உங்கள் iPhone அல்லது iPadல் மின்னஞ்சல் அனுப்ப முடியாவிட்டால்

உங்கள் iPhone அல்லது iPadல் உள்ள Mail செயலியில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப முடியாவிட்டால், நீங்கள் சில விஷயங்களை முயன்று பார்க்கலாம்.

தொடங்கும் முன்

நினைவில் வைத்து சரிபார்த்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

அனுப்பப்படாத மின்னஞ்சலுக்கு அவுட்பாக்ஸைப் பார்க்கவும்

உங்கள் மின்னஞ்சல் அனுப்பப்படவில்லை என்று மெசேஜ் வந்தால், அந்த மின்னஞ்சல் உங்கள் அவுட்பாக்ஸிற்குச் செல்லும். உங்கள் அவுட்பாக்ஸைச் சரிபார்த்துவிட்டு, இந்தப் படிகளைப் பயன்படுத்தி மீண்டும் மின்னஞ்சலை அனுப்ப முயலவும்:

  1. Mail இல், மெயில்பாக்ஸ்களின் பட்டியலுக்குச் செல்லவும்.

  2. அவுட்பாக்ஸைத் தட்டவும். அவுட்பாக்ஸில் எதுவும் இல்லை என்றால், உங்கள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்று அர்த்தம்.

    iOS இல் உள்ள மெயில்பாக்ஸ்கள் பக்கத்தில், அனுப்பப்படாத மின்னஞ்சல் மெசேஜ்களுக்கு அவுட்பாக்ஸைப் பார்க்கலாம்.
  3. அவுட்பாக்ஸில் உள்ள மின்னஞ்சலைத் தட்டவும். பெறுநரின் மின்னஞ்சல் முகவரி சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

  4. அனுப்பு என்பதைத் தட்டவும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைச் சரிபார்க்கவும்.

உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கான கடவுச்சொல்லை உள்ளிடுமாறு Mail கேட்டால், உங்கள் கடவுச்சொல் சரியானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைச் சரிபார்க்க, உங்கள் மின்னஞ்சல் வழங்குநரின் இணையதளத்தில் உள்நுழையவும்.

உங்களுக்கு இப்போதும் பயனர் பெயர் அல்லது கடவுச்சொல் பிழை ஏற்பட்டால், உங்கள் மின்னஞ்சல் வழங்குநர் அல்லது சிஸ்டம் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் மின்னஞ்சல் வழங்குநர் அல்லது சிஸ்டம் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்.

  1. சேவை செயலிழக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க உங்கள் மின்னஞ்சல் வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அவர்களின் வலைபக்கத்தின் நிலையைப் பார்க்கவும்.

  2. உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்கு இரு படி சரிபார்ப்பு போன்ற ஏதேனும் பாதுகாப்பு அம்சங்கள் அல்லது கட்டுப்பாடுகளை இயக்கியுள்ளீர்களா என்று உங்கள் மின்னஞ்சல் வழங்குநர் அல்லது சிஸ்டம் நிர்வாகியிடம் கேட்கவும். உங்கள் சாதனத்தில் மின்னஞ்சலை அனுப்பவும் பெறவும் ஒரு சிறப்பு கடவுச்சொல் தேவைப்படலாம் அல்லது உங்கள் மின்னஞ்சல் வழங்குநரிடமிருந்து அங்கீகாரத்தைக் கோர வேண்டியிருக்கலாம்.

  3. உங்கள் மின்னஞ்சல் கணக்கு அமைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் மின்னஞ்சல் வழங்குநர் அல்லது சிஸ்டம் நிர்வாகியுடன் அவற்றைச் சரிபார்க்கவும்.

உங்கள் மின்னஞ்சல் கணக்கை நீக்கிவிட்டு மீண்டும் அமைக்கவும்

  1. உங்கள் கம்ப்யூட்டரில், உங்கள் மின்னஞ்சல் வழங்குநரின் இணையதளத்தில் உள்நுழையவும். உங்கள் எல்லா மின்னஞ்சல்களும் அங்கே இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும் அல்லது உங்கள் மின்னஞ்சல் உங்கள் iOS அல்லது iPadOS சாதனத்தில் இல்லாமல் வேறு எங்காவது சேமிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

  2. உங்கள் சாதனத்தில், அமைப்புகள் > ஆப்ஸ் > Mail என்பதற்குச் சென்று Mail கணக்குகளைத் தட்டவும்.

  3. நீங்கள் அகற்ற விரும்பும் மின்னஞ்சல் கணக்கைத் தட்டவும்.

  4. கணக்கை நீக்கு என்பதைத் தட்டவும்.

  5. உங்கள் கணக்கை மீண்டும் சேர்க்கவும்.

இந்தக் கட்டுரையில் உள்ள படிகள் உதவவில்லை என்றால், மேலும் தகவலுக்கு உங்கள் மின்னஞ்சல் சேவை வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும் உதவி தேவையா?

என்ன நடக்கிறது என்பது பற்றித் தொடர்ந்து சொல்லுங்கள், அடுத்து நீங்கள் என்ன செய்யலாம் என்பதை நாங்கள் பரிந்துரைப்போம்.

பரிந்துரைகளைப் பெறுங்கள்

வெளியிடப்பட்ட தேதி: