iPadஇல் “இடம் அறி” செயலி மூலம் நண்பரைக் கண்டறிதல்

ஒரு நண்பர் தனது இருப்பிடத்தை உங்களுடன் பகிர்ந்தால் நீங்கள் “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி மேப்பில் அவர் இருக்குமிடத்தைக் கண்டறியலாம்.

“இடம் அறி” செயலியில் நபர்களின் பட்டியல் காட்டப்பட்டுள்ளது. பட்டியலில் நான்கு நபர்கள் உள்ளனர்: ஆஷ்லே ரிக்கோ, ஒலிவியா ரிக்கோ, டான் ராமிரேஸ் மற்றும் வில் ரிக்கோ. அவற்றின் இருப்பிடங்கள் சான் பிரான்சிஸ்கோவின் மேப்பில் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பு: உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது என்பதைப் பார்க்க விரும்பினால், துல்லியமான இருப்பிடம் அம்சத்தை “இடம் அறி” செயலிக்கு ஆன் செய்ய வேண்டும். நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவலைக் கட்டுப்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

நண்பரின் இருப்பிடத்தைப் பார்த்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய விரும்பும் நபரின் பெயரைத் தட்டவும்.

    • உங்கள் நண்பரின் இருப்பிடத்தைக் கண்டறிய முடிந்தால்: மேப்பில் காட்டப்படும், அவர் எங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம்.

    • உங்கள் நண்பரின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாவிட்டால்: அவரது பெயருக்குக் கீழே “இருப்பிடம் கண்டறியப்படவில்லை” எனக் காட்டப்படும்.

    • நீங்கள் உங்கள் நண்பரைப் பின்தொடரவில்லை என்றால்: அவரது பெயருக்குக் கீழே “உங்கள் இருப்பிடத்தைப் பார்க்கலாம்” எனக் காட்டப்படும். நீங்கள் நண்பரின் இருப்பிடத்தை அறிய கோரிக்கை விடுக்கலாம்.

நண்பரைத் தொடர்புகொள்ளுதல்

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் நபரின் பெயரைத் தட்டவும்.

  3. “தொடர்பு கொள்க” என்பதைத் தட்டி, உங்கள் நண்பரைத் தொடர்புகொள்ள விரும்பும் விதத்தைத் தேர்வுசெய்யவும். தொடர்புத் தகவலைச் சேர்த்தல் மற்றும் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

நண்பரின் இருப்பிடத்திற்கான வழிகளைப் பெறுதல்

நண்பரின் தற்போதைய இருப்பிடத்திற்கான வழிகளை மேப்ஸ் செயலியில் நீங்கள் பெறலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் இருப்பிட வழிகளை அறிய விரும்பும் நபரின் பெயரைத் தட்டவும்.

  3. மேப்ஸைத் திறக்க “வழிகள்” என்பதைத் தட்டவும்.

மேப்ஸில் வழிகளைப் பெறுதல் என்பதைப் பார்க்கவும்.

நண்பரின் இருப்பிடத்திற்கு லேபிள் அமைத்தல்

நண்பரின் தற்போதைய இருப்பிடத்தை இன்னும் தெளிவாகக் குறிக்கும் வகையில் லேபிளை அமைக்கலாம் (உதாரணம்: வீடு, பணியிடம்). உங்கள் நண்பர் அந்த இருப்பிடத்தில் இருக்கும்போது அவரது பெயருக்குக் கீழே அந்த லேபிள் காட்டப்படும்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் இருப்பிட லேபிளை அமைக்க விரும்பும் நபரின் பெயரைத் தட்டவும்.

  3. “இருப்பிடப் பெயரைத் திருத்து” என்பதைத் தட்டி, ஒரு லேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.

    புதிய லேபிளைச் சேர்க்க, “பிரத்தியேக லேபிளைச் சேர்” என்பதைத் தட்டி, பெயரை உள்ளிட்டு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

பிடித்த நண்பர்கள் பட்டியலில் ஒரு நண்பரைச் சேர்த்தல்

பிடித்தவை பட்டியலில் உள்ள நண்பர்கள் “நபர்கள்” பட்டியலில் முதலில் தோன்றுவார்கள், அவர்களின் பெயருக்கு அருகில் ஒரு நட்சத்திரக் குறி காட்டப்படும்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, பிடித்தவை பட்டியலில் சேர்க்க விரும்பும் நபரின் பெயரைக் கண்டறியவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அவரின் பெயரைத் தட்டி, “பிடித்தவையில் [பெயர்]-ஐச் சேர்” என்பதைத் தட்டவும்.

    • அவரது பெயரின் மீது இடப்புறமாக ஸ்வைப் செய்து, நட்சத்திரத்தைத் தட்டவும்.

பிடித்தவை பட்டியலில் இருந்து ஒரு நண்பரை அகற்ற, இடப்புறமாக ஸ்வைப் செய்து நட்சத்திரத்தைத் தட்டவும் அல்லது நண்பரின் பெயரைத் தட்டி, “[பெயர்]ஐப் “பிடித்தவையில்” இருந்து அகற்று” என்பதைத் தட்டவும்.