இரு காரணி அங்கீகாரம்
iOS 13.4, iPadOS 13.4, macOS 10.15.4 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைக் கொண்ட சாதனத்தில் நீங்கள் Apple கணக்கை உருவாக்கியிருந்தால், உங்கள் கணக்கு தானாகவே இரு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தும்.
Apple கணக்கிற்கான இரு காரணி அங்கீகாரம் iOS 9, iPadOS 13, OS X 10.11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது. நீங்கள் இரு காரணி அங்கீகாரம் இல்லாமல் Apple கணக்கை உருவாக்கியிருந்தால், இரு காரணி அங்கீகாரத்தை ஆன் செய்ய இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
அமைப்புகள்
> [உங்கள் பெயர்] > உள்நுழைதல் & பாதுகாப்பு என்பதற்குச் செல்லவும்.
“இரு காரணி அங்கீகாரத்தை ஆன் செய்” என்பதைத் தட்டி ஆன்லைன் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
மற்றவர்கள் உங்கள் Apple கணக்கை அணுக முடியாதபடி தடுக்க “இரு காரணி அங்கீகாரம்” அம்சம் உதவுகிறது (அவர்களுக்கு உங்கள் Apple கணக்கு பாஸ்வேர்டு தெரிந்திருந்தாலும் கூட), மேலும் iOS, iPadOS மற்றும் macOSஇல் உள்ள சில அம்சங்களுக்கு இரு காரணி அங்கீகாரப் பாதுகாப்பு தேவை. “இரு காரணி அங்கீகாரம்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் போது, நம்பகமான சாதனத்தைப் பயன்படுத்தி உங்களால் மட்டுமே கணக்கை அணுக முடியும். புதிய சாதனத்தில் முதல் முறையாக உள்நுழையும்போது, உங்கள் Apple கணக்கு பாஸ்வேர்டையும், உங்கள் ஃபோன் எண்ணுக்குத் தானாக அனுப்பப்படும் சரிபார்ப்புக் குறியீடு அல்லது நம்பகமான சாதனங்களில் காட்டப்படும் ஆறு இலக்கச் சரிபார்ப்புக் குறியீட்டையும் நீங்கள் வழங்க வேண்டும். குறியீட்டை உள்ளிடுவதன் மூலம், புதிய சாதனம் நம்பகமானது என்பதை நீங்கள் உறுதிசெய்யலாம்.