ஃபோன் செயலியின் லே-அவுட்டை மாற்றுதல்
“பிடித்தவை”, “சமீபத்தியவை”, “வாயிஸ்மெயில்” ஆகியற்றை ஒரே தாவலில் காட்டும் ஒருங்கிணக்கப்பட்ட லே-அவுட்டைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம் அல்லது அவற்றைத் தனித்தனி தாவல்களாகக் காட்டும் கிளாசிக் லே-அவுட்டைத் தேர்வுசெய்யலாம்.
iPhoneஇல் ஃபோன்
செயலிக்குச் செல்லவும்.திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “அழைப்புகள்” (ஒருங்கிணைக்கப்பட்ட லே-அவுட்) அல்லது “சமீபத்தியவை” (கிளாசிக் லே-அவுட்) என்பதைத் தட்டவும்.
-ஐத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்: ஒருங்கிணைந்த தாவல்: உங்களுக்குப் பிடித்த தொடர்புகள், சமீபத்திய அழைப்புகள், வாய்ஸ்மெயில்கள் ஆகியவை திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “அழைப்புகள்” தாவலில் இணைக்கப்பட்டுக் காட்டப்படும்.
கிளாசிக்: உங்களுக்குப் பிடித்த தொடர்புகள், சமீபத்திய அழைப்புகள் மற்றும் வாய்ஸ்ம்மெயில்கள் திரையின் கீழ்ப்பகுதியில் தனித்தனி தாவல்களாகக் காட்டப்படும்.