நிகழ்நேரப் புள்ளிவிவரங்களுடன் கேம்களைப் பின்தொடர்தல்

ஸ்கோர் திரையில் இன்றைய கேம்களைப் பார்க்கும்போது, ஸ்கோர்கள் மற்றும் கேம் நேரங்கள் ஒவ்வொரு தருணத்தையும் கண்காணித்து, புள்ளிவிவரங்களை நிகழ்நேரத்தில் புதுப்பிக்கும் வகையில், தற்போது நடந்துகொண்டிருக்கும் அனைத்து கேம்களின் மேலோட்டமான காட்சியை நீங்கள் பார்க்கலாம்.
நேரலைச் செயல்பாடுகளை ஆன் செய்திருந்தால், உங்கள் iPhone பூட்டுத் திரை அல்லது Apple Watchஇல் நிகழ்நேரத் தகவல்களைப் பெறலாம். இதன் மூலம், ஒரே பார்வையில் கேமின் ஒவ்வொரு தருணத்தையும் பற்றி அறிந்துகொள்ளலாம் (iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு மற்றும் watchOS 11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை).
கேம் குறித்த விரிவான தகவல்களைப் பெறுதல்
iPhoneஇல் Apple Sports
செயலிக்குச் செல்லவும்.செயல்பாட்டில் உள்ள கேம்கள் மைய நெடுவரிசையில் நேரடி நிலைப் புதுப்பிப்புகளைக் காட்டும்.
எந்த கேம்கள் காட்டப்பட வேண்டும் என்பதை ஃபில்டர் செய்ய, Apple Sports செயலியில் அட்டவணைகளையும் ஸ்கோர்களையும் பார்த்தல் என்பதைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு ஒரு கேமைத் தட்டவும்.
கேம் கார்டு திரையில், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
பெட்டிங் ஆட்ஸ்கள் (கிடைக்கும் இடங்களில்) உள்ளிட்ட நிகழ்நேரப் புள்ளிவிவரங்களைப் பார்த்தல்: புள்ளிவிவரங்களைப் பார்க்க ஸ்க்ரால் செய்யவும் அல்லது கேம் குறித்த கூடுதல் விவரங்களைப் பார்க்க புள்ளிவிவரங்கள் தாவல் காட்டப்பட்டால் அதைத் தட்டவும்.
குறிப்பு: விளையாட்டு மற்றும் லீக்கைப் பொறுத்து வெவ்வேறு புள்ளிவிவரங்கள் காட்டப்படும்.
செயலில் உள்ள மற்றொரு கேமிற்குச் செல்ல: நேரலை அட்டவணையில் மற்றொரு கேம் கார்டைப் பார்க்க இடது அல்லது வலதுபுறம் ஸ்வைப் செய்யவும்.
கேமைப் பார்க்க: கிடைத்தால், கேம் கார்டில் ஒளிபரப்புக் காட்சி விருப்பங்கள் காட்டப்படும். Apple TV செயலியைத் திறந்து விருப்பத்தைத் தேர்வுசெய்ய, “Apple TVஇல் திற” என்பதைத் தட்டவும்.
குறிப்பு: நீங்கள் அதே Apple கணக்கில் உள்நுழைந்து Apple TVக்குச் சந்தா சேர்ந்திருந்தால், Apple TV செயலியில் “Friday Night Baseball” கேம்களும் MLS போட்டிகளும் உடனடியாக பிளே செய்யப்படும். மற்ற அனைத்து கேம்களும் Apple TV செயலியில் உள்ள காட்சி விருப்பங்களின் பட்டியலில் காட்டப்படும்.
கேம் கார்டு திரையிலிருந்து ஸ்கோர்களுக்குத் திரும்ப கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
கேமைப் பகிர்தல்
இனி நடக்கவிருக்கும், தற்போது நடந்துகொண்டிருக்கும் அல்லது நடந்து முடிந்த கேமை நீங்கள் பகிரலாம், இதனால் உங்கள் நண்பர்கள் iPhoneஇல் உள்ள Apple Sports செயலியில் அதைப் பின்தொடர முடியும்.
இன்றைய கேம்களைப் பார்க்க உங்கள் iPhoneஇல் உள்ள Apple Sports
செயலிக்குச் செல்லவும்.குறிப்பு: செயலியில் எந்தெந்த கேம்கள் காட்டப்பட வேண்டும் என்பதை அமைக்க, Apple Sports செயலியில் அட்டவணைகளையும் ஸ்கோர்களையும் பார்த்தல் என்பதைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு ஒரு கேமைத் தட்டவும்.
கேம் கார்டு திரையில்,
-ஐத் தட்டி, “மெசேஜஸ்”, “Mail” போன்ற பகிர்வு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
பெறுநரிடம் Apple Sports செயலி இல்லையென்றால், முதலில் செயலியைப் பதிவிறக்கும்படி கேட்கப்படும்.
இன்றைய கேம்களுக்கான நேரலைச் செயல்பாடுகளை ஆன் செய்தல்
உங்கள் iPhone பூட்டுத் திரை அல்லது Apple Watchஇல் நிகழ்நேர கேம் அறிவிப்புகளைப் பெற, “நேரலைச் செயல்பாடுகள்” அம்சத்தை ஆன் செய்யவும் (iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்போ watchOS 11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்போ தேவை).
இன்றைய கேம்களைப் பார்க்க உங்கள் iPhoneஇல் உள்ள Apple Sports
செயலிக்குச் செல்லவும்.இன்னும் தொடங்கப்படாத கேமிற்கும் நேரலைச் செயல்பாட்டை நீங்கள் திட்டமிடலாம்.
குறிப்பு: செயலியில் எந்தெந்த கேம்கள் காட்டப்பட வேண்டும் என்பதை அமைக்க, Apple Sports செயலியில் அட்டவணைகளையும் ஸ்கோர்களையும் பார்த்தல் என்பதைப் பார்க்கவும்.
மேலும் விவரங்களுக்கு ஒரு கேமைத் தட்டவும்.
கேம் கார்டு திரையில்,
-ஐத் தட்டி, ஸ்கோர்களுக்குத் திரும்ப கேம் கார்டில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.உங்கள் iPhoneஇன் பூட்டுத் திரை அல்லது Apple Watchஇல் நிகழ்நேரப் புதுப்பிப்புகள், ஸ்கோர்கள், போட்டிகள் ஆகியவற்றுடன் கேமின்போது அறிவிப்புகள் காட்டப்படும்.

iPhoneஇல் உள்ள Apple Sports செயலியில் கேம் கார்டு திரைக்குத் திரும்ப, iPhone பூட்டுத் திரையில் உள்ள “நேரலைச் செயல்பாடுகள்” அறிவிப்பைத் தட்டவும்.
ஒரு கேமிற்கான “நேரலைச் செயல்பாடுகள்” அறிவிப்புகளை நிறுத்த, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
iPhone பூட்டுத் திரையில், “நேரலைச் செயல்பாடுகள்” அறிவிப்பில் இடதுபுறம் ஸ்வைப் செய்யவும்.
Apple Sports செயலியில் உள்ள கேம் கார்டு திரையில்
-ஐத் தட்டவும்.
நீங்கள் பின்தொடரும் அணிகளுக்கு “நேரலைச் செயல்பாடுகள்” தானாகவே ஆன் செய்யப்பட வேண்டுமா அல்லது கேம் குறித்த அறிவிப்புகள் எவ்வளவு அடிக்கடி பெறப்பட வேண்டும் என்பதை அமைக்க, நேரலைச் செயல்பாடுகளை நிர்வகித்தல் என்ற கட்டுரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.