படிநிலை 4: உங்கள் சிறாரின் சாதனப் பயன்பாட்டிற்கான நேர அட்டவணையை உருவாக்குதல்
உங்கள் சிறார், சாதனத்தில் நேரத்தைச் செலவிடும்போது, ஆரோக்கியமான, சமச்சீரான பழக்கவழக்கங்களை உருவாக்க அவருக்கு உதவுவதில் நீங்கள் முக்கியப் பங்காற்றுகிறீர்கள். சிறார்கள் இன்னும் வளர்ந்து வரும்போது இந்தப் பழக்கவழக்கங்களில் பல குறிப்பாக முக்கியமானவையாக உள்ளன. உறக்கம், உடற்பயிற்சி, வீட்டுப்பாடம், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது போன்ற அத்தியாவசியமானவற்றுக்கு நேரம் ஒதுக்குவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.
உணவு வேளைகள் அல்லது படுக்கையறைகள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தாத நேரங்களையும் இடங்களையும் அமைப்பது, சிறார்கள் மற்றவர்களுடன் பேசிப் பழகவும் தங்களின் சாதனங்களைத் தொடாமல் இருக்கப் பழகவும் வாய்ப்பளிக்கிறது. குறிப்பாக, சிறார்கள் வளர வளர, திரை நேரத்தைத் தொடர்ந்து நிர்வகிப்பது, ஒரு குறிப்பிட்ட நேர அளவைவிட முக்கியமானது என ஆராய்ச்சிகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டல்கள் பொதுவாகப் பரிந்துரைக்கின்றன.
உங்கள் குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ள ஒரு சிறாருக்காக இந்தப் பெற்றொர் கட்டுப்பாடுகளை அமைக்கிறீர்கள் எனில், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்துச் சாதனங்களும் iOS, iPadOS, macOS, watchOS, visionOS போன்றவற்றைப் பதிப்பு 27 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பிற்கு மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உங்கள் Apple சாதனங்களைப் புதுப்பிப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள். | |||||||||||
செயலிகளை உங்கள் சிறார் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்தல்
பொழுதுபோக்கு, கேம்கள் மற்றும் சமூக ஊடகம் போன்ற வெவ்வேறு வகைகளில் உங்கள் சிறார் செயலிகளில் செலவிடும் நேரத்தை நிர்வகிக்க நேர ஒதுக்கீடுகளை அமைத்திடலாம். நேர ஒதுக்கீடுகள், American Academy of Pediatrics (AAP) மற்றும் பிற அமைப்புகளின் சிறார் சுகாதார ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், உங்கள் சிறாரின் பல்வேறு வகைகளுக்கான பகிரப்பட்ட நேர ஒதுக்கீட்டிற்கான வயது அடிப்படையிலான ஒரு தொடக்கத்தைப் பரிந்துரைக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு வகைக்கும் நேரத்தைச் சரிசெய்து, அது பொதுவான வழிகாட்டலுக்குள் வருகிறதா எனச் சரிபார்க்கலாம்.
தொடங்குவதற்கு, உங்கள் குடும்பப் பகிர்வு அமைப்புகளுக்குச் சென்று, உங்கள் சிறாரின் பெயரைத் தேர்ந்தெடுத்து, “நேர ஒதுக்கீடுகள்” என்பதை கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். மேலும் தகவலுக்கு, நேர ஒதுக்கீடுகளுடன் உங்கள் சிறார் செயலிகள் மற்றும் இணையதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்பதை அமைத்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
உங்கள் சிறார்களின் சாதனப் பயன்பாட்டிற்கான நேர அட்டவணைகளை உருவாக்குதல்
உங்கள் சிறார் கவனத்துடன் இருக்க உதவுவதற்கு, திரை நேர அட்டவணைகள் மூலம் ஒரு நாளில் எந்தெந்த நேரங்களில் எந்தெந்தச் செயலிகளைப் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் நிர்வகிக்கலாம். நீங்கள் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களுக்கு, பள்ளிக்கு முன், பள்ளியில் இருக்கும் நேரம், பள்ளிக்குப் பின் போன்ற உள்ளமைக்கப்பட்ட நேர வரம்புகளைப் பயன்படுத்தி வழக்கங்களை அமைக்கலாம். நீங்கள் குறைக்கப்பட்ட பள்ளி நாட்கள் அல்லது கூடுதல் பாடத்திட்டங்கள் போன்ற சூழ்நிலைகளுக்கு உங்கள் நேர அட்டவணையையும் உருவாக்கலாம்.
தொடங்குவதற்கு, உங்கள் குடும்பப் பகிர்வு அமைப்புகளுக்குச் சென்று, உங்கள் சிறாரின் பெயரைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “திரை நேர அட்டவணை” என்பதை கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். மேலும் தகவலுக்கு, சாதனப் பயன்பாட்டிற்கான திரை நேர அட்டவணைகளை அமைத்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
உதவிக்குறிப்பு: நீங்களும் உங்கள் சிறாரும் சாதனப் பயன்பாட்டிற்கான நேர அட்டவணைகளை உருவாக்கும்போது, உறக்க நேர வழக்கங்களும் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு உறக்கம் மிகவும் முக்கியம். உறங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பிருந்து சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதையும் இரவு முழுவதும் சாதனங்களை படுக்கையறைக்கு வெளியே வைப்பதையும் AAP பரிந்துரைக்கிறது. நீங்கள் உறக்க நேர அட்டவணையை அமைத்து, உறக்க நேரம் நெருங்கும்போது உங்கள் சிறாருக்கு நினைவூட்டலாம். மேலும், உங்கள் சிறார் ஓய்வெடுக்கும்போது மாலை நேரத்தில் டிஸ்ப்ளேவைப் பளீரென வைக்காமல் மங்கலான வண்ணங்களுக்கு மாற்ற Night Shiftஐ ஆன் செய்யலாம்.
அத்தியாவசியச் செயலிகளையும் தொடர்புகளையும் எப்போதும் கிடைக்கும்படி வைத்திருத்தல்
“எப்போதும் அனுமதி” அம்சம், நேர ஒதுக்கீடுகள் அல்லது திரை நேர அட்டவணைகள் போன்ற திரை நேர அமைப்புகளால் பிற செயலிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் அல்லது வரம்பிடப்பட்டிருந்தாலும்கூட உங்கள் சிறாருக்கு அணுகக்கூடியதாக இருக்கும் செயலிகளையும் தொடர்புகளையும் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. இயல்பாகவே, FaceTime, மேப்ஸ், ஃபோன், மெசேஜஸ் போன்ற அத்தியாவசியமான செயலிகள் “எப்போதும் அனுமதி” என அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் தொடர்புகள் செயலியை “எப்போதும் அனுமதி” பட்டியலில் சேர்க்கலாம், இதன் மூலம் உங்கள் சிறார் எப்போதும் முக்கியமான நபர்களைத் தொடர்புகொள்ள முடியும்.
தொடங்குவதற்கு, உங்கள் “குடும்பப் பகிர்வு” அமைப்புகளுக்குச் சென்று, உங்கள் சிறாரின் பெயரைத் தேர்ந்தெடுத்து, பின்னர் “எப்போதும் அனுமதி” என்பதை கிளிக் செய்யவும் அல்லது தட்டவும். மேலும் தகவலுக்கு, உங்கள் சிறாரின் சாதனத்தில் எப்போதும் அனுமதிக்க வேண்டிய செயலிகளையும் நபர்களையும் தேர்வுசெய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
உதவிக்குறிப்பு: உங்கள் சிறார் யார் யாருடன் ஃபோன், மெசேஜஸ், FaceTime ஆகியவற்றின் மூலம் தொடர்புகொள்ளலாம் என்பதையும் நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் சிறார் யாருடன் தொடர்புகொள்ளலாம் என்பதைத் தீர்மானித்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.