iPadஇல் நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவல்களைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் இருப்பிடம் குறித்த தகவல்கள் iPad மற்றும் செயலிகளில் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

வழிகளைப் பெறும்போது நீங்கள் இருக்குமிடத்தைக் கண்டறிய, சந்திப்புகளை அமைக்க மற்றும் பலவற்றைச் செய்ய GPS நெட்வொர்க்குகள் (Wi-Fi + Cellular உள்ள iPad மாடல்கள்), உங்கள் Bluetooth® இணைப்புகள், லோக்கல் Wi-Fi நெட்வொர்க்குகள், உங்கள் மொபைல் நெட்வொர்க் (Wi-Fi + Cellular உள்ள iPad மாடல்கள், மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால்) ஆகியவற்றில் உள்ள தகவல்களை “இருப்பிடச் சேவைகள்” பயன்படுத்தும். ஒரு செயலி இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்தும்போது ஸ்டேட்டஸ் பாரில் “இருப்பிடச் சேவைகள்” ஐகான் காட்டப்படும்.

நீங்கள் iPadஐ அமைக்கும்போது, இருப்பிடச் சேவைகளை ஆன் செய்ய வேண்டுமா என்று கேட்கப்படும். அதன்பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இருப்பிடச் சேவைகளை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

உங்கள் iPadஇல் இருந்து இருப்பிடத் தரவை ஒரு செயலி முதல் முறையாகப் பெற விரும்பினால், விளக்கத்துடன் கூடிய கோரிக்கையைப் பெறுவீர்கள். சில செயலிகள் உங்கள் இருப்பிடத்தை அணுக ஒருமுறை மட்டுமே கேட்கலாம். பிற செயலிகள் இப்போதும் எதிர்காலத்திலும் உங்கள் இருப்பிடத்தைப் பகிரும்படி கேட்கலாம். உங்கள் இருப்பிடத்திற்கான தற்போதைய அணுகலை நீங்கள் அனுமதித்தாலும் மறுத்தாலும், நீங்கள் ஒரு செயலியின் அணுகலைப் பின்னர் மாற்றலாம்.

iPadஇல் இருப்பிடத் தரவைப் பயன்படுத்த செயலி அனுப்பும் கோரிக்கை. ஒரு முறை அனுமதி, செயலியைப் பயன்படுத்தும்போது அனுமதி, அனுமதிக்க வேண்டும் ஆகிய விருப்பங்கள் உள்ளன.

இருப்பிடச் சேவைகளை ஆன் செய்தல்

உங்கள் iPadஐ முதல் முறையாக அமைக்கும்போது “இருப்பிடச் சேவைகள்” அம்சத்தை ஆன் செய்திருக்கவில்லை எனில், அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதற்குச் சென்று, “இருப்பிடச் சேவைகள்” அம்சத்தை ஆன் செய்யவும்.

முக்கியம்: நீங்கள் இருப்பிடச் சேவைகளை ஆஃப் செய்தால், பல முக்கியமான iPad அம்சங்கள் செயல்படுவது நிறுத்தப்படும்.

உங்கள் இருப்பிடத் தகவலைப் பயன்படுத்தி செயலிகளைப் பார்த்தல்

  1. அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் என்பதற்குச் செல்லவும்.

  2. ஒரு செயலிக்கான அணுகல் அமைப்புகளை மறுஆய்வு செய்ய அல்லது மாற்ற அல்லது இருப்பிடச் சேவைகளைக் கோருவதற்கான அதன் விளக்கத்தைப் பார்க்க, செயலியைத் தட்டவும்.

    உங்கள் iPadஇன் இருப்பிடத்தைப் பகிர்வதற்கான விருப்பங்களுடன், தனியுரிமை & பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள இருப்பிடச் சேவைகள் அமைப்புகள். இதில் தனிப்பட்ட செயலிகளுக்கான பிரத்தியேக அமைப்புகளும் இருக்கின்றன.

உங்களின் குறிப்பிட்ட இருப்பிடத்தைப் பயன்படுத்த ஒரு செயலியை அனுமதிக்க, துல்லியமான இருப்பிடத்தை ஆன் செய்ய வேண்டும். உங்களின் துல்லியமான இருப்பிடம் தேவைப்படாத ஒரு செயலிக்கு உங்கள் தோராயமான இருப்பிடத்தை மட்டும் பகிர்ந்துகொள்ள, துல்லியமான இருப்பிடத்தை ஆஃப் செய்யவும்.

குறிப்பு: ஒரு செயலிக்கு அணுகலை “அடுத்த முறை கேள்” என்று நீங்கள் அமைத்தால், அடுத்த முறை செயலியைப் பயன்படுத்தும்போது இருப்பிடச் சேவைகளை மீண்டும் ஆன் செய்யும்படி உங்களிடம் கேட்கப்படும்.

மூன்றாம் தரப்புச் செயலி அது கோரும் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள அதன் விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் மறுஆய்வு செய்யவும். iOS, iPadOS, watchOS ஆகியவற்றில் தனியுரிமை மற்றும் இருப்பிடச் சேவைகள் குறித்த விவரங்கள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

“இருப்பிடச் சேவைகள்” விழிப்பூட்டல்களில் மேப்பை மறைத்தல்

பின்னணியில் உங்கள் இருப்பிடத்தை எப்போதும் பயன்படுத்த ஒரு செயலியை நீங்கள் அனுமதிக்கும்போது, அந்தத் தகவலைச் செயலி எப்படிப் பயன்படுத்துகிறது என்பது பற்றிய எச்சரிக்கைகளைப் பெறலாம். (இந்த விழிப்பூட்டல்கள் நீங்கள் விரும்பினால் உங்கள் அனுமதியை மாற்ற அனுமதிக்கும்.) விழிப்பூட்டல்களில், இந்தச் செயலி சமீபத்தில் அணுகிய இருப்பிடங்களை மேப் காட்டுகிறது.

மேப்பை மறைக்க, அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > இருப்பிட விழிப்பூட்டல்கள் என்பதற்குச் சென்று “இருப்பிட விழிப்பூட்டல்களில் மேப்பைக் காட்டு” என்பதை ஆஃப் செய்யவும்.

அமைப்பை ஆஃப் செய்திருந்தாலும், நீங்கள் தொடர்ந்து இருப்பிட விழிப்பூட்டல்களைப் பெறுவீர்கள், ஆனால் மேப் காட்டப்படாது.

சிஸ்டம் சேவைகளுக்கான “இருப்பிடச் சேவைகள்” அமைப்புகளை மறுஆய்வு செய்தல் அல்லது மாற்றுதல்

இருப்பிடம் சார்ந்த பரிந்துரைகள், இருப்பிடம் சார்ந்த விளம்பரங்கள் போன்ற பல சிஸ்டம் சேவைகள் இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்துகின்றன.

ஒவ்வொரு சேவையின் நிலையையும் பார்க்க, ஒவ்வொரு சேவைக்கும் இருப்பிடச் சேவைகளை ஆன் அல்லது ஆஃப் செய்ய அல்லது செயல்படுத்தப்பட்ட சிஸ்டம் சேவைகள் உங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்தும்போது ஸ்டேட்டஸ் பாரில் “இருப்பிடச் சேவைகள்” ஐகான் காட்டப்பட, அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > சிஸ்டம் சேவைகள் என்பதற்குச் செல்லவும்.