உங்களுக்குப் பிடித்த அணிகள் மற்றும் லீக்குகளை அமைத்தல்

Apple Sports செயலியை நிறுவியதும், உங்களுக்குப் பிடித்த அணிகளையும் லீக்குகளையும் தேர்ந்தெடுத்து எனது விளையாட்டுகள் அம்சத்தை அமைத்து ஒத்திசைக்கும்படி கேட்கப்படும்.
News
அல்லது Apple TV
செயலியில் “எனது விளையாட்டுகள்” அம்சத்தை நீங்கள் ஏற்கெனவே அமைத்து அதே Apple கணக்கில் உள்நுழைந்திருந்தால், உங்கள் அணிகளும் லீக்குகளும் Apple Sports செயலியுடன் தானாகவே ஒத்திசைக்கப்பட்டு, நீங்கள் அதைத் திறக்கும்போது காட்டப்படும்.
Apple Sports செயலியில் உங்களுக்குப் பிடித்த அணிகளையும் லீக்குகளையும் அமைத்தல்
உங்கள் iPhoneஇல் உள்ள Apple Sports
செயலிக்குச் சென்று “தொடங்குங்கள்” என்பதைத் தட்டவும்.பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
தேடலைப் பயன்படுத்துதல்: தேடல் புலத்தைத் தட்டி, தேடல் சொல்லை உள்ளிடவும் அல்லது சொல்லவும், பின்னர் நீங்கள் பின்தொடர விரும்பும் அணி அல்லது லீக்கிற்கு அடுத்துள்ள
-ஐத் தட்டவும்.லீக்கைத் தேர்ந்தெடுத்தல்: இன்றைய ஸ்கோர்களைப் பார்க்க ஒரு லீக்கைத் தட்டி, நீங்கள் பின்தொடர விரும்பும் லீக்கிற்கு அடுத்துள்ள
-ஐத் தட்டவும்.குழுவைத் தேர்ந்தெடுத்தல்: ஒரு லீக்கைத் தட்டி, நீங்கள் பின்தொடர விரும்பும் அணிக்கு அடுத்துள்ள
-ஐத் தட்டவும்.
நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.
Apple Sports செயலியில் பின்னர் மாற்றங்களைச் செய்ய, மேல் வலது மூலையில் உள்ள மெனு பட்டனைத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டவும் (Apple Sports செயலியில் “எனது விளையாட்டுகள்” அம்சத்தை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்).
உங்களுக்குப் பிடித்தவற்றைச் சேர்க்கும்போது அல்லது அகற்றும்போது, அவை News, Apple TV மற்றும் பிற ஆதரிக்கப்படும் செயலிகளிலும் iPad, Mac, Apple TV போன்ற அதே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள பிற சாதனங்களிலும் எனது விளையாட்டுகள் அம்சத்துடன் ஒத்திசைக்கப்படும்.
News அல்லது Apple TV செயலியில் உங்களுக்குப் பிடித்த அணிகளையும் லீக்குகளையும் அமைத்தல்
News
அல்லது Apple TV
செயலியில் எனது விளையாட்டுகள் அம்சத்தை அமைத்து நிர்வகித்தால், உங்களுக்குப் பிடித்த அணிகளும் லீக்குகளும் Apple Sports
செயலியிலும் காட்டப்படும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
News செயலியில் எனது விளையாட்டுகள் அம்சத்தை அமைத்தல்: iPhone பயனர் வழிகாட்டியில் உள்ள News செயலிக்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Apple TV செயலியில் எனது விளையாட்டுகள் அம்சத்தை அமைத்தல்: iPhone பயனர் வழிகாட்டியில் உள்ள Apple TV செயலிக்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Apple Sports செயலியில் பின்னர் மாற்றங்களைச் செய்ய, மேல் வலது மூலையில் உள்ள மெனு பட்டனைத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டவும். Apple Sports செயலியில் “எனது விளையாட்டுகள்” அம்சத்தை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.