iPadஇல் குடும்ப உறுப்பினருக்கு ஸ்கிரீன் டைமை அமைத்தல்
iPadஇல் உள்ள ஸ்கிரீன் டைம் மூலம் நேர அட்டவணைகளை அமைத்தல் என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி குடும்ப உறுப்பினருக்கான ஸ்கிரீன் டைமை அவரின் சாதனத்தில் நீங்கள் அமைக்கலாம் அல்லது நீங்கள் ஒருங்கிணைப்பாளராக உள்ள குடும்பப் பகிர்வுக் குழுவில் அவர் உறுப்பினராக இருந்தால், உங்கள் சாதனத்தில் குடும்பப் பகிர்வு அம்சத்தின் மூலம் அவருக்கான ஸ்கிரீன் டைமை அமைக்கலாம்.
குடும்பப் பகிர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளராகவோ பெற்றோர் அல்லது பாதுகாவலராகவோ நீங்கள் இருந்தால், பிள்ளைக்கான கணக்கை அமைக்கும்போது பிள்ளையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். பிள்ளைகள் அணுகக்கூடிய உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கும் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை அமைக்க, பிள்ளையின் பிறந்தநாள் பயன்படுத்தப்படும்.
பிறகு எப்போது வேண்டுமானாலும் பிள்ளையின் சாதனத்தில் உள்ள அமைப்புகள்
> ஸ்கிரீன் டைம் என்பதற்குச் சென்று, உள்ளடக்கக் கட்டுப்பாடுகள், தகவல்தொடர்பு வரம்புகள், செயல்படா நேரம் ஆகியவற்றை நீங்கள் அமைக்கலாம்.
18 வயதிற்குட்பட்ட சிறாருக்காக ஒரு சாதனத்தை நீங்கள் அமைக்கும்போது, “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” அம்சம் மற்றும் இணைய உள்ளடக்க வரம்புகள் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும், அவற்றை “ஸ்கிரீன் டைம்” அமைப்புகளில் பின்னர் நிர்வகிக்கலாம். (நாடு அல்லது பிராந்தியத்தைப் பொறுத்து இந்த வயது மாறுபடும்.)
குடும்ப உறுப்பினருக்கான ஸ்கிரீன் டைமை அமைத்தல்
iPadஇல் அமைப்புகள்
செயலிக்குச் செல்லவும்.“ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்து “குடும்பம்” என்பதற்குக் கீழே ஒரு குடும்ப உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
உங்கள் குடும்ப உறுப்பினருக்குச் செயல்படாத நேரத்தைத் திட்டமிட, ஸ்கிரீனில் இருந்து விலகியிருக்க வேண்டிய நேரத்தைத் திட்டமிடுதல் கட்டுரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
மெசேஜஸ் செயலியிலோ அல்லது அமைப்புகள்
> ஸ்கிரீன் டைம் என்பதற்குச் சென்றோ நீங்கள் கோரிக்கையை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.உங்கள் குடும்ப உறுப்பினருக்கான செயலிப் பயன்பாட்டிற்கான வரம்புகளை அமைக்க, செயலி பயன்பாட்டிற்கான வரம்புகளை அமைத்தல் கட்டுரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உங்கள் குடும்ப உறுப்பினரை அனைத்து நேரங்களிலும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் செயலிகளையும் தொடர்புகளையும் தேர்வுசெய்ய, அனைத்து நேரங்களிலும் அனுமதிக்கும் செயலிகளையும் தொடர்புகளையும் தேர்வுசெய்தல் கட்டுரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். நீங்கள் குடும்ப உறுப்பினரின் தொடர்புகளைப் பார்க்கலாம் அல்லது நிர்வகிக்கலாம் மற்றும் செயலிகளுக்கான வயது வரம்பை அமைக்கலாம்.
குறிப்பு: உங்கள் குடும்ப உறுப்பினருக்கு உடல்நலம் அல்லது அணுகல்தன்மை செயலிகள் தேவைப்பட்டால், அவை அனுமதிக்கப்பட்ட செயலிகள் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்யுங்கள். மெசேஜஸ் அம்சத்திற்கு “எப்போதும் அனுமதி” அமைப்பு இயக்கப்படவில்லையெனில், செயல்படாத நேரத்திலோ செயலி வரம்பை எட்டிய பிறகோ உங்கள் குடும்ப உறுப்பினரால் மெசேஜ்களை (அவசரகால எண்கள் மற்றும் தொடர்புகள் உட்பட) அனுப்பவோ பெறவோ முடியாமல் போகலாம்.
உங்கள் குடும்ப உறுப்பினருக்குக் கிட்டப்பார்வை (மயோப்பியா) அல்லது கண்சோர்வு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க வேண்டுமெனில், ஸ்கிரீன் தூரம் அம்சத்தை ஆன் செய்யவும்.
குடும்ப உறுப்பினருக்கான ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை உருவாக்க வேண்டுமெனில், ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை உருவாக்குதல் கட்டுரையைப் பார்க்கவும்.
உங்கள் குடும்ப உறுப்பினருக்கான தகவல்தொடர்புப் பாதுகாப்பு அம்சங்களை ஆன் செய்ய குடும்ப உறுப்பினரின் iPadஇல் தகவல்தொடர்புகளில் உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டறிவதற்கான அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்தல்-ஐப் பார்க்கவும்
குடும்ப உறுப்பினருக்காகவும் பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
குடும்ப உறுப்பினரின் தொடர்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல்
iPadஇல் அமைப்புகள்
செயலிக்குச் செல்லவும்.“ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டி, உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)
“தகவல்தொடர்பு வரம்புகள்” என்பதைத் தட்டி “[பிள்ளையின் பெயர்]இன் தொடர்புகளை நிர்வகி” என்பதை ஆன் செய்யவும்.
தொடர்புகளைச் சேர்ப்பதற்கும் திருத்துவதற்குமான அனுமதியை உங்கள் பிள்ளைக்கு வழங்க, “தொடர்பைத் திருத்த அனுமதி” என்பதை ஆன் செய்யவும்.
உங்கள் பிள்ளை தனது சாதனத்தில் தொடர்புகளை நிர்வகிப்பதற்கான கோரிக்கையை ஏற்கும்படி சொல்லவும்.
பிள்ளை உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதும், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
உங்கள் பிள்ளையின் தொடர்புகளைப் பார்த்தல்: “தொடர்புகள்” என்பதைத் தட்டவும்.
உங்கள் பிள்ளையின் தொடர்புகளைத் திருத்துதல்: “தொடர்புகள்” என்பதைத் தட்டி, பெயரைத் தட்டி, திரையின் மேல் வலதுபுறத்தில் உள்ள “திருத்து” என்பதைத் தட்டவும்.
உங்கள் பிள்ளையின் தொடர்புகளிலிருந்து ஒருவரை அகற்றுதல்: “தொடர்புகள்” என்பதைத் தட்டி, பெயரைத் தட்டி, “தொடர்பை நீக்கு” என்பதைத் தட்டவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)
உங்கள் பிள்ளையின் தொடர்புகளில் ஒருவரைச் சேர்த்தல்: “தொடர்புகள்” என்பதைத் தட்டி மேல் வலது மூலையில் உள்ள “சேர்” பட்டனைத் தட்டவும்.
குறிப்பு: உங்கள் பிள்ளையின் தொடர்புகளை நீங்கள் பார்க்கும் அல்லது மாற்றும் ஒவ்வொரு முறையும் அவரது ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை உள்ளிட வேண்டியிருக்கும்.
குடும்ப உறுப்பினரின் iPadஇல் தகவல்தொடர்புகளில் உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டறிவதற்கான அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்தல்
உங்கள் குடும்ப உறுப்பினரின் iPadஇல் படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பப்படுவதற்கு அல்லது பெறப்படுவதற்கு முன்பு அவற்றில் நிர்வாணம் தென்படுகிறதா என்பதைக் கண்டறியும்படி நீங்கள் தேர்வுசெய்யலாம். மெசேஜஸ், AirDrop, தொடர்பு போஸ்டர்கள், FaceTime, ஃபோட்டோஸ் பிக்கர் மற்றும் ஃபோட்டோஸ் செயலியில் பகிரப்பட்ட ஆல்பங்கள் ஆகியவற்றில் இந்த அம்சம் கிடைக்கிறது. சில மூன்றாம் தரப்புச் செயலிகளில் நிர்வாண உள்ளடக்கத்தைக் கொண்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிரத் தேர்ந்தெடுத்தால் அவற்றையும் சாதனத்தால் கண்டறிய முடியும்.
நிர்வாண உள்ளடக்கம் கொண்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அனுப்பப்படுவதாகக் கண்டறியப்பட்டால், தகவல்தொடர்புப் பாதுகாப்பு அம்சம் ஓர் எச்சரிக்கையைக் காட்டும். அத்துடன், பாதுகாப்பாக இருப்பதற்கான விருப்பங்களையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும். புகைப்படங்களும் வீடியோக்களும் சாதனத்திலேயே பகுப்பாய்வு செய்யப்படும். நிர்வாணப் படம் கண்டறியப்பட்டதாக Appleக்கு எந்த அறிவிப்பும் அனுப்பப்படாது. மேலும், அந்தப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்கான அணுகலும் Appleக்கு இருக்காது.
உங்கள் குழந்தையின் Apple சாதனத்தில் தகவல்தொடர்புப் பாதுகாப்பு குறித்த தகவல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
குறிப்பு: “ஸ்கிரீன் டைம்” அம்சம் அமைக்கப்பட்டதும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்குத் “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” அம்சம் இயல்பாகவே ஆன் செய்யப்படுகிறது (நாடு அல்லது வட்டாரத்திற்கு ஏற்ப வயது மாறுபடும்).
iPadஇல் அமைப்புகள்
செயலிக்குச் செல்லவும்.“ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்து, உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
“தகவல்தொடர்புப் பாதுகாப்பு” என்பதைத் தட்டிய, அதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.
நீங்கள் ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை உள்ளிட வேண்டியிருக்கலாம்.
குறிப்பு: நீங்கள் தகவல்தொடர்புப் பாதுகாப்பு அம்சத்தை ஆன் செய்தால், அது அமைப்புகள்
> தனியுரிமை & பாதுகாப்பு என்பதில் உள்ள “உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்க எச்சரிக்கை” அம்சத்தை ஆன் செய்யும். iPadஇல் உள்ள உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்கம் குறித்த எச்சரிக்கைகளைப் பெறுதல் கட்டுரையைப் பார்க்கவும்.
பகுப்பாய்வுகள் மற்றும் தரவுகளைப் பகிர்வதன் மூலம், தகவல்தொடர்புப் பாதபாப்பை மேம்படுத்த Appleக்கு நீங்கள் உதவலாம். மெசேஜ்களும் மீடியா கோப்புகளும் Apple உடன் பகிரப்படாது. இதை ஆன் செய்ய, அமைப்புகள்
> ஸ்கிரீன் டைம் > தகவல்தொடர்புப் பாதுகாப்பு > தகவல்தொடர்புப் பாதுகாப்பை மேம்படுத்துதல் என்பதற்குச் செல்லவும்.
குடும்ப உறுப்பினரின் iPad சாதனத்தில் வயதுவந்தோர் உள்ளடக்கத்தைத் தடுத்தல்
சிறார் கணக்கை அமைக்கும்போது, “சிறார் கணக்கை உருவாக்கு” என்பதைத் தட்டிய பிறகு சிறாரின் பெயரையும் பிறந்ததேதியையும் உள்ளிட வேண்டும். குழந்தைகள் அணுகக்கூடிய உள்ளடக்கம் அவர்களது வயதால் தானாகத் தீர்மானிக்கப்படுகிறது. உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகளில் வெளிப்படைத்தன்மைக்கான மதிப்பீடுகளை நேரடியாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் குடும்ப உறுப்பினரின் சாதனத்தில் குறிப்பிட்ட சில உள்ளடக்கங்கள் (இசை, பாட்காஸ்ட்கள், News போன்றவை) வயதுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் உதவலாம்.
உங்கள் குடும்ப உறுப்பினரின் iPad சாதனத்தில் அமைப்புகள்
செயலிக்குச் செல்லவும்.“ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டி, “உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள்” என்பதைத் தட்டி, “உள்ளடக்கம் & தனியுரிமைக் கட்டுப்பாடுகள்” என்பதை ஆன் செய்யவும்.
குறிப்பிட்ட உள்ளடக்கத்தையும் தனியுரிமை விருப்பங்களையும் தேர்வுசெய்யவும். மேலும், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
உங்கள் குடும்ப உறுப்பினரின் கேட்கும் திறனைப் பாதுகாக்க, கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்து, “உரத்த ஆடியோவின் ஒலியைக் குறை” என்பதை கிளிக் செய்து, “அனுமதிக்க வேண்டாம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (இது ஹெட்ஃபோனின் அதிகபட்ச ஒலியளவில் மாற்றம் செய்வதைத் தடுக்கிறது.) அமைப்புகளில் உரத்த ஹெட்ஃபோன் ஒலிகளின் அளவைக் குறைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.
குறிப்பிட்ட சில செயலிகள் மற்றும் அம்சங்களில் உங்கள் பிள்ளை அணுகக்கூடிய உள்ளடக்கத்தை மாற்ற, “அனுமதிக்கப்படும் செயலிகள் & அம்சங்கள்” என்பதைத் தட்டி, அவற்றை ஆஃப் செய்யவும். அணுகலை அனுமதிக்க, அவற்றை ஆன் செய்யவும்.
மேல் இடதுபுறத்தில் உள்ள
-ஐத் தட்டவும்.
குடும்ப உறுப்பினருக்கான ஸ்கிரீன் டைம் அமைப்புகளைப் பின்னர் சேர்த்தல் அல்லது மாற்றுதல்
ஸ்கிரீன் டைம் அமைப்புகளைப் பின்னர் சேர்க்க அல்லது மாற்ற, மேலே உள்ள பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.
முக்கியம்: குடும்ப உறுப்பினருக்கான ஸ்கிரீன் டைமை அவரின் சாதனத்தில் அமைத்திருந்து (குடும்பப் பகிர்வு மூலம் அல்ல), ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை நீங்கள் மறந்துவிட்டால், அதை மீட்டமைக்க உங்கள் Apple கணக்கைப் பயன்படுத்தலாம். இருப்பினும், குடும்பப் பகிர்வு மூலம் உங்கள் சாதனத்தில் குடும்ப உறுப்பினருக்கான ஸ்கிரீன் டைமை நீங்கள் அமைத்திருந்து உங்கள் ஸ்கிரீன் டைம் பாஸ்கோடை மறந்துவிட்டால், உங்கள் சாதன பாஸ்கோடு, Touch ID, அல்லது Face IDஐப் பயன்படுத்தி அதை உங்கள் சாதனத்தில் மீட்டமைக்கலாம்.