iPhone 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளின் பேட்டரி மற்றும் செயல்திறன் பற்றி
உங்கள் பேட்டரி வேதியியல் ரீதியாகப் பழையதாகும்போது ஏற்படும் செயல்திறன் பாதிப்புகளைக் குறைப்பதற்காக, iPhone 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் பயன்படுத்தும் உள்ளமைக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைப்பைப் பற்றி அறிக.
பேட்டரிகள் பழையதாகும்போது அவற்றின் செயல்திறன் பற்றி
காலப்போக்கில் பேட்டரியின் செயல்திறன் குறையும்போது, முடிந்தவரை சிறந்த செயல்திறனை வழங்குவதற்காக உங்கள் iPhone-இல் உள்ளமைக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைப்பு தானியங்கி முறையில், எப்போதும் இயங்கக்கூடியது மற்றும் செயல்படக்கூடியது. உங்கள் iPhone-இன் பவர் தேவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன, மேலும் இந்தத் தேவைகளை நிகழ் நேரத்தில் பூர்த்தி செய்யும் வகையில் அமைப்பு அதன் செயல்திறனை நிர்வகிக்கிறது. பேட்டரி பழையதாவதால் ஏற்படும் செயல்திறன் பாதிப்புகளைக் குறைக்க அமைப்பு உங்கள் iPhone-ஐ அனுமதிக்கிறது.
அமைப்பானது செயல்திறன் பாதிப்புகளை முடிந்தவரை குறைத்தாலும், பேட்டரி பழையதாகிப்போவதால் காலப்போக்கில் கவனிக்கத்தக்க, அநேகமாகத் தற்காலிக, விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பேட்டரியின் நிலை, சார்ஜ் அளவு மற்றும் உங்கள் iPhone கையாளும் பணிகளைப் பொறுத்து, எடுத்துக்காட்டுகளில் ஆப்ஸ் தொடங்குவதற்கு அதிக நேரம் எடுப்பது, குறைந்த ஃபிரேம் ரேட்டுகள் ஆகியவை அடங்கலாம். நீங்கள் அதிகரித்த செயலாக்க நேரங்கள், குறைந்த வயர்லெஸ்-தரவுச் செயல்திறன், பின்னொளி மங்குதல் அல்லது குறைந்த ஸ்பீக்கர் ஒலிஅளவு போன்றவற்றையும் பார்க்கலாம். தீவிரமான சூழல்களில், கேமரா ஃபிளாஷ் அல்லது பிற கேமரா அம்சங்கள் தற்காலிகமாக முடக்கப்படலாம்.
iPhone 15 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில் பேட்டரியைப் பற்றிய தகவலைப் பெறுங்கள்
iOS 17.4 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளைக் கொண்ட iPhone 15 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில், நீங்கள் பேட்டரி ஆரோக்கியத்தையும் பேட்டரியின் அதிகபட்சக் கொள்திறனையும் பார்க்கலாம். பேட்டரியை மாற்றும்படி பரிந்துரைக்கப்படுகிறதா என்பதையும், சுழற்சி எண்ணிக்கை, உங்கள் பேட்டரி தயாரிக்கப்பட்ட ஆண்டு, அது முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட ஆண்டு ஆகியவற்றையும் நீங்கள் பார்க்கலாம்:
அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து பேட்டரியைத் தட்டவும்.
பேட்டரி ஆரோக்கியத்தைத் தட்டவும்.
உங்கள் iPhone 11, 12, 13 அல்லது 14 மாடலில் பேட்டரி ஆரோக்கியத்தைச் சரிபார்க்கவும்
ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் அனைத்தும் நுகர்பொருட்களாகும், மேலும் அவை குறைந்த ஆயுட்காலம் கொண்டவை—இறுதியில் அவற்றின் திறனும் செயல்திறனும் குறைந்துவிடுவதால் அவற்றை மாற்ற வேண்டியுள்ளது. உங்கள் iPhone பேட்டரியின் ஆரோக்கியம் மற்றும் பேட்டரியை மாற்றப் பரிந்துரைக்கப்படுகிறதா என்பது பற்றி மேலும் அறிய:
அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து பேட்டரியைத் தட்டவும்.
பேட்டரி ஆரோக்கியம் மற்றும் சார்ஜிங்கைத் தட்டவும்.
மேலும் அறிக
பழைய பேட்டரியின் காரணமாக உங்கள் iPhone-இன் செயல்திறன் பாதிக்கப்பட்டிருந்தால், மேலும் பேட்டரியை மாற்றுவதற்கு நீங்கள் உதவி பெற விரும்பினால், சேவை விருப்பத்தேர்வுகளுக்காக Apple ஆதரவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
iPhone 14 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களின் பேட்டரிகள், சிறந்த சூழல்களில் 500 முழுமையான சார்ஜ் சுழற்சிகள் வரை அவற்றின் அசல் திறனில் 80 சதவீதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.* iPhone 15 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களின் பேட்டரிகள், சிறந்த சூழல்களில் 1000 முழுமையான சார்ஜ் சுழற்சிகள் வரை அவற்றின் அசல் திறனில் 80 சதவீதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.* எல்லா மாடல்களுக்கும், சாதனங்கள் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மற்றும் சார்ஜ் செய்யப்படும் விதத்தைப் பொறுத்து துல்லியமான கொள்திறனின் சதவீதம் உள்ளது. ஒரு வருட உத்தரவாதத்தில், உள்ளூர் நுகர்வோர் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் உரிமைகளுடன் சேர்த்து, குறைபாடுள்ள பேட்டரிக்கான சேவை கவரேஜூம் அடங்கும். லித்தியம்-அயன் பேட்டரிகளின் சார்ஜ் சுழற்சிகள் பற்றி அறிக.
பேட்டரிகள் ஒரு சிக்கலான தொழில்நுட்பமாகும், மேலும் பேட்டரியின் செயல்திறனுக்குப் பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன. உங்கள் iPhone-இன் பேட்டரியின் அதிகபட்சக் கொள்திறன் மற்றும் Apple எப்போது பேட்டரி சேவையைப் பரிந்துரைக்கிறது என்பது பற்றி மேலும் அறிக.
உங்கள் பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது எப்படி என்பதை அறிக.
உங்கள் iPhone-இன் செயல்திறனை மேம்படுத்துவது எப்படி என்பதை அறிக.
* நீங்கள் உங்கள் iPhone-ஐப் பயன்படுத்தும்போது, அதன் பேட்டரி சார்ஜ் சுழற்சிகளுக்கு உட்படுத்தப்படும். உங்கள் பேட்டரியின் திறனில் 100 சதவீதத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் ஒரு சார்ஜ் சுழற்சியை நிறைவு செய்கிறீர்கள். காலப்போக்கில் பேட்டரியின் திறன் குறையும் என்பதால், அசல் திறனில் 80 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை முழுமையான சார்ஜ் சுழற்சியின் இயல்பான மதிப்பாகக் கருதப்படுகிறது.