அசல் iPhone பேட்டரிகள் பற்றி
ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் அனைத்தும் நுகர்பொருட்களாகும், மேலும் அவை குறைந்த ஆயுட்காலம் கொண்டவை—இறுதியில் அவற்றின் கொள்திறனும் செயல்திறனும் குறைந்துவிடுவதால் அவற்றை மாற்ற வேண்டியுள்ளது. iPhone உள்ளமைக்கப்பட்ட, உயர்தர லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பயன்படுத்துகிறது. Apple-இன் தரம் மற்றும் செயல்திறன் தரநிலைகளை நிறைவு செய்யும் வகையில் இவை மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, தயாரிக்கப்படுகின்றன. இந்த அசல் Apple பேட்டரிகள் பாதுகாப்பிற்கான சான்றிதழையும் கொண்டுள்ளன.
உங்கள் பழுதுபார்ப்பு விருப்பத்தேர்வுகளைப் பற்றி அறிக
பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு, அசல் Apple பாகங்களைப் பயன்படுத்தும் சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட ஒரு தொழில்முறைப் பழுதுநீக்க வழங்குநரைப் பார்வையிடுவதே பழுதுநீக்கத்தைச் செய்வதற்கான மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாகும். இந்த வழங்குநர்களில் Apple மற்றும் Apple அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் அடங்குவர். சுயாதீனப் பழுதுநீக்க வழங்குநர்களும் அசல் Apple பாகங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளனர்.1
லித்தியம்-அயன் பேட்டரிகள் சென்சிட்டிவ் கூறுகளாகும், மேலும் அவற்றைக் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். அதிக வெப்பமாதல், தீ அல்லது காயம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சேதத்தைத் தவிர்க்க, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர் மட்டுமே iPhone பேட்டரியை மாற்ற வேண்டும். பயிற்சி பெறாத தனிநபர்களால் அசல் அல்லாத பாகங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் பழுதுநீக்கங்கள், சாதனத்தின் பாதுகாப்பைப் பாதிக்கலாம் அல்லது முறையற்ற செயல்பாட்டை ஏற்படுத்தலாம்.
உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து, உங்கள் iPhone பேட்டரியை—உத்தரவாதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்— Apple ஸ்டோர் அல்லது Apple அங்கீகரித்த சேவை வழங்குநரைப் பார்வையிடுவதன் மூலமாக அல்லது உங்கள் iPhone-ஐ Apple பழுதுநீக்க மையத்திற்கு அனுப்புவதன் மூலமாக மாற்றிக்கொள்ளலாம். உத்தரவாதம் முடிந்த பழுதுநீக்கங்களுக்காக, அசல் Apple பாகங்கள் சுயாதீனப் பழுதுநீக்க வழங்குநர்களிடமிருந்து அல்லது சுய சேவைப் பழுதுநீக்கம் மூலமாகக் கிடைக்கின்றன.2
அசல் அல்லாத பேட்டரிகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்கள் பற்றி அறிக
ஒரு சேவை வழங்குநர் அசல் அல்லாத பேட்டரி பாகங்களைப் பயன்படுத்தினால், மாற்று பேட்டரி பின்வருமாறு இருக்கலாம்:
மோசமாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் அல்லது தயாரிக்கப்பட்டிருக்கலாம்
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பேட்டரியாக இருக்கலாம்
சேதமடைந்த பேட்டரியாக இருக்கலாம்
உங்கள் iPhone மாடலுக்குப் பொருத்தமற்ற பேட்டரியாக இருக்கலாம்
iPhone பழுதுநீக்கத்தில் அசல் அல்லாத பேட்டரியைப் பயன்படுத்தலாம் என்றாலும், மேலே குறிப்பிடப்பட்ட சிக்கல்களில் ஏதேனும் ஒன்று, போதுமானதாக இல்லாத பேட்டரியின் கொள்திறன், சரியாகப் பொருந்தாமை அல்லது செயல்திறன் சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். அசல் அல்லாத பேட்டரிகளைப் பயன்படுத்துவது, அவற்றை நிறுவிய பிறகும், சாதன மென்பொருள் புதுப்பிப்புகளின்போது அல்லது சார்ஜ் செய்யும் நேரத்தில் எதிர்பாராத செயல்பாடுகளுக்கு வழிவகுக்கலாம். அசல் அல்லாத பேட்டரிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்புச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம்.
சார்ஜ் நிலைகள் மற்றும் பேட்டரி ஆரோக்கியம் ஆகியவற்றைத் தெரிவிப்பது உட்பட, iOS உடன் இணைந்து சரியாகச் செயல்படும் வகையிலேயே அசல் பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு பேட்டரி சரிபார்க்கப்படவில்லை என்றால், பேட்டரி ஆரோக்கியம் குறித்த தகவல் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம்.
உங்கள் சாதனத்தின் பாகங்கள் மற்றும் சேவை வரலாற்றைச் சரிபார்க்கவும்
iPhone XR, iPhone XS மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில், உங்கள் iPhone-இன் பாகங்கள் மற்றும் சேவை வரலாற்றைப் பார்க்கலாம், மேலும் பேட்டரி மாற்றப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்கலாம்:
அமைப்புகள் செயலியைத் திறக்கவும்.
பொது என்பதைத் தட்டி, பின்னர் பற்றி என்பதைத் தட்டவும்.
பழுதுநீக்க அசல் Apple பாகங்கள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்டிருந்தால், பேட்டரிக்கு அடுத்ததாக அசல் என்பதைப் பார்ப்பீர்கள்.
iOS 18-ஐப் பயன்படுத்தும் iPhone 15 மற்றும் அதற்குப் பிந்தையதில், பேட்டரி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தால் அல்லது மற்றொரு iPhone-இல் நிறுவப்பட்டிருந்தால், நீங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற மெசேஜைப் பார்ப்பீர்கள்.3

புதிய Apple பேட்டரி நிறுவப்பட்ட பிறகு, பழுதுநீக்க உதவியாளர் மூலம் பழுதுநீக்கத்தை நிறைவு செய்யும் வரை, பேட்டரி என்பதற்கு அடுத்துள்ள பழுதுநீக்கத்தை நிறைவு செய் என்பதைப் பார்ப்பீர்கள்.
பேட்டரி பின்வருமாறு இருந்தால், என்ற செய்தி4-ஐ நீங்கள் பார்ப்பீர்கள்:
உண்மையான Apple பாகம் அல்ல
எதிர்பார்த்தபடி செயல்படவில்லை
பழுதுநீக்கம் முடிந்த பிறகு சரிபார்க்கப்பட்டு உங்கள் iPhone உடன் இணைக்கப்படவில்லை
மாற்றியமைக்கப்பட்டுள்ளது அல்லது வேறுவிதமாகச் சரிபார்க்க இயலவில்லை

ஓர் அறியப்படாத பாகம் உங்கள் சாதனத்தின் பரிமாற்ற மதிப்பைப் பாதிக்கக்கூடும்.
iOS 18 உடன் வரும் iPhone 15 மற்றும் அதற்குப் பிந்தையதில், ஒரு அசல் பேட்டரியை அதே மாடல் கொண்ட மற்றொரு iPhone-இல் மீண்டும் பயன்படுத்தலாம். மறுபயன்பாட்டு பேட்டரி, புதிய அசல் Apple பேட்டரியைப் போலச் சிறப்பாகச் செயல்படாமல் போகலாம். முன்னர் மற்றொரு iPhone-இல் பயன்படுத்தப்பட்ட அசல் Apple பாகத்திற்காக, பேட்டரிக்கு அடுத்து பயன்படுத்தப்பட்டது என்று நீங்கள் பார்ப்பீர்கள்.
உங்கள் பேட்டரியின் முதல் பயன்பாட்டுத் தேதி, கொள்திறன் மற்றும் சுழற்சி எண்ணிக்கை ஆகியவற்றை நீங்கள் பார்க்கலாம்:
அமைப்புகள் செயலியைத் திறக்கவும்.
பேட்டரி என்பதைத் தட்டி, பின்னர் பேட்டரி ஆரோக்கியம் என்பதைத் தட்டவும்.
நீங்கள் "இந்த iPhone-இல் அசல் Apple பேட்டரி உள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியவில்லை" என்று பார்த்தால், பேட்டரியின் ஆரோக்கியத் தகவல் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம்.
பேட்டரி ஆரோக்கியம் பற்றி மேலும் அறிக
"இந்த iPhone-க்கான சாதனத் தகவலை Apple புதுப்பித்துள்ளது" என்று கூறும் ஒரு கூடுதல் செய்தியை நீங்கள் பார்க்கலாம். இதன் பொருள், சேவைத் தேவைகள், பாதுகாப்புப் பகுப்பாய்வு மற்றும் எதிர்காலத் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த iPhone-க்காகப் பராமரிக்கப்படும் சாதனத் தகவலை Apple புதுப்பித்துள்ளது என்பதாகும்.
இந்தச் செய்திகள் உங்கள் iPhone-ஐப் பயன்படுத்தும் திறனை அல்லது உங்கள் பேட்டரியைப் பாதிக்காது.
iPhone பாகங்கள் மற்றும் சேவை வரலாறு பற்றி மேலும் அறிக
சுயாதீனப் பழுதுநீக்கம் வழங்குநர்கள் அசல் Apple பாகங்கள், கருவிகள், பயிற்சி, சேவை வழிகாட்டிகள், கண்டறியும் கருவிகள் மற்றும் வளங்கள் ஆகியவற்றுக்கான அணுகலைக் கொண்டுள்ளனர். சுயாதீனப் பழுதுநீக்கம் வழங்குநர்களால் செய்யப்படும் பழுதுநீக்கங்கள் Apple-இன் உத்தரவாதம் அல்லது AppleCare திட்டங்களின் கீழ் வராது, ஆனால் வழங்குநரின் சொந்தப் பழுதுநீக்க உத்தரவாதத்தின் கீழ் வரக்கூடும்.
சுய சேவைப் பழுதுநீக்க அசல் Apple பாகங்கள், கருவிகள் மற்றும் பழுதுபார்ப்பு கையேடுகளுக்கான அணுகலை வழங்குகிறது, இதன் மூலம் எலக்ட்ரானிக் சாதனங்களைப் பழுதுபார்ப்பதில் உள்ள சிக்கல்களை நன்கு அறிந்த வாடிக்கையாளர்கள் உத்தரவாதக் காலம் முடிந்த பிறகும் தங்கள் சாதனங்களைத் தாங்களே பழுதுநீக்க முடியும். 2021 அல்லது அதற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட iPhone மாடல்களுக்கு, சுய சேவைப் பழுதுநீக்கம் தற்போது சில நாடுகள் அல்லது பிராந்தியங்களில் கிடைக்கிறது. தகுதிபெறும் மாடல்களுக்கான பழுதுநீக்கக் கையேடுகளைப் பார்க்கவும் பாகங்களை ஆர்டர் செய்யவும், சுய சேவைப் பழுதுநீக்கம் பக்கத்திற்குச் செல்லவும்.
முன்பு பயன்படுத்தப்பட்ட ஒரு பாகம் வேறு iPhone-இல் செயல்படக்கூடும், ஆனால் முந்தைய பயன்பாடு அல்லது மாற்றியமைத்தல் காரணமாக, அதன் செயல்திறனும் தரமும் சீரற்றதாக இருக்கலாம்.
iOS 15.1 அல்லது அதற்கு முந்தையதில், அறியப்படாத செய்திக்குப் பதிலாக முக்கியமான பேட்டரி செய்தி தோன்றும். நீங்கள் அமைப்புகள் செயலியைத் திறந்து, பேட்டரி என்பதைத் தட்டி, பின்னர் பேட்டரி ஆரோக்கியம் மற்றும் சார்ஜிங் என்பதைத் தட்டுவதன் மூலம் அந்தச் செய்தியைக் காணலாம்.