Siriஐக் கேளுங்கள்

குறிப்பு: Siriஐப் பயன்படுத்த நீங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்படி Siriஐக் கேட்பதற்கு முன், நீங்கள் Siriஐச் செயல்படுத்தியிருக்க வேண்டும். iPhoneஇல், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • உங்கள் குரல் மூலம்: “Siri” அல்லது “Hey Siri” எனச் சொல்லுங்கள் (இந்த விருப்பம் கிடைத்து, Siri அமைப்புகளில் ஆன் செய்யப்பட்டிருந்தால்). உங்கள் சாதனத்திலும் மொழியிலும் “Hey Siri” அல்லது “Siri” அம்சம் கிடைக்கிறதா என்று பார்க்க, iOS மற்றும் iPadOS அம்சங்கள் கிடைக்கும் தன்மை இணையதளத்தைப் பார்க்கவும்.

  • Face ID உடன் கூடிய iPhoneஇல்: பக்கவாட்டு பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

  • முகப்பு பட்டனுடன் கூடிய iPhoneஇல்: முகப்பு பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

  • EarPods உடன்: மையத்தில் அல்லது அழைப்பு பட்டனை அழுத்தி பிடிக்கவும்.

  • CarPlay உடன்: ஸ்டீயரிங் வீலில் உள்ள குரல் கட்டளை பட்டனை அழுத்திப் பிடிக்கவும் அல்லது CarPlay முகப்புத் திரையில் உள்ள முகப்பு பட்டனைத் தொட்டு பிடிக்கவும்.

  • Siri Eyes Free மூலம்: உங்கள் ஸ்டீயரிங் வீலில் உள்ள குரல் கட்டளை பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.