உங்கள் மாற்று AirPods அல்லது சார்ஜிங் கேஸை அமைக்கவும்

உங்கள் மாற்று AirPods இயர்பட்கள் அல்லது சார்ஜிங் கேஸைப் பெறும்போது, ​​உங்கள் iPhone அல்லது iPad இல் உங்கள் AirPods ஐ மீண்டும் பயன்படுத்த இந்தப் படிநிலைகளைப் பின்பற்றவும்.

நீங்கள் புதிய AirPods ஐ வாங்கியிருந்தால், AirPods ஐப் புதியதாக அமைக்கவும்.

உங்கள் மாற்று AirPods 1, AirPods 2, AirPods 3, AirPods Pro அல்லது மாற்று சார்ஜிங் கேஸை அமைக்கவும்

  1. இரண்டு AirPods ஐயும் உங்கள் சார்ஜிங் கேஸில் போடவும்.

  2. கேஸை மின்இணைப்பில் இணைத்து, மூடியை மூடி 20 நிமிடங்கள் காத்திருக்கவும்.

  3. மூடியைத் திறந்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:

    • நிலை ஒளி வெள்ளையாக ஒளிர்ந்தால், படிநிலை 5 க்குச் செல்லவும்.

    • நிலை ஒளி வெள்ளையாக ஒளிராவிட்டால், அடுத்த படிநிலையைத் தொடரவும்.

  4. மூடி திறந்திருக்கும்போது, நிலை ஒளி ஆம்பர் நிறத்திலும், பின்னர் வெள்ளை நிறத்திலும் ஒளிரும் வரை, கேஸின் பின்புறத்தில் உள்ள அமைப்பு பட்டனை 15 வினாடிகள் அழுத்திப் பிடிக்கவும். நிலை ஒளி இன்னமும் வெள்ளை நிறத்தில் ஒளிரவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

    மூடி திறந்தபடியும் பின்புறத்தில் உள்ள பட்டன் அழுத்தப்பட்டபடியும் AirPods Pro ஐ அதன் கேஸுக்குள் வைக்கவும்.
  5. நிலை ஒளி வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்தபடி இருக்க, உங்கள் சார்ஜிங் கேஸின் மூடியை மூடவும்.

  6. திரையில் தோன்றும் அமைப்பு அனிமேஷனில் இணைப்பு என்பதை தட்டுவதற்கு முன், அமைப்புகள் என்பதற்கு சென்று > Bluetooth, பகுதிக்குச் செல்லுங்கள். பிறகு கீழ்கண்ட படிநிலைகளைச் செய்யுங்கள்:

    • உங்கள் AirPods அமைப்புகள் > Bluetooth இல் தோன்றினால், உங்கள் AirPods க்கு அடுத்துள்ள மேலும் தகவல் என்ற பட்டனைத் தட்டவும்பூஜ்ஜியம், இந்தச் சாதனத்தை மறந்துவிடு என்பதைத் தட்டவும், பின்னர் உறுதிப்படுத்த மீண்டும் தட்டவும். அடுத்த படிநிலைக்குத் தொடரவும்.

    • உங்கள் AirPods அங்கு தெரியவில்லை என்றால், அடுத்த படிநிலைக்குச் செல்லவும்.

  7. மூடியைத் திறந்து, உங்கள் iPhone அல்லது iPad இன் முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  8. அமைப்பு அனிமேஷனில், இணை என்பதைத் தட்டவும், பின்னர் முடிந்தது என்பதைத் தட்டவும். AirPods பயன்படுத்தத் தயாராக உள்ளன.

உங்கள் மாற்று AirPods 4 (அனைத்து மாடல்களும்) அல்லது மாற்று சார்ஜிங் கேஸை அமைக்கவும்

  1. இரண்டு AirPods ஐயும் உங்கள் சார்ஜிங் கேஸில் போடவும்.

  2. கேஸை மின்இணைப்பில் இணைத்து, மூடியை மூடி 20 நிமிடங்கள் காத்திருக்கவும்.

  3. மூடியைத் திறந்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:

    • நிலை ஒளி வெள்ளையாக ஒளிர்ந்தால், படிநிலை 5 க்குச் செல்லவும்.

    • நிலை ஒளி வெள்ளையாக ஒளிராவிட்டால், அடுத்த படிநிலையைத் தொடரவும்.

  4. நிலை ஒளி எரிந்து கொண்டிருக்கும்போது, கேஸின் முன்புறத்தை இருமுறை தட்டவும். பிறகு, ஒளி வெள்ளையாக மின்னும்போது மீண்டும் இருமுறை தட்டவும். அதன் பின், ஒளி இன்னும் வேகமாக மின்னும்போது மூன்றாவது முறையாக இருமுறை தட்டவும். நிலை ஒளி ஆம்பர் நிறத்தில் ஒளிர்ந்து பின்னர் வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்தால், அடுத்த படிநிலைக்குச் செல்லவும். நிலை ஒளி இன்னமும் வெள்ளை நிறத்தில் ஒளிரவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள் .

     AirPods 4 அதன் கேஸுக்குள் வைத்தபடி, மூடியைத் திறந்த நிலையில் வைத்திருங்கள்.
  5. நிலை ஒளி வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்தபடி இருக்க, உங்கள் சார்ஜிங் கேஸின் மூடியை மூடவும்.

  6. திரையில் தோன்றும் அமைப்பு அனிமேஷனில் இணைப்பு என்பதை தட்டுவதற்கு முன், அமைப்புகள் என்பதற்கு சென்று > Bluetooth, பகுதிக்குச் செல்லுங்கள். பிறகு கீழ்கண்ட படிநிலைகளைச் செய்யுங்கள்:

    • உங்கள் AirPods அமைப்புகள் > Bluetooth இல் தோன்றினால், உங்கள் AirPods க்கு அடுத்துள்ள மேலும் தகவல் என்ற பட்டனைத் தட்டவும்பூஜ்ஜியம், இந்தச் சாதனத்தை மறந்துவிடு என்பதைத் தட்டவும், பின்னர் உறுதிப்படுத்த மீண்டும் தட்டவும். அடுத்த படிநிலைக்குத் தொடரவும்.

    • உங்கள் AirPods அங்கு தெரியவில்லை என்றால், அடுத்த படிநிலைக்குச் செல்லவும்.

  7. மூடியைத் திறந்து, உங்கள் iPhone அல்லது iPad இன் முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  8. அமைப்பு அனிமேஷனில், இணை என்பதைத் தட்டவும், பின்னர் முடிந்தது என்பதைத் தட்டவும். AirPods பயன்படுத்தத் தயாராக உள்ளன.

மேலும் உதவி தேவையா?

என்ன நடக்கிறது என்பது பற்றித் தொடர்ந்து சொல்லுங்கள், அடுத்து நீங்கள் என்ன செய்யலாம் என்பதை நாங்கள் பரிந்துரைப்போம்.

பரிந்துரைகளைப் பெறுங்கள்

வெளியிடப்பட்ட தேதி: