கேபிள் மூலம் iPadஐ டிஸ்ப்ளேவுடன் இணைத்தல்
பொருத்தமான கேபிள் அல்லது அடாப்டர் மூலம், உங்கள் iPadஐ கம்ப்யூட்டர் டிஸ்ப்ளே, TV, புரொஜெக்டர் போன்ற இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவுடன் இணைக்கலாம், அதில் நீங்கள் iPad ஸ்கிரீனை பார்க்க முடியும்.
உங்கள் Macஐ iPad உடன் இணைப்பதன் மூலம் பணியிடத்தை நீட்டிக்க, Macக்கான இரண்டாவது டிஸ்ப்ளேயாக iPadஐப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்.
iPadஐ Studio Display அல்லது Pro Display XDR உடன் இணைத்தல்
Apple டிஸ்ப்ளே பவருடன் இணைக்கப்பட்டு டிஸ்ப்ளேவுடன் வழங்கப்படும் Thunderbolt கேபிளைப் பயன்படுத்தி iPad உடன் இணைக்கப்பட்டால் (ஆதரிக்கப்படும் மாடல்களுடன்) அது தானாகவே ஆன் ஆகும். டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது iPad சார்ஜ் ஆகும்.
Studio Display அல்லது Pro Display XDR பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, டிஸ்ப்ளேக்கள் தொடர்பான உதவி இணையதளத்தைப் பார்க்கவும்.
USB-C கனெக்டரைப் பயன்படுத்தி iPadஐ இணைத்தல்
USB-C கனெக்டரைக் கொண்ட மாடல்களில், நீங்கள் iPadஐ டிஸ்ப்ளேவில் உள்ள USB அல்லது Thunderbolt 3 போர்ட்டுடன் இணைக்க முடியும்.
iPad உடன் வழங்கப்பட்ட சார்ஜிங் கேபிள் உங்கள் டிஸ்ப்ளே, TV, புரொஜெக்டர் போன்றவற்றில் உள்ள போர்ட்டுடன் பொருந்தவில்லை என்றால், பின்வருவனவற்றைச் செய்யவும்:
USB-C டிஸ்ப்ளே AV அடாப்டர் அல்லது USB-C VGA மல்டி-போர்ட் அடாப்டரை iPadஇல் உள்ள சார்ஜிங் போர்ட்டில் பிளக் செய்யவும்.
HDMI அல்லது VGA கேபிளை அடாப்டருடன் இணைக்கவும்.
HDMI அல்லது VGA கேபிளின் மற்றொரு முனையை டிஸ்ப்ளே, டிவி அல்லது புரொஜெக்டருடன் இணைக்கவும்.
தேவைப்பட்டால், டிஸ்ப்ளே, டிவி அல்லது புரொஜெக்டரில் உள்ள சரியான வீடியோ சோர்ஸிற்கு மாறவும். உதவி தேவைப்பட்டால் டிஸ்ப்ளேவின் கையேட்டைப் பயன்படுத்தவும்.
iPad உடன் இணைக்கும்போது டிஸ்ப்ளே ஆன் ஆகவில்லை என்றால், iPadஇல் இருந்து அதை இணைப்பு நீக்கிவிட்டு, பின்னர் அதை மீண்டும் பிளக் செய்யவும். அது வேலை செய்யவில்லை என்றால், டிஸ்ப்ளேவை அதன் பவர் சோர்ஸில் இருந்து இணைப்பு நீக்கிவிட்டு, அதை மீண்டும் பிளக் செய்யவும்.
iPad Proஇல் உள்ள USB-C போர்ட் மூலம் சார்ஜ் செய்தல் மற்றும் இணைத்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
உங்கள் iPadஇல் Lightning கனெக்டர் இருந்தால் அதை இணைத்தல்
Lightning கனெக்டரைக் கொண்ட மாடலில் பின்வருவனவற்றைச் செய்யவும்:
Lightning டிஜிட்டல் AV அடாப்டர் அல்லது Lightningஇல் இருந்து VGA அடாப்டரை iPadஇல் உள்ள சார்ஜிங் போர்ட்டில் பிளக் செய்யவும்.
HDMI அல்லது VGA கேபிளை அடாப்டருடன் இணைக்கவும்.
HDMI அல்லது VGA கேபிளின் மற்றொரு முனையை டிஸ்ப்ளே, டிவி அல்லது புரொஜெக்டருடன் இணைக்கவும்.
தேவைப்பட்டால், டிஸ்ப்ளே, டிவி அல்லது புரொஜெக்டரில் உள்ள சரியான வீடியோ சோர்ஸிற்கு மாறவும். உதவி தேவைப்பட்டால் உங்கள் டிஸ்ப்ளேவுடன் வழங்கப்பட்ட கையேட்டைப் பார்க்கவும்.
டிஸ்ப்ளே, டிவி அல்லது புரொஜெக்டருடன் உங்கள் iPad இணைக்கப்பட்டிருக்கும்போது அதை சார்ஜ் செய்ய, உங்கள் சார்ஜிங் கேபிளின் ஒரு முனையை அடாப்டரின் கூடுதல் போர்ட்டில் செருகவும், சார்ஜ் கேபிளின் மறுமுனையை பவர் அடாப்டரில் செருகவும், பின்னர் பவர் அடாப்டரை பவர் அவுட்லெட்டில் பிளக் செய்யவும்.
“ஸ்டேஜ் மேனேஜர்” மூலம் iPad மற்றும் வெளிப்புற டிஸ்ப்ளேவில் சாளரங்களை ஒழுங்கமைத்தல்
ஆதரிக்கப்படும் iPad Pro மற்றும் iPad Air மாடல்களை அதிகபட்சம் 6K தெளிவுத்திறனுடன் கூடிய வெளிப்புற டிஸ்ப்ளேவுடன் இணைக்க “ஸ்டேஜ் மேனேஜர்” உங்களை அனுமதிக்கிறது, இது சாளரங்கள் மற்றும் செயலிகளுக்கான விரைவான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது.
”ஸ்டேஜ் மேனேஜரைப்” பயன்படுத்த, iPadஐக் கிடைமட்டத் திசையமைப்பில் வைத்து, அதை வெளிப்புற டிஸ்ப்ளேவுடன் இணைத்த பிறகு “கட்டுப்பாட்டு மையத்தைத்” திறந்து,
-ஐத் தட்டவும்.
நீங்கள் பயன்படுத்தும் செயலியின் சாளரம் மையத்தில் பிராதனமாகக் காட்டப்படும் என்பதால் முழுத திரைக்குச் செல்லாமல் அதில் ஃபோகஸ் செய்யலாம். உங்களின் சமீபத்திய பயன்பாட்டிற்கு ஏற்ப பிற செயலிகள் இடதுபுறத்தில் காட்டப்படும்.
ஸ்டேஜ் மேனேஜரில் பின்வருவனவற்றில் ஒன்றை நீங்கள் செய்யலாம்:
உங்கள் சாளரங்களின் அளவை மாற்றி அவற்றை உங்கள் பணிக்கு ஏற்றதாக மாற்றுதல்.
மைய கேன்வாஸில் சாளரங்களை நகர்த்துதல்.
சமீபத்தில் நீங்கள் பயன்படுத்திய செயலிகள் உட்பட, உங்களுக்குப் பிடித்த செயலிகளை Dockஇல் இருந்து அணுகுதல்.
செயலி லைப்ரரியைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான செயலியை விரைவாகக் கண்டறிதல்.
தட்டுவதன் மூலம் மீண்டும் செல்லக்கூடிய செயலித் தொகுப்புகளை உருவாக்க, பக்கவாட்டில் இருந்து சாளரங்களை இழுத்து விடுதல் அல்லது Dockஇல் இருந்து பயன்பாடுகளைத் திறத்தல்.
ஆதரிக்கப்படும் iPad, வெளிப்புற டிஸ்ப்ளே ஆகியவற்றுக்கு இடையே கோப்புகளையும் சாளரங்களையும் நகர்த்துதல்.
மேலும் தகவல்களுக்கு, iPadஇல் “ஸ்டேஜ் மேனேஜர்” மூலம் சாளரங்களை ஒழுங்கமைத்தல் என்பதைப் பார்க்கவும்.