iPadஇல் வாய்ஸ் மெமோ செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

iPadஇல் உள்ள “வாய்ஸ் மெமோ” செயலியில், விரிவுரைகள், பாடலுக்கான யோசனைகள் மற்றும் பலவற்றை எளிதில் பதிவுசெய்யலாம்.

வாய்ஸ் மெமோக்கள் செயலியில் உருவாக்கப்பட்ட பதிவு. பதிவுகளுக்கான பட்டியல் இடதுபுறத்தில் உள்ளது, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு மேலே காட்டப்பட்டுள்ளது. வலதுபுறத்தில், அலைவடிவத்தில் பிளேஹெட் உள்ளது, அதை நீங்கள் இழுத்து, பதிவில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடியும். அலைவடிவத்திற்கு மேலே “பகிர்”, ”பிடித்தவையில் சேர்”, “நகர்த்து”, “நீக்கு”, “திருத்து” ஆகிய பட்டன்களும், பிளேபேக் விருப்பங்கள், டிரான்ஸ்கிரிப்ஷன் ஆகியவையும் உள்ளன. டைம்லைனுக்குக் கீழே பிளேபேக் கட்டுப்பாடுகள் உள்ளன.

ஒரே தட்டலில் பதிவுசெய்தல்

பதிவுசெய்வதைத் தொடங்க, “பதிவுசெய்” பட்டன்-ஐத் தட்டவும்.

iCloud அமைப்புகளில் “வாய்ஸ் மெமோ” செயலி ஆன் செய்யப்பட்டு, நீங்கள் ஒரே Apple கணக்கு மூலம் உள்நுழைந்திருக்கும் iPhone, iPad, Mac, Apple Vision Pro ஆகிய சாதனங்களில் உங்கள் ஆடியோ பதிவுகள் தானாகக் காட்டப்படும்.

பதிவு திருத்தப்படுகிறது, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள ஆடியோ அலைவடிவத்தின் ஒரு பகுதியைச் சுற்றி இருக்கும் மஞ்சள் நிற டிரிம் ஹேண்டில்கள் இருக்கின்றன. பிளேபேக் கட்டுப்பாடுகளின் இடதுபக்கத்தில் டிரிம் பட்டன் (ஹேண்டில்களுக்கு வெளியே உள்ள பதிவுப் பகுதியை நீக்குவதற்கானது) மற்றும் நீக்கு பட்டன் (ஹேண்டில்களுக்கு வெளியே உள்ள பதிவுப் பகுதியை நீக்குவதற்கானது) உள்ளன.

உங்கள் பதிவுகளை மேம்படுத்துதல்

iPad, iPhone, Mac, Apple Watch, Apple Vision Pro போன்று எந்தச் சாதனத்தில் பதிவுசெய்தாலும் அதை iPad சாதனத்திலேயே நீங்கள் எளிதில் திருத்தலாம். பதிவுகள் பட்டியலில் இருந்து பதிவைத் தேர்ந்தெடுத்து திருத்த, “திருத்து” பட்டன்-ஐத் தட்டி, மேல் வலதுபுறத்தில் உள்ள “ட்ரிம் செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

வாய்ஸ் மெமோக்கள் செயலியில் உருவாக்கப்பட்ட பதிவு. பதிவுகளுக்கான பட்டியல் இடதுபுறத்தில் உள்ளது, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு மேலே காட்டப்பட்டுள்ளது. வலதுபுறத்தில், அலைவடிவத்தில் பிளேஹெட் உள்ளது, அதை நீங்கள் இழுத்து, பதிவில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடியும். அலைவடிவத்திற்கு மேலே பகிர், பிடித்தவை, நகர்த்து, நீக்கு, பிளேபேக் அமைப்புகளும், டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் திருத்து பட்டன்களும் உள்ளன. டைம்லைனுக்குக் கீழே பிளேபேக் கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆடியோ டிரான்ஸ்கிரிப்ட்களைப் பார்த்தல், தேடுதல்

“வாய்ஸ் மெமோ” செயலியில், நீங்கள் பதிவுசெய்யும்போது அல்லது செய்து முடித்த பிறகு உங்கள் பதிவுகளின் டிரான்ஸ்கிரிப்ட்களைப் பார்க்கலாம். டிரான்ஸ்கிரிப்ட்களில் எளிதில் தேடலாம் என்பதால் கண்டறியலாம் என்பதால் நீங்கள் தேடும் குறிப்பிட்ட தருணத்தைத் துல்லியமாகக் கண்டறியலாம். தேர்ந்தெடுத்த பதிவின் டிரான்ஸ்கிரிப்ட்டைப் பார்க்க, மேல் வலதுபுறத்தில் உள்ள “டிரான்ஸ்கிரிப்ஷன்” பட்டன்-ஐத் தட்டவும். குறிப்பிட்ட உரையைத் தேட, பதிவுகளின் பட்டியலுக்கு மேலே உள்ள தேடல் புலத்தில் அதை உள்ளிடவும். அந்த உரையைக் கொண்ட பதிவுகள் மட்டுமே அந்தப் பட்டியலில் காட்டப்படும்.

வாய்ஸ் மெமோக்கள் செயலியில் உருவாக்கப்பட்ட பதிவு. பதிவுகளுக்கான பட்டியல் இடதுபுறத்தில் உள்ளது, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு மேலே காட்டப்பட்டுள்ளது. வலதுபுறத்தில், அலைவடிவத்தில் பிளேஹெட் உள்ளது, அதை நீங்கள் இழுத்து, பதிவில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடியும். அலைவடிவத்திற்கு மேலே பகிர், பிடித்தவை, நகர்த்து, நீக்கு, பிளேபேக் அமைப்புகளும், டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் திருத்து பட்டன்களும் உள்ளன. டிரான்ஸ்கிரிப்ட்டைப் பார்க்க, “டிரான்ஸ்கிரிப்ஷன்” பட்டனைத் தட்டவும்.

பதிவைப் பகிர்தல் அல்லது எக்ஸ்போர்ட் செய்தல்

நீங்கள் பதிவை நண்பர்களுடன் பகிரலாம் அல்லது தொழில்முறையான எடிட்டிங் கருவிகள் மூலம் மேம்படுத்த அதை Logic Proக்கு எக்ஸ்போர்ட் செய்யலாம். பகிர்வதற்கு, பதிவைத் தட்டி, “பகிர்” பட்டன்-ஐத் தட்டவும். “விருப்பங்கள்” என்பதைத் தட்டி, ரெண்டர் செய்யப்பட்ட அல்லது திருத்தக்கூடிய கோப்பாகப் பகிர வேண்டுமா இல்லையா என்பதைத் தேர்வுசெய்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும். பகிர்வுக்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது எக்ஸ்போர்ட் செய்ய, மேலே ஸ்வைப் செய்து, “கோப்புகளில் சேமி” என்பதைத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?