AirPods மற்றும் AirPods Proவை எப்படி மீட்டமைப்பது?
AirPods சார்ஜ் ஆகவில்லை என்றாலோ வேறு சிக்கலைச் சரிசெய்யவோ அதை மீட்டமைக்க வேண்டியிருக்கலாம்.
AirPods 1, AirPods 2, AirPods 3, AirPods Pro 1 அல்லது AirPods Pro 2 மாடலை மீட்டமைத்தல்
AirPodsஸை அதன் சார்ஜிங் கேஸில் வைத்து மூடி, 30 வினாடிகள் காத்திருக்கவும்.
AirPods உடன் இணைக்கப்பட்டுள்ள iPhone அல்லது iPadல், அமைப்புகள் > Bluetooth என்பதற்குச் செல்லவும்:
எனது சாதனங்கள் பட்டியலில் உங்கள் AirPods காட்டப்பட்டால், AirPodsஸுக்கு அடுத்துள்ள மேலும் தகவல் பட்டனைத் தட்டி, இந்தச் சாதனத்தை மறந்துவிடு என்பதைத் தட்டி, உறுதிப்படுத்த மீண்டும் தட்டவும்.
உங்கள் AirPods பட்டியலில் காட்டப்படவில்லை என்றால், அடுத்த படிக்குச் செல்லவும்.
சார்ஜிங் கேஸின் மூடியைத் திறக்கவும்.
கேஸின் பின்புறத்தில் உள்ள அமைவு பட்டனை சுமார் 15 வினாடிகள் அழுத்திப் பிடிக்கவும்.
கேஸின் முன்புறத்தில் உள்ள ஸ்டேட்டஸ் லைட் ஆம்பர் நிறத்தில் ஒளிர்ந்து, பின்னர் வெள்ளை நிறத்தில் ஒளிரும்போது, சாதனத்தின் திரையில் உள்ள படிகளைப் பின்பற்றி உங்கள் AirPodsஸை மீண்டும் இணைக்கலாம்.
AirPods 4 (அனைத்து மாடல்களும்) அல்லது AirPods Pro 3 மாடலை மீட்டமைத்தல்
AirPodsஸை அதன் சார்ஜிங் கேஸில் வைத்து மூடி, 30 வினாடிகள் காத்திருக்கவும்.
உங்கள் AirPods உடன் இணைக்கப்பட்டுள்ள iPhone அல்லது iPadல், அமைப்புகள் > Bluetooth என்பதற்குச் செல்லவும்:
எனது சாதனங்கள் பட்டியலில் உங்கள் AirPods காட்டப்பட்டால், AirPodsஸுக்கு அடுத்துள்ள மேலும் தகவல் பட்டனைத் தட்டி, இந்தச் சாதனத்தை மறந்துவிடு என்பதைத் தட்டி, உறுதிப்படுத்த மீண்டும் தட்டவும்.
உங்கள் AirPods பட்டியலில் காட்டப்படவில்லை என்றால், அடுத்த படிக்குச் செல்லவும்.
சார்ஜிங் கேஸின் மூடியைத் திறக்கவும்.
ஸ்டேட்டஸ் லைட் எரியும்போது, கேஸின் முன்பக்கத்தை இருமுறை தட்டவும்.
ஸ்டேட்டஸ் லைட் வெள்ளை நிறத்தில் ஒளிரும்போது மீண்டும் இருமுறை தட்டவும்.
ஸ்டேட்டஸ் லைட் வேகமாக ஒளிரும்போது மூன்றாவது தடவை இருமுறை தட்டவும்.
ஸ்டேட்டஸ் லைட் ஆம்பர் நிறத்தில் ஒளிர்ந்து, பின்னர் வெள்ளை நிறத்தில் ஒளிரும்போது, உங்கள் சாதனத்தின் திரையில் உள்ள படிகளைப் பின்பற்றி AirPodsஸை மீண்டும் இணைக்கலாம்.
AirPodsஸை மீட்டமைக்கும்போது ஸ்டேட்டஸ் லைட் வெள்ளை நிறத்தில் ஒளிரவில்லை என்றால்
AirPodsஸை சார்ஜிங் கேஸில் வைத்து 20 வினாடிகள் மூடியை மூடவும்.
சார்ஜிங் கேஸின் மூடியைத் திறக்கவும்.
உங்கள் AirPods மாடலைப் பொறுத்து:
AirPods 1, AirPods 2, AirPods 3, AirPods Pro 1, AirPods Pro 2 ஆகியவற்றுக்கு, கேஸின் முன்பக்கத்தில் உள்ள ஸ்டேட்டஸ் லைட் ஆம்பர் நிறத்தில் ஒளிர்ந்து, பின்னர் வெள்ளை நிறத்தில் ஒளிரும் வரை, கேஸில் உள்ள அமைவு பட்டனை 15 வினாடிகள் மீண்டும் அழுத்திப் பிடிக்கவும்.
AirPods 4 மற்றும் AirPods Pro 3 மாடல்களுக்கு,ஸ்டேட்டஸ் லைட் எரியும்போது கேஸின் முன்பக்கத்தை இருமுறை தட்டவும், ஸ்டேட்டஸ் லைட் வெள்ளை நிறத்தில் ஒளிரும்போது மீண்டும் இருமுறை தட்டவும். ஸ்டேட்டஸ் லைட் வேகமாக ஒளிரும்போது, ஸ்டேட்டஸ் லைட் ஆம்பர் நிறத்தில் ஒளிர்ந்து, பின்னர் வெள்ளை நிறத்தில் ஒளிரும் வரை, மூன்றாவது தடவை இருமுறை தட்டவும்.
உங்கள் AirPodsஸை மீண்டும் இணைக்க: AirPods அதன் சார்ஜிங் கேஸில் இருக்கும்போது அதன் மூடியைத் திறந்து வைத்துக்கொண்டு, AirPodsஸை உங்கள் சாதனத்திற்கு அருகில் வைத்து, சாதனத்தின் திரையில் உள்ள படிகளைப் பின்பற்றவும்.
மேலும் அறிக
உங்கள் மாற்று AirPods அல்லது சார்ஜிங் கேஸை அமைத்தல்