதனங்களைக் கண்டறிய உதவலாம்.

குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பிடங்களைப் பகிர்தல் மற்றும் தொலைந்த சாதனங்களைக் கண்டறிதல்

உங்கள் சிறாரின் சாதனங்களில் திரை நேர பாஸ்கோடை மீட்டமைத்தல்

திரை நேர பாஸ்கோடைச் சிறார் கண்டுபிடித்துவிட்டால் அல்லது நீங்கள் மறந்துவிட்டால், அதை மீட்டமைத்து புதிதாக ஒன்றை உருவாக்கலாம்.

உங்கள் சிறாரின் சாதனத்தில் திரை நேர பாஸ்கோடை அமைக்கலாம், மாற்றலாம், நிர்வகிக்கலாம்

*இந்த வழிகாட்டியில் விவரிக்கப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தையும் பயன்படுத்த, பதிப்பு 27 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் iOS, iPadOS, macOS, watchOS அல்லது visionOS தேவை. உங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ள ஒரு சிறாருக்காக இந்தக் கட்டுப்பாடுகளை அமைத்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து iOS, iPadOS, macOS, watchOS அல்லது visionOS 27 சாதனங்களும் பதிப்பு 27 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தின் சாதனங்களை எப்படிப் புதுப்பிப்பது என அறிந்துகொள்ளுங்கள்.

உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.