குடும்பப் பகிர்வு மூலம் செயலிகளையும் வாங்குதல்களையும் பகிர்வது எப்படி

குடும்பப் பகிர்வு மூலம், குடும்ப ஒருங்கிணைப்பாளரால் வாங்குதல் பகிர்வை இயக்க முடியும், இதன்மூலம் குடும்பப் பகிர்வு குழுவில் உள்ள அனைவரும் செயலிகள், புத்தகங்கள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம்.

வாங்குதல் பகிர்வு எப்படி வேலை செய்கிறது

ஒட்டுமொத்த குடும்பக் குழுவிற்கும் வாங்குதல் பகிர்வை இயக்கக்கூடிய ஒரே உறுப்பினர் குடும்பப் பகிர்வு ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. குழுவில் உள்ள பிற உறுப்பினர்கள் தங்கள் சாதனத்தில் வாங்குதல் பகிர்வை இயக்கலாமா அல்லது பங்கேற்பதை நிராகரிக்கலாமா என்பதைத் தேர்வுசெய்யலாம். குடும்ப ஒருங்கிணைப்பாளரும் குழுவில் உள்ள பிற குடும்ப உறுப்பினர்களும் வாங்குதல் பகிர்வை இயக்கியிருந்தால், செயலிகள், இசை, திரைப்படங்கள், பல உள்ளடக்கம் போன்று ஒருவர் மற்றவரின் பகிர்ந்த உள்ளடக்கத்திற்கான அணுகலைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் வாங்குதல் பகிர்வை முடக்கும் வரை, அனைவரின் வாங்குதல்களுக்கும் குடும்ப ஒருங்கிணைப்பாளர் கட்டணம் செலுத்துவார்.

குடும்ப உறுப்பினர்கள் App Store, iTunes Store, Apple Books அல்லது Apple TV செயலியில், வாங்கப்பட்டவை பக்கத்தில் பகிர்ந்த உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். செயலி சார்ந்த வாங்குதல்கள் பகிரத்தக்கதாக இருந்தாலும் கூட, வாங்கப்பட்ட பக்கத்தில் அவை காட்டப்படாது, சிலவற்றைப் பகிர முடியாது.

நீங்கள் பகிரக்கூடிய உள்ளடக்கம், பகிர முடியாத உள்ளடக்கம் என்னென்ன என்பதை அறியவும்

உங்கள் iPhone அல்லது iPad-இல் வாங்குதல் பகிர்வை இயக்குதல்

வாங்குதல் பகிர்வைப் பயன்படுத்த, நீங்கள் குடும்பப் பகிர்வை அமைக்க வேண்டியிருக்கும்.

  1. அமைப்புகள் செயலியைத் திறந்து, குடும்பம் என்பதைத் தட்டவும்.

  2. வாங்குதல் பகிர்வு என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் பெயரைத் தட்டி, எனது வாங்குதல்களைப் பகிர்க என்பதை இயக்கவும், பிறகு திரையில் தோன்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

  4. பேமெண்ட் முறையை உறுதிப்படுத்த, வாங்குதல் பகிர்வை மீண்டும் தட்டி, பகிரப்பட்ட பேமெண்ட் முறை தகவல்களைச் சரிபார்க்கவும். இது குடும்ப ஒருங்கிணைப்பாளரின் இயல்புநிலை பேமெண்ட் முறையாக மாறும்.

    வாங்குதல் பகிர்விற்கான பேமெண்ட் முறையைக் காட்டும் iPhone திரை.

உங்கள் Mac-இல் வாங்குதல் பகிர்வை இயக்குதல்

வாங்குதல் பகிர்வைப் பயன்படுத்த, நீங்கள் குடும்பப் பகிர்வை அமைக்க வேண்டியிருக்கும்.

  1. Apple மெனு  > சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, குடும்பம் என்பதை கிளிக் செய்யவும்.

  2. வாங்குதல் பகிர்வை கிளிக் செய்யவும்..

  3. உங்கள் பெயரை கிளிக் செய்து, எனது வாங்குதல்களைப் பகிர்க என்பதை இயக்கவும்.

  4. பேமெண்ட் முறையை உறுதிப்படுத்த, பகிரப்பட்ட பேமெண்ட் முறைகளின் கீழ் சரிபார்க்கவும். இது குடும்ப ஒருங்கிணைப்பாளரின் இயல்புநிலை பேமெண்ட் முறையாக மாறும்.

    வாங்குதல் பகிர்விற்கான பேமெண்ட் முறைகளைக் காட்டும் Mac திரை.

நீங்கள் வாங்குதல் பகிர்வை இயக்கும்போது, அனைவரது வாங்குதல்களுக்கான கட்டணம், குடும்ப ஒருங்கிணைப்பாளரின் பேமெண்ட் முறையில் விதிக்கப்படும்.* குடும்ப ஒருங்கிணைப்பாளர் இவற்றைச் செய்யலாம்:

ஒரு குடும்ப உறுப்பினர் முதன்முறையாக தங்கள் சாதனத்தில் ஒரு வாங்குதலை மேற்கொள்ளும்போது, குடும்ப ஒருங்கிணைப்பாளர் CVV-ஐ உள்ளிடுவதன் மூலம் பேமெண்ட் முறையைச் சரிபார்க்க வேண்டியிருக்கும்.

* Iநீங்கள் குடும்பப் பகிர்வு குழுவில் உள்ளீர்கள் எனில், நீங்கள் மேற்கொள்ளும் வாங்குதல்களுக்கான கட்டணம் உங்கள் Apple கணக்கு பேலன்ஸில் விதிக்கப்படும். உங்கள் Apple கணக்கு பேலன்ஸில் வாங்குதலுக்குத் தேவையான பணம் இல்லாதபோது, வாங்குதல் பகிர்வு இயக்கப்பட்டிருந்தால், மீதம் தேவைப்படும் பணம் குடும்பப் பகிர்வு ஒருங்கிணைப்பாளருக்கு விதிக்கப்படும்.

வாங்குதல் பகிர்வை முடக்குதல்

நீங்கள் குடும்பப் பகிர்வு ஒருங்கிணைப்பாளராக உள்ளீர்கள், குடும்ப உறுப்பினர்களின் வாங்குதல்களுக்கு அவரவர்களே பணம் செலுத்த வேண்டும் என விரும்புகிறீர்கள் எனில், வாங்குதல் பகிர்வை முடக்கவும்.

உங்கள் iPhone அல்லது iPad-இல்

  1. அமைப்புகள் செயலியைத் திறந்து, குடும்பம் என்பதைத் தட்டவும்.

  2. வாங்குதல் பகிர்வு என்பதைத் தட்டவும்.

  3. Stop Purchase Sharing (வாங்குதல் பகிர்வை நிறுத்து என்பதை) தட்டி, உறுதிப்படுத்துவதற்கு பகிர்வை நிறுத்து என்பதைத் தட்டவும்.

உங்கள் Mac-இல்

  1. Apple மெனு  > சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  2. குடும்பம் என்பதை கிளிக் செய்து, வாங்குதல் பகிர்வு என்பதை கிளிக் செய்யவும்.

  3. Stop Purchase Sharing (வாங்குதல் பகிர்வை நிறுத்து என்பதை) கிளிக் செய்து, உறுதிப்படுத்துவதற்கு Stop Purchase Sharing (வாங்குதல் பகிர்வை நிறுத்து என்பதை) கிளிக் செய்யவும்.

வாங்குதல் பகிர்வு முடக்கப்பட்டிருக்கும்போது, உங்கள் வாங்குதல்களைப் பகிர்வதை நிறுத்துகிறீர்கள் மற்றும் குடும்பப் பகிர்வு குழுவில் உள்ள பிற குடும்ப உறுப்பினர்களின் வாங்குதல்களுக்கான அணுகலையும் இழக்கிறீர்கள். எனினும், நீங்கள் iCloud+, Apple TV+ போன்ற பல சந்தாக்களைப் பகிர்வதைத் தொடரலாம் — ஆனால் அனைவரும் வாங்குதல்களுக்கு தங்களது சொந்த பேமெண்ட் முறையைப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தையின் வாங்குதல்களை அனுமதித்தல்

நீங்கள் குழந்தைகள் வாங்குவதையும் பதிவிறக்குவதையும் பார்க்க மற்றும் அனுமதிக்க விரும்பினால், வாங்குவதற்குக் கேட்கவும் என்பதை அமைக்கவும். செயலிகள், திரைப்படங்கள் மற்றும் பிற உள்ளடக்கத்தை வாங்க ஒரு குழந்தை கேட்கும்போது, குடும்பப் பகிர்வு ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு ஒன்றைப் பெறுவார், அவர் தனது சாதனத்திலிருந்தே கோரிக்கையை அனுமதிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

வாங்குவதற்குக் கேட்கவும் என்பதை இயக்குவது எப்படி என அறியவும்

வெளியிடப்பட்ட தேதி: