iPadஇல் குறிப்புகள் செயலிக்கான அமைப்புகளை மாற்றுதல்

அமைப்புகளுக்குச் சென்று குறிப்புகள் செயலிக்கான உங்கள் முன்னுரிமைகளை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம். புதிய குறிப்புகளுக்கான இயல்புநிலைக் கணக்கைத் தேர்ந்தெடுக்கலாம். பாஸ்வேர்டு, மேலும் பலவற்றை அமைக்கலாம்.

“குறிப்புகள்” அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. செயலிகள் என்பதைத் தட்டி “குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் சரிசெய்யவும்:

    • கணக்குகள்: குறிப்புகளில் கணக்குகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்.

    • Siri: குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் விதத்தின் அடிப்படையில் அனைத்துச் செயலிகளிலும் பரிந்துரைகளை வழங்க Siriஐ அனுமதிக்கவும்.

    • தேடுதல்: குறிப்புகள் செயலியில் இருந்து பரிந்துரைகளையும் உள்ளடக்கத்தையும் தேடல் மற்றும் விட்ஜெட்களில் காட்ட அனுமதிக்கலாம்.

    • அறிவிப்புகள்: அறிவிப்பு அமைப்புகளை மாற்றவும்.

    • மொழி: உங்களுக்கு விருப்பமான மொழிகளைத் தேர்வுசெய்யலாம் (பல மொழிகள் சேர்க்கப்பட்டால் விருப்பம் காட்டப்படும்).

    • இயல்புநிலைக் கணக்கு: Siri மற்றும் குறிப்புகள் விட்ஜெட்டைப் பயன்படுத்திக் குறிப்புகளை உருவாக்கும்போது இயல்புநிலைக் கணக்கு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • பாஸ்வேர்டு: முக்கியமான குறிப்புகளை லாக் செய்யலாம்.

    • “எனது iPadஇல்” கணக்கு: எனது iPhone கணக்கில் என்பதை ஆன் செய்யவும்.

    • குறிப்பிடப்படுவது தொடர்பான அறிவிப்புகள்: பகிர்ந்த குறிப்புகளில் உங்கள் பெயர் குறிப்பிடப்படும்போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

    • காட்சிப்படுத்துதல்: வரிசை வகை, வரிகள் மற்றும் கிரிட்கள், தேதியின்படி குறிப்புகளை குழுவாக்குதல் போன்ற காட்சி விருப்பங்களைத் தேர்வுசெய்யவும்.

    • விரைவுக் குறிப்புகள்: புதிய குறிப்பை விரைவாக உருவாக்கவோ கடைசி விரைவுக் குறிப்பை மீண்டும் தொடங்கவோ கார்னர் சைகைகளைத் தேர்வுசெய்யவும்.

    • செயலி இணைப்புகள்: பரிந்துரைக்கப்பட்ட செயலி இணைப்புகளைப் பெறவும்.

    • தானாகவே குறிச்சொல்லாக மாற்றுதல்: ஸ்பேஸைத் தட்டினால் #text என்பது தானாகவே குறிச்சொல்லாக மாறும்.

    • ஃபோட்டோஸ் செயலியில் சேமித்தல்: குறிப்புகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஃபோட்டோஸ் செயலியில் சேமிக்கவும்.

    • பூட்டுத் திரையில் இருந்து குறிப்புகளை அணுகுதல்: “எப்போதும் புதிய குறிப்பை உருவாக்கு” அல்லது “கடைசிக் குறிப்பைத் தொடரவும்” என்பதைத் தேர்வுசெய்யவும். அல்லது பூட்டுத் திரையில் இருந்து அணுகுவதைத் தடுக்க அதை ஆஃப் செய்யவும்.

இவற்றையும் பாருங்கள்iPadஇல் அமைப்புகளைக் கண்டறிதல்