iPadஇல் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்
iPadOS 26 பதிப்பில் Apple Intelligence* அம்சம் உங்கள் செயலிகளிலும் அனுபவங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் தொடர்புகொள்ளலாம், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம், விஷயங்களை மிகவும் எளிதாகச் செய்து முடிக்கலாம். இது உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், உங்களுக்குப் பயன்தரக்கூடிய மற்றும் தொடர்புடைய அறிவார்ந்த அம்சங்களை வழங்குகிறது.
குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPad மாடல்களிலும் மொழிகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை.** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iPadOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
Apple Intelligenceஐ ஆன் செய்தல்
Apple Intelligence ஆஃப் செய்யப்பட்டிருந்தால், iPadOS 26 சமீபத்திய அம்சங்களை முழுமையாக அணுக அதை நீங்கள் ஆன் செய்யலாம். அமைப்புகள்
செயலிக்குச் சென்று, “Apple Intelligence & Siri” என்பதைத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:
Apple Intelligenceக்கு அடுத்துள்ள பட்டனைத் தட்டவும்.
“Apple Intelligenceஐ ஆன் செய்” என்பதைத் தட்டவும்.
உங்களிடம் உள்ள iPadOS பதிப்பு, நீங்கள் ஏற்கெனவே Apple Intelligenceஐ அமைத்துள்ளீர்களா இல்லையா ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கு ஒரு விருப்பம் காட்டப்படும்.

சரியான வார்த்தைகளைக் கண்டறிதல்
உரையைச் சுருக்கவும், நீங்கள் எழுதியவற்றைச் சரிபார்க்கவும், சரியான சொற்களையும் தொனியையும் கண்டறியவும் உதவக்கூடிய எழுதும் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் தகவல்தொடர்பை இன்னும் மேம்படுத்தலாம்.

தனித்துவமான படங்களையும் சொந்தமான இமோஜியையும் உருவாக்குதல்
“Image Playground” அல்லது “பட மந்திரக்கோல்” அம்சங்களின் மூலம் ஒருசில நொடிகளில் வேடிக்கையான, அசல் படங்களை உருவாக்கலாம். Genmoji மூலம் எளிய உரை விளக்கங்களில் இருந்து பிரத்தியேக இமோஜியையும் நீங்கள் உருவாக்கலாம்.
அசல் படங்களை உருவாக்குவது எப்படி?

Siri மூலம் பலவற்றைச் செய்தல்
Siriக்கு கோரிக்கைகளை டைப் செய்யலாம், உங்கள் Apple தயாரிப்புகள் பற்றிய கேள்விகளுக்குப் பதில்களைப் பெறலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.

ChatGPTஐப் பயன்படுத்துதல்
Apple Intelligenceஐப் பயன்படுத்தும்போதே ChatGPTஐ அணுகி Siri, எழுதும் கருவிகள், Image Playground மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி, இன்னும் அதிக நிபுணத்துவத்தைப் பெறுங்கள்.
நிகழ்நேரத்தில் பல்வேறு மொழிகளில் தொடர்புகொள்ளுதல்
“நேரலை மொழிபெயர்ப்பு” மூலம் “மெசேஜஸ்” செயலியில் மெசேஜ்களைத் தானாக மொழிபெயர்த்துக்கொள்ளலாம், மொழிபெயர்க்கப்பட்ட நேரலை கேப்ஷன்களை FaceTimeஇல் பார்க்கலாம், “ஃபோன்” செயலியில் அழைப்புகளுக்குப் பேச்சு வடிவில் மொழிபெயர்ப்புகளைப் பெறலாம்.
செயலிகளுடன் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்
நீங்கள் மிக அவசரமாகப் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சல்களைப் பார்க்கலாம், “ஸ்மார்ட் பதிலளிப்பு” மூலம் மின்னஞ்சல் பதில்களை விரைவாக உருவாக்கலாம், நீண்ட மின்னஞ்சல்களின் சுருக்கவிவரத்தைப் பெறலாம். | மெசேஜஸ் படிக்காத உரையாடல்களின் சுருக்கவிவரத்தைப் பார்க்கலாம், அசல் படங்களை அனுப்பலாம், Image Playground மூலம் பின்னணிகளைப் பிரத்தியேகமாக்கலாம், “ஸ்மார்ட் பதிலளிப்பு” அம்சம் மூலம் பதில்களை விரைவாக எழுதலாம். |
குறிப்புகள் ஆடியோவைப் பதிவுசெய்த பிறகு, Apple Intelligenceஐப் பயன்படுத்தி டிரான்ஸ்கிரிப்ட்டின் சுருக்கவிவரத்தை உருவாக்கலாம். | ஃபோன் நீங்கள் பதிவுசெய்யும் ஃபோன் அழைப்பின் சுருக்கவிவரத்தை உருவாக்கலாம் மற்றும் வாய்ஸ்மெயில் சுருக்கவிவரத்தைப் பார்க்கலாம். iPadஇல் ஃபோன் செயலியில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல் |
ஃபோட்டோஸ் இயல்பான மொழித் தேடல் மூலம் புகைப்படங்களைக் கண்டறியலாம், நினைவுத் திரைப்படங்களை உருவாக்கலாம், கவனத்தைத் திசைதிருப்பும் ஆப்ஜெக்ட்களை "கிளீன்-அப்" அம்சம் மூலம் அகற்றலாம். | நினைவூட்டல்கள் Apple Intelligence அம்சத்தைப் பயன்படுத்தி பரிந்துரைக்கப்படும் நினைவூட்டல்களைப் பெறலாம், தொடர்புடைய நினைவூட்டல்களை ஒரு பட்டியலுக்குள் தனித்தனிப் பிரிவுகளில் தானாகவே வகைப்படுத்திக் கொள்ளலாம். நினைவூட்டல்கள் செயலியில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல் |
Safari Safari செயலியில் இணையப்பக்கத்தின் சுருக்கவிவரத்தை உருவாக்க Apple Intelligenceஐப் பயன்படுத்தலாம். Apple Intelligence மூலம் இணையப் பக்கங்களின் சுருக்கவிவரத்தைப் பெறுதல் | சுருக்கவழிகள் சுருக்கவழிகளில் நுண்ணறிவுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி உரையின் சுருக்கவிவரத்தைப் பெறலாம், படங்களை உருவாக்கலாம், Apple Intelligence மாடல்களை நேரடியாகப் பயன்படுத்தலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம். “சுருக்கவழிகள்” செயலியில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல் |
மேலும் பல… அம்சங்கள், ஆதரிக்கப்படும் சாதனங்கள் மற்றும் மொழிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, Apple Intelligence இணையதளத்தைப் பார்க்கவும். |
Apple Intelligenceஐ ஆஃப் செய்தல்
அமைப்புகள்
செயலிக்குச் சென்று, “Apple Intelligence & Siri “என்பதைத் தட்டி, Apple Intelligenceக்கு அடுத்துள்ள பட்டனைத் தட்டவும்.








