Apple Creator Studio - ஓர் அறிமுகம்

Apple Creator Studio-க்கு எப்படிச் சந்தா சேர்வது, இதில் என்னென்ன ஆப்ஸ் உள்ளன, சிஸ்டம் தேவைகள், மேலும் பலவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Apple Creator Studio என்பது படைப்பாற்றல் மற்றும் பணிக்கு உதவும் Apple ஆப்ஸைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். இதில் Final Cut Pro, Logic Pro, Pixelmator Pro, Motion, Compressor, MainStage ஆகியவை உள்ளன. இந்தச் சந்தாவில் Pages, Numbers, Keynote, Freeform ஆகியவற்றில் உள்ள பிரீமியம் உள்ளடக்கமும் கிடைக்கும்.*

Apple Creator Studio அம்சங்கள் குறித்த மேலோட்டப் பார்வை

Apple Creator Studio-ஐப் பதிவிறக்குதல்

இதில் உள்ளவை:

  • Mac 12.0-க்கான Final Cut Pro

  • iPad 3.0-க்கான Final Cut Pro

  • Mac 12.0-க்கான Logic Pro

  • iPad 3.0-க்கான Logic Pro

  • Mac 4.0-க்கான Pixelmator Pro

  • iPad 4.0-க்கான Pixelmator Pro

  • Motion 6.0 (Mac)

  • Compressor 5.0 (Mac)

  • MainStage 4.0 (Mac)

  • Pages 15.1 (Mac, iPad மற்றும் iPhone)

  • Numbers 15.1 (Mac, iPad மற்றும் iPhone)

  • Keynote 15.1 (Mac, iPad மற்றும் iPhone)

Apple Creator Studio-க்குச் சந்தா சேர்தல்

நீங்கள் Apple Creator Studio ஆப்ஸை முதன்முறையாகத் திறக்கும்போது, ஒரு மாதக் கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவுசெய்வதுடன், மாதாந்திர அல்லது வருடாந்திரச் சந்தாவைத் தேர்வுசெய்யலாம்.

  1. Apple Creator Studio ஆப்ஸில் ஏதேனும் ஒன்றைத் திறந்து, தொடர்க என்பதைக் கிளிக் செய்து அல்லது தட்டி திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள். Pages, Numbers, Keynote ஆகியவற்றைப் பொறுத்த வரை, நீங்கள் பிரீமியம் உள்ளடக்கம் அல்லது அம்சங்களை அணுகும்போது ஆப்ஸிற்குள் இருந்தே சந்தா சேர முடியும்.

  2. கட்டணமற்ற உபயோகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதையோ கிடைக்கக்கூடிய பிற விருப்பத்தையோ கிளிக் செய்யுங்கள் அல்லது தட்டுங்கள். அதன்பிறகு, உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தி சந்தா சேர, திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள்.

  3. தொடங்க, Apple Creator Studio ஆப்ஸில் புதிய புராஜெக்ட் அல்லது ஆவணத்தை உருவாக்குங்கள் அல்லது ஏற்கெனவே உள்ள புராஜெக்ட்டையோ ஆவணத்தையோ திறங்கள்.

நீங்கள் ஏற்கெனவே Final Cut Pro iPad அல்லது iPadக்கான Logic Pro-க்குச் சந்தா சேர்ந்திருந்தால், மற்றொரு Apple Creator Studio ஆப்ஸைப் பதிவிறக்கிவிட்டுத் திறங்கள். அதன்பிறகு, ஆப்ஸிற்குள் இருந்தே சந்தா சேருங்கள்.

ஆப்ஸைத் தனித்தனியாகப் பர்ச்சேஸ் செய்தல்

Final Cut Pro, Motion, Compressor, Logic Pro, MainStage, Pixelmator Pro ஆகியவற்றை Mac-கில் App Store-க்குச் சென்று ஒருமுறை பர்ச்சேஸ் செய்யும் வசதியும் உள்ளது. நீங்கள் ஏற்கெனவே இந்த ஆப்ஸில் ஏதேனும் ஒன்றைப் பர்ச்சேஸ் செய்திருந்து உங்களிடம் Apple Creator Studio சந்தாவும் இருந்தால், அந்தச் செயலிகளின் இரண்டு பதிப்புகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் Mac-இல் இந்த ஆப்ஸின் இரண்டு பதிப்புகளையும் நிறுவிக்கொள்ளலாம். வெவ்வேறு பதிப்புகளை எளிதாக வேறுபடுத்தி அறியும் வகையில், Apple Creator Studio-இல் உள்ள ஆப்ஸ் ஒவ்வொன்றும் பிரத்தியேக ஐகானைக் கொண்டிருக்கும்.

உங்கள் குடும்பத்துடன் Apple Creator Studio-ஐப் பகிர்தல்

நீங்கள் குடும்பத்தில் பகிர்தல் அம்சத்தில் பதிவுசெய்திருந்தால், நீங்களும் வேறு ஐந்து குடும்ப உறுப்பினர்களும் (அதிகபட்சம்) Apple Creator Studio சந்தாவிற்கான அணுகலைப் பகிர்ந்துகொள்ளலாம். Apple Creator Studio மாதாந்திர அல்லது வருடாந்திரச் சந்தாவைப் பகிர, அது குடும்பத்தில் பகிர்தல் > சந்தா பகிர்தல் என்பதன் கீழ் காட்டப்படுவதையும் செயலில் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு முறை மட்டுமே பர்ச்சேஸ் செய்யக்கூடிய ஆப்ஸையும் நீங்கள் பகிரலாம்.

உங்கள் குடும்பத்தினருடன் ஆப்ஸையும் பர்ச்சேஸ்களையும் பகிர்வது பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

உயர்கல்வி மாணவர் மற்றும் கல்வியாளர் சந்தாக்களுக்குக் குடும்பப் பகிர்தல் அம்சம் கிடைக்காது.

Apple Creator Studio சிஸ்டம் தேவைகள்

Apple Creator Studio-இன் முழுமையான செயல்பாடுகள் macOS 26, iPadOS 26, iOS 26 ஆகியவற்றில் கிடைக்கின்றன. Apple Creator Studio App Store-இல் கிடைக்கிறது மற்றும் இதற்கு ஒரு Apple கணக்கு தேவை. அம்சங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை, மேலும் சில அம்சங்களைப் பயன்படுத்த இணைய இணைப்பு தேவைப்படக்கூடும். கூடுதல் கட்டணங்களும் விதிமுறைகளும் பொருந்தக்கூடும்.

ஒவ்வொரு Apple Creator Studio ஆப்ஸிற்கான குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகள் பின்வருமாறு:

  • Pixelmator Pro தவிர்த்து மற்ற அனைத்து Mac ஆப்ஸிற்கும் macOS 15.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை. Pixelmator Pro-க்கு macOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை.

  • Final Cut Pro:

    • Mac-இல் Final Cut Pro பயன்படுத்த macOS 15.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை.

    • iPad-இல் Final Cut Pro பயன்படுத்த iPadOS 18.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள், மேலும் Apple M1 சிப் அல்லது அதற்குப் பிந்தைய சிப்களுடன் கூடிய iPad, iPad Pro அல்லது iPad Air, iPad (A16) அல்லது iPad mini (A17 Pro) தேவை.

  • Logic Pro:

    • Mac-இல் Logic Pro பயன்படுத்த macOS 15.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள், மேலும் Apple silicon உடன் கூடிய ஒரு Mac தேவை.

    • iPad-இல் Logic Pro பயன்படுத்த iPadOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள், மேலும் Apple A12 Bionic சிப் அல்லது அதற்குப் பிந்தைய சிப்களுடன் கூடிய ஒரு iPad தேவை. சில அம்சங்களைப் பயன்படுத்த Apple A17 Pro சிப் அல்லது அதற்குப் பிந்தைய சிப்கள் தேவை.

  • Pixelmator Pro:

    • Mac-இல் Pixelmator Pro பயன்படுத்த macOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை.

    • iPad-இல் Pixelmator Pro பயன்படுத்த iPadOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள், Apple M1 சிப் அல்லது அதற்குப் பிந்தைய சிப்களுடன் கூடிய ஒரு iPad, iPad Pro அல்லது iPad Air, iPad (A16) அல்லது iPad mini (A17 Pro) தேவை.

  • Pages, Numbers மற்றும் Keynote:

    • Mac-இல் Pages, Numbers மற்றும் Keynote பயன்படுத்த macOS 15.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை.

    • iPad, iPhone மற்றும் Apple Vision Pro-இல் Pages, Numbers மற்றும் Keynote பயன்படுத்த iPadOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள், iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள், visionOS 2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை.

    • சில பிரீமியம் அம்சங்களைப் பயன்படுத்த macOS 26, iPadOS 26, iOS 26 அல்லது visionOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை.

  • Motion பயன்படுத்த macOS 15.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை.

  • Compressor பயன்படுத்த macOS 15.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் தேவை. சில அம்சங்களைப் பயன்படுத்த Apple silicon உடன் கூடிய Mac தேவை.

  • MainStage பயன்படுத்த macOS 15.6 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள், மேலும் Apple silicon உடன் கூடிய Mac தேவை.

மேலும் அறிக

Apple Creator Studio குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

* Freeform-இல் உள்ள பிரீமியம் உள்ளடக்கமும் அம்சங்களும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் Apple Creator Studio சந்தாவில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட தேதி: