iPadஇல் “குறிப்புகள்” செயலியில் வரைபடங்களையும் கையெழுத்தையும் சேர்த்தல்
ஓர் ஓவியத்தை வரைய அல்லது குறிப்பைக் கையால் எழுத Apple Pencil (ஆதரிக்கப்பட்ட மாடல்களில்) அல்லது உங்கள் விரலைப் பயன்படுத்தவும். பல்வேறு மார்க்-அப் கருவிகள் மற்றும் வண்ணங்களில் ஒன்றைத் தேர்வுசெய்து, அளவுகோலைப் பயன்படுத்தி நேர் கோடுகளை வரையலாம். Apple Pencil மூலம் எழுதும்போது, உங்கள் கையெழுத்துப் பாணியின் தோற்றமும் உணர்வும் பராமரிக்கப்பட்டு உங்கள் கையெழுத்து தானாகவே நிகழ்நேரத்தில் மேம்படுத்தப்படலாம்.

வரைதல் மற்றும் கையெழுத்துக் கருவிகளைப் பயன்படுத்துதல்
உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள்
செயலிக்குச் செல்லவும்.குறிப்பில், Apple Pencil மூலம் வரைய அல்லது எழுதத் தொடங்கவும். இல்லையெனில் உங்கள் விரலால் வரைய அல்லது எழுத,
-ஐத் தட்டவும்.பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:
நிறம் அல்லது கருவிகளை மாற்றுதல்: மார்க்-அப் கருவிகளைப் பயன்படுத்தவும்.
கையால் எழுதும் பகுதியை சரிசெய்தல்: மறுஅளவிடுதல் ஹேண்டிலை (இடதுபுறத்தில் இருக்கும்) மேலே அல்லது கீழே இழுக்கவும்.
Apple Pencil மூலம் எழுதும்போது உங்கள் கையெழுத்தை டைப் செய்த எழுத்துகளாக டிரான்ஸ்கிரைப் செய்யுங்கள்: பேனாவின் இடதுபுறத்தில் உள்ள கிறுக்கல்
கருவியைத் தட்டி எழுதத் தொடங்கவும்.குறிப்பு: “கிறுக்கல்” அம்சம் ஆதரிக்கப்படும் மொழிகளில் கிடைக்கிறது. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும். Apple Pencil மூலம் குறிப்புகளை எழுதுவது குறித்து மேலும் அறிய, "கிறுக்கல்" அம்சத்தின் மூலம் உரையை உள்ளிடுதல் என்பதைப் பார்க்கவும்.
உதவிக்குறிப்பு: குறிப்புகள் செயலியில் கையால் எழுதப்பட்ட உரையை (ஆதரிக்கப்பட்ட மொழிகளில்) நீங்கள் தேடலாம். குறிப்பிற்குத் தலைப்பு இல்லையெனில், கையால் எழுதப்பட்ட வார்த்தையின் முதல் வரி பரிந்துரைக்கப்படும் தலைப்பாக மாறும். தலைப்பைத் திருத்த, குறிப்பின் மேற்பகுதிக்கு ஸ்க்ரால் செய்து “திருத்து” என்பதைத் தட்டவும்.
வரைபடங்களையும் கையெழுத்தையும் தேர்ந்தெடுத்தல் மற்றும் திருத்துதல்
ஸ்மார்ட் தேர்வு அம்சத்தின் மூலம், டைப் செய்யப்பட்ட உரைக்கு நீங்கள் பயன்படுத்தும் அதே சைகைகளைப் பயன்படுத்தி வரைபடங்களையும் கையெழுத்தையும் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிற்குள் தேர்வை நீங்கள் நகர்த்தலாம், நகலெடுக்கலாம் அல்லது நீக்கலாம். நீங்கள் அதை மற்றொரு குறிப்பு அல்லது செயலியில் டைப் செய்யப்பட்ட வார்த்தையாகக் கூட ஒட்டலாம்.
குறிப்பு: iPadஇல் அமைப்புகள்
> பொது அமைப்புகள் > மொழி & வட்டாரம் > iPad மொழி என்பதில் ஆதரிக்கப்படும் மொழியை சிஸ்டம் மொழியாக அமைத்திருந்தால் “ஸ்மார்ட் தேர்வு”, “கையெழுத்தை டிரான்ஸ்கிரிப்ட் செய்தல்” போன்ற அம்சங்கள் வேலை செய்யும். iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.
உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள்
செயலிக்குச் செல்லவும்.குறிப்பில், பின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வரைபடங்களையும் உங்கள் விரலால் எழுதுவதையும் தேர்ந்தெடுக்கவும்:
லாசோ கருவியைப் பயன்படுத்துதல்:
-ஐத் தட்டி,
-ஐத் தட்டி (கருவித் தொகுப்பில் அழிப்பான் மற்றும் பட மந்திரக்கோலுக்கு இடையில் இருக்கும்), பிறகு உங்கள் விரலைப் பயன்படுத்தி நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஆப்ஜெக்ட்டுகளை கோடிட்டுக் காட்டவும்.சைகைகளைப் பயன்படுத்துதல்:
தேர்வை விரிவாக்க, தொட்டுப் பிடித்து இழுக்கவும்.
ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க இருமுறை தட்டவும்.
வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க மூன்று முறை தட்டவும்.
தேர்வைத் தேவைக்கேற்ப சரிசெய்ய ஹேண்டில்களை இழுக்கவும்.
தேர்ந்தெடுத்ததைத் தட்டி பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
வெட்டு
நகலெடு
நீக்கு
பிரதியெடு
Playgroundஇல் சேர்த்தல்
வார்த்தையாக நகலெடு
மேலே இடைவெளியைச் சேர்
மொழிபெயர்ப்பு
கையால் எழுதப்பட்ட வார்த்தையில் செயல்களை மேற்கொள்ளுதல்
iPadஆல் உங்கள் கையெழுத்தை மென்மையாகவும், நேராகவும், இன்னும் தெளிவாகவும் மேம்படுத்த முடியும். டைப் செய்யப்பட்ட வார்த்தையை உங்கள் கையெழுத்தில் ஒட்டலாம் அல்லது மாற்றலாம், இன்லைனில் எழுத்துப்பிழையைச் சரிசெய்யலாம், கையெழுத்தை நகர்த்தலாம் அல்லது நீக்கலாம்.
உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள்
செயலிக்குச் செல்லவும்.குறிப்பில், கையெழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:
மேம்படுத்துதல்: உங்கள் எழுத்தை மென்மையாகவும், நேராகவும், மேலும் தெளிவாகவும் மாற்ற, மேம்படுத்து 1 என்பதைத் தட்டவும்.
உங்கள் கையெழுத்தைத் தானாக மேம்படுத்த,
-ஐத் தட்டி,
-ஐத் தட்டவும், “கையெழுத்தைத் தானாகத் துல்லியமாக்கு” என்பதை ஆன் செய்யவும்.நீங்கள் எழுதுவதை இன்னும் நேராக்க: “நேராக்கு” என்பதைத் தட்டவும்.
எழுத்துப்பிழையைச் சரிசெய்தல்: அடிக்கோடிடப்பட்ட வார்த்தையைத் தட்டி, அதை எப்படிச் சரிசெய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். சரிசெய்யப்பட்ட வார்த்தை நீங்கள் எழுதிய வடிவிலேயே காட்டப்படும்.
கையால் எழுதியதை நகர்த்துதல்: தேர்ந்தெடுத்த உரையைத் தொட்டுப் பிடித்து, பிறகு அதை ஒரு புதிய நிலைக்கு இழுக்கவும்.
உரைப் பொருளைக் கையெழுத்தாக மாற்ற: வரைதல் பகுதியில் உள்ள உரைப் பொருளைத் தட்டி
-ஐத் தட்டவும், பின்னர் "கையெழுத்தாக மாற்று" என்பதைத் தட்டவும். (இந்த அம்சம்2-க்குக் குறைந்தது 10 தனித்துவமான சிறிய எழுத்துகளுடன் உங்கள் கையெழுத்தில் முன்பு சேமித்த குறிப்புகள் தேவை.)டைப் செய்த வார்த்தையை நீங்கள் எழுதியதில் ஒட்டுதல்: வலைப்பக்கம், ஆவணம் அல்லது மின்னஞ்சலில் இருந்து உரையைத் தேர்ந்தெடுத்து நகலெடுக்கவும்; குறிப்புகள் செயலியில் கையெழுத்து பகுதியில், “ஒட்டு” என்பதைத் தட்டவும். (இந்த அம்சம்2-க்குக் குறைந்தது 10 தனித்துவமான சிறிய எழுத்துகளுடன் உங்கள் கையெழுத்தில் முன்பு சேமித்த குறிப்புகள் தேவை.)
உரையை அழிக்க, எழுதியதைத் துடைத்த பிறகு உங்கள் எழுதும் கருவியை (Apple Pencil அல்லது உங்கள் விரல் போன்றவை) iPadஇல் அழுத்திப் பிடிக்கவும். (பேனா, மோனோ லைன் அல்லது மார்க்கர் போன்ற மார்க்-அப் கருவியைப் பயன்படுத்தும்போது ஆதரிக்கப்படுகிறது.)
பிற செயலிகளில் இருந்து படங்களை இழுத்தல்
பிற செயலிகளில் உள்ள படங்களை குறிப்புக்கு இழுத்து, கையால் எழுதப்பட்ட மற்றும் வரையப்பட்ட உள்ளடக்கத்துடன் இணைக்கலாம். வரையும் பகுதியில் ஒரு படத்தைச் சேர்த்த பிறகு, படத்தை மாற்றியமைத்து அதன் அளவை மாற்றலாம்.
பட மந்திரக்கோலைப் பயன்படுத்துதல்
Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், குறிப்புகள் செயலியில் பட மந்திரக்கோல் அம்சத்தைப் பயன்படுத்தி, நீங்கள் உருவாக்கும் தோராயமான ஸ்கெட்ச்களின் அடிப்படையில் படங்களை உருவாக்கலாம். சுற்றியுள்ள பகுதியிலுள்ள சொற்கள் மற்றும் படங்களின் அடிப்படையில் படத்தை உருவாக்க, காலியான இடத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். Apple Intelligence உடன் பட மந்திரக்கோலைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.