உங்கள் தொடுதலுக்கு ஏற்ப iPad பதிலளிக்கும் விதத்தை மாற்றுதல்

கை நடுக்கம், கைத்திறன், நுண்ணியமான உடலியக்கக் கட்டுப்பாடு போன்றவற்றில் சிக்கல்கள் இருந்தால், தட்டுதல், ஸ்வைப் செய்தல் மற்றும் தொட்டுப் பிடித்தல் சைகைகளுக்கு ஏற்ப உங்கள் iPad தொடுதிரை பதிலளிக்கும் விதத்தை நீங்கள் மாற்றலாம். வேகமான அல்லது மெதுவான தொடுதல்களை iPad கண்டறிய அனுமதிக்கலாம், அதே சமயத்தில் பல தொடுதல்களைப் புறக்கணிக்கும்படியும் அமைக்கலாம். iPad திரையைத் தொடும்போது அது இயக்கப்படுவதையும், நீங்கள் தற்செயலாக iPadஐ அசைக்கும்போது “செயல்தவிர்க்க அசைத்தல்” அம்சம் ஆஃப் செய்யப்படுவதையும் கூட நீங்கள் தடுக்கலாம்.

தட்டுதல்கள், ஸ்வைப் செயல்பாடுகள் மற்றும் பல முறை தொடுதல்களுக்கான அமைப்புகளை மாற்றுதல்

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > தொடு வசதிகள் என்பதற்குச் சென்று, “தொடு வசதிகள்” அம்சத்தை ஆன் செய்யவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்ய நீங்கள் iPadஐ உள்ளமைக்கலாம்:

    • நீண்ட அல்லது குறுகிய காலத் தொடுதல்களுக்குப் பதிலளிக்க: கால அளவை மாற்ற, “அழுத்திப் பிடித்தல் கால அளவு” என்பதை ஆன் செய்து “குறை” பட்டன் அல்லது “அதிகரி" பட்டன் பட்டனைத் தட்டவும்.

      குறிப்பு: “அழுத்திப்பிடித்தல் காலஅளவு” ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, அந்தக் கால அளவின்போது செய்யப்படும் தட்டல்கள் மற்றும் ஸ்வைப்கள் நிராகரிக்கப்படும். “அழுத்திப்பிடித்தல் காலஅளவு” ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, நீங்கள் எளிதில் ஸ்வைப் செய்ய “ஸ்வைப் சைகைகள்” என்பதை ஆன் செய்யலாம்.

    • “அழுத்திப்பிடித்தல் காலஅளவு” ஆன் செய்யப்பட்டிருக்கும்போது எளிதில் ஸ்வைப் செய்தல்: “அழுத்திப்பிடித்தல் காலஅளவு” ஆன் செய்து, “ஸ்வைப் சைகைகள்” என்பதைத் தட்டவும். “ஸ்வைப் சைகைகள்” என்பதை ஆன் செய்து ஸ்வைப் சைகை தொடங்குவதற்கு முன்பு, தேவையான அசைவைத் தேர்வுசெய்யவும்.

    • பல முறை தொடுதலை ஒரு முறை தொடுதலாக எடுத்துக்கொள்ள: பல முறை தொடுதலுக்கு இடையே அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தைச் சரிசெய்ய, “ரிப்பீட்டைப் புறக்கணி” என்பதை ஆன் செய்த பிறகு, “குறை” பட்டன் அல்லது “அதிகரி" பட்டன் பட்டனைத் தட்டவும்.

    • நீங்கள் தொடும் முதல் அல்லது கடைசி இடத்திற்கு ஏற்ப பதிலளிக்க: “தட்டுவதற்கான உதவி” என்பதில், “ஆரம்பத் தொடு புள்ளியைப் பயன்படுத்து” அல்லது “இறுதித் தொடு புள்ளியைப் பயன்படுத்து” என்பதைத் தேர்வுசெய்யவும்.

      “ஆரம்பத் தொடு புள்ளியைப் பயன்படுத்து” என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் முதலில் தட்டக்கூடிய இடத்தை iPad பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, முகப்புத் திரையில் ஒரு செயலியைத் தட்டும்போது அந்த இடத்தைப் பயன்படுத்தும்.

      “இறுதித் தொடுபுள்ளியைப் பயன்படுத்து” என்பதைத் தேர்வுசெய்தால், விரலை உயர்த்தும் இடத்தில் iPad தட்டுதலைப் பதிவுசெய்யும். ஒரு குறிப்பிட்ட நேர வரம்பிற்குள் விரலை உயர்த்தும்போது iPad அந்தத் தட்டுதலுக்குப் பதிலளிக்கும். கால அளவைச் சரிசெய்ய, “குறை” பட்டன் அல்லது “அதிகரி" பட்டன் பட்டனைத் தட்டவும். சைகை தாமதத்தைத் தாண்டி நீங்கள் அதிக நேரம் காத்திருந்தால், இழுத்தல் சைகை போன்ற பிற சைகைகளுக்கு iPad பதிலளிக்க முடியும்.

      குறிப்பு: “தட்டுவதற்கான உதவி” ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, அந்தக் கால அளவின்போது செய்யப்படும் தட்டல்கள் மற்றும் ஸ்வைப்கள் நிராகரிக்கப்படும். “அழுத்திப்பிடித்தல் காலஅளவு” ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, நீங்கள் எளிதில் ஸ்வைப் செய்ய “ஸ்வைப் சைகைகள்” என்பதை ஆன் செய்யலாம்.

    • “தட்டுவதற்கான உதவி” ஆன் செய்யப்பட்டிருக்கும்போது எளிதில் ஸ்வைப் செய்தல்: “ஆரம்பத் தொடு புள்ளியைப் பயன்படுத்து” அல்லது “இறுதித் தொடு புள்ளியைப் பயன்படுத்து” என்பதைத் தேர்வுசெய்து, “ஸ்வைப் சைகைகள்” என்பதைத் தட்டவும். “ஸ்வைப் சைகைகள்” என்பதை ஆன் செய்து ஸ்வைப் சைகை தொடங்குவதற்கு முன்பு, தேவையான அசைவைத் தேர்வுசெய்யவும்.

தொட்டுப் பிடித்தல் சைகைகளுக்கான அமைப்புகளைச் சரிசெய்தல்

கூடுதல் விருப்பங்கள் அல்லது நீங்கள் செய்யக்கூடிய செயல்களைப் பார்க்கவோ உள்ளடக்கத்தின் முன்னோட்டத்தைக் காட்டவோ தொட்டுப் பிடித்தல் சைகையைப் பயன்படுத்தலாம். இந்த சைகையைச் செய்வதில் உங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டால், பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் > ஹேப்டிக் டச் என்பதற்குச் செல்லவும்.

  2. தொடுதலுக்கான கால அளவை (வேகமானது/மெதுவானது) தேர்வுசெய்யவும்.

  3. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள படத்தில் உங்கள் புதிய அமைப்புகளைச் சோதித்துப் பார்க்கவும்.

“செயல்படுத்த, தட்டுக” என்பதை ஆஃப் செய்தல்

ஆதரிக்கப்படும் iPad மாடலில், iPadஐ இயக்கக்கூடிய திரைத் தொடுதல்களை நீங்கள் தடுக்கலாம். அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் என்பதற்குச் சென்று, “செயல்படுத்த தட்டுதல்” அம்சத்தை ஆஃப் செய்யவும்.

“செயல்தவிர்க்க அசைத்தல்” என்பதை ஆஃப் செய்தல்

நீங்கள் தற்செயலாக iPadஐ அடிக்கடி அசைப்பீர்கள் என்றால், “செயல்தவிர்க்க அசைத்தல்” அம்சத்தை நீங்கள் ஆஃப் செய்யலாம். அமைப்புகள்  > அணுகல்தன்மை > தொடுதல் என்பதற்குச் செல்லவும்.

உதவிக்குறிப்பு: உள்ளடக்கத் திருத்தங்களைச் செயல்தவிர்க்க, மூன்று விரல்களால் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.