Mac மற்றும் iPhoneஐ இணைக்க Bluethoothஐப் பயன்படுத்துதல்
macOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில்: Apple மெனு
> சிஸ்டம் அமைப்புகள் என்பதைத் தேர்வுசெய்து, சைடுபாரில் உள்ள Bluetooth® என்பதை கிளிக் செய்யவும். (நீங்கள் கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.) வலது பக்கத்தில் Bluetoothஐ ஆன் செய்யவும் (ஏற்கெனவே அது ஆன் செய்யப்படவில்லை எனில்). வலது பக்கத்தில் உங்கள் iPhoneஐத் தேர்ந்தெடுத்து “இணை” என்பதை கிளிக் செய்யவும்.macOS 12.5 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில்: Apple மெனு
> சிஸ்டம் விருப்பத்தேர்வுகள் என்பதைத் தேர்வுசெய்து Bluetooth என்பதை கிளிக் செய்யவும். Bluetooth ஆன் செய்யப்படாவிட்டால், “Bluetoothஐ ஆன் செய்” என்பதை கிளிக் செய்யவும். உங்கள் iPhoneஐத் தேர்ந்தெடுத்து “இணை” என்பதை கிளிக் செய்யவும்.