Exposé

நீங்கள் திறந்து வைத்துள்ள எல்லா செயலிகளையும் சாளரங்களையும் Exposé காட்டும்.

Exposéஐத் திறக்க, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • கீழ் விளிம்பில் இருந்து மேலே ஸ்வைப் செய்து திரையின் மையத்தில் இடைநிறுத்தவும்.

  • முகப்பு பட்டனை இருமுறை கிளிக் செய்யவும் (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல்).

மேலும் செயலிகளைப் பார்க்க, வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும். மற்றொரு செயலிக்கு மாற, அதைத் தட்டவும். Exposéஐ மூட, திரையைத் தட்டவும் அல்லது முகப்பு பட்டனை அழுத்தவும் (முகப்பு பட்டனைக் கொண்ட iPadஇல்).