iPadஇல் VoiceOver மூலம் திரையில் உள்ள கீபோர்டைப் பயன்படுத்துதல்
திருத்தக்கூடிய உரைப் புலத்தை நீங்கள் செயல்படுத்தும்போது திரையில் உள்ள கீபோர்டை நீங்கள் பயன்படுத்தும் விதத்தை VoiceOver மாற்றும். நீங்கள் உரையை உள்ளிடலாம், தேர்ந்தெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்; கீபோர்டு மொழியை மாற்றலாம்; மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
திரையில் உள்ள கீபோர்டைப் பயன்படுத்தி வார்த்தையை உள்ளிடுதல்
உரைப் புலத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு இருமுறை தட்டவும்.
செருகல் புள்ளியும் திரையில் உள்ள கீபோர்டும் காட்டப்படும்.
உரையை உள்ளிட, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
அடிப்படை டைப்பிங் செய்ய: கீபோர்டில் இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்த பிறகு கீயைத் தேர்ந்தெடுத்து, எழுத்தை உள்ளிட இருமுறை தட்டவும். அல்லது கீயைத் தேர்ந்தெடுப்பதற்காக கீபோர்டைச் சுற்றி உங்கள் விரலை நகர்த்தி, ஒரு விரலால் கீயைத் தொட்டுக்கொண்டே, மற்றொரு விரலால் திரையைத் தட்டவும். ஒரு கீ தேர்ந்தெடுக்கப்படும்போது VoiceOver அதன் பெயரைச் சொல்லும், எழுத்து உள்ளிடப்படும்போதும் சொல்லும்.
“தொடுதல்” டைப்பிங் செய்ய: கீபோர்டில் உள்ள கீயைத் தேர்ந்தெடுக்க அதைத் தொடவும், பிறகு எழுத்தை உள்ளிட உங்கள் விரலைத் தூக்கவும். தவறான கீயைத் தொட்டுவிட்டால், நீங்கள் விரும்பும் கீக்குச் செல்ல விரலை ஸ்லைடு செய்யவும். நீங்கள் ஒவ்வொரு கீயைத் தொடும்போதும் அதற்கான எழுத்தை VoiceOver சொல்லும், ஆனால் உங்கள் விரலைத் தூக்கும்வரை அந்த எழுத்தை உள்ளிடாது.
“நேரடித் தொடுதல்” டைப்பிங் செய்ய: VoiceOver ஆஃப் செய்யப்பட்டுள்ளபோது நீங்கள் உள்ளிடும் அதே முறையில் டைப் செய்ய, VoiceOver அம்சம் கீபோர்டுக்கு மட்டும் முடக்கப்பட்டிருக்கும்.
டிக்டேஷன் செய்ய: டிக்டேஷனைத் தொடங்குவதற்கும் நிறுத்துவதற்கும் கீபோர்டு மீது இரண்டு விரல்களால் இருமுறை தட்டவும்.
மேற்குறியிடப்பட்ட எழுத்தை உள்ளிட, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
அடிப்படை டைப்பிங் செய்ய: எளிய எழுத்தைத் தேர்ந்தெடுத்து, மாற்று எழுத்துகள் தோன்றியுள்ளதைக் குறிக்கும் டோன் கேட்கும் வரை இருமுறை தட்டிப் பிடிக்கவும். தேர்வுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் பெயர்களைக் கேட்க, இடது அல்லது வலதுபுறமாக இழுக்கவும். தற்போதைய தேர்வை உள்ளிட விரலைத் தூக்கவும்.
“தொடுதல்” டைப்பிங் செய்ய: மாற்று எழுத்துகள் தோன்றும் வரை ஓர் எழுத்தைத் தொட்டு பிடிக்கவும்.
திரையில் உள்ள கீபோர்டைப் பயன்படுத்தி உரையைத் திருத்துதல்
செருகல் புள்ளியை நகர்த்த: உரையில், செருகல் புள்ளியை முன்னோக்கியோ பின்னோக்கியோ நகர்த்த, மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும். எழுத்து, வார்த்தை அல்லது வரியின் அடிப்படையில் செருகல் புள்ளியை நகர்த்த விரும்புகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்ய, ரோட்டரைப் பயன்படுத்தவும். தொடக்கம் அல்லது முடிவிற்குச் செல்ல, உரையை இருமுறை தட்டவும்.
செருகல் புள்ளி நகரும்போது VoiceOver ஓர் ஒலியை எழுப்பி, செருகல் புள்ளி நகர்ந்து செல்லும் இடத்தில் உள்ள எழுத்து, உரை அல்லது வரியை வாசிக்கும். ஒவ்வொரு வார்த்தையாக முன்னோக்கி நகரும்போது, செருகல் புள்ளி ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும், அதைப் பின்தொடரும் இடைவெளி அல்லது நிறுத்தற்குறிக்கு முன்பு தோன்றும். பின்னோக்கி நகரும்போது, செருகல் புள்ளி முந்தைய வார்த்தையின் முடிவில், அதைப் பின்தொடரும் இடைவெளி அல்லது நிறுத்தற்குறிக்கு முன்பு தோன்றும்.
ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தின் முடிவில் உள்ள நிறுத்தற்குறியைத் தாண்டி, செருகல் புள்ளியை நகர்த்த: எழுத்துப் பயன்முறைக்குத் திரும்ப, ரோட்டரைப் பயன்படுத்தவும்.
செருகல் புள்ளியை வரிக்கு வரியாக நீங்கள் நகர்த்தும்போது, நகர்த்துவதன் அடிப்படையில் ஒவ்வொரு வரியாக VoiceOver வாசிக்கும். முன்னோக்கி நகரும்போது, அடுத்த வரியின் தொடக்கத்தில் செருகல் புள்ளி தோன்றும் (கடைசியாக வாசிக்கப்பட்ட வரியின் முடிவுக்குச் செருகல் புள்ளி நகர்த்தப்படும்போது, பத்தியின் கடைசி வரியை அடையும் சமயத்தில் மட்டுமே இது விதிவிலக்காகும்). பின்னோக்கி நகரும்போது, வாசிக்கப்படும் வரியின் தொடக்கத்தில் செருகல் புள்ளி தோன்றும்.
ஓர் எழுத்தை நீக்க:
-ஐப் பயன்படுத்தவும்.உரையைத் தேர்ந்தெடுக்க: பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
ரோட்டரை “உரைத் தேர்வு” என்பதில் அமைத்து, எழுத்து, வார்த்தை, வரி அல்லது வாக்கியத்தைத் தேர்வுசெய்ய மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்த பிறகு பின்னோக்கி அல்லது முன்னோக்கி நகர்த்த இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும். (“உரைத் தேர்வு” என்பதை நீங்கள் செயல்படுத்த வேண்டியிருக்கலாம்—அமைப்புகள்
> அணுகல்தன்மை > VoiceOver > ரோட்டர் என்பதற்குச் செல்லவும்.)ரோட்டரைத் திருத்துதல் பயன்முறையில் அமைத்து, “தேர்ந்தெடு அல்லது அனைத்தையும் தேர்ந்தெடு” என்பதைத் தேர்வுசெய்வதற்கு மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்த பிறகு இருமுறை தட்டவும். நீங்கள் “தேர்ந்தெடு” என்பதைத் தேர்வுசெய்தால், நீங்கள் இருமுறை தட்டும்போது செருகல் புள்ளிக்கு மிக அருகில் உள்ள வார்த்தை தேர்ந்தெடுக்கப்படும். தேர்வுசெய்த பகுதியை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமெனில், பாப்-அப் மெனுவை நிராகரிக்க இரண்டு விரல்களால் ஸ்க்ரப் செய்யவும் (இரண்டு விரல்களை முன்னும் பின்னுமாக மூன்று முறை நகர்த்தி, “z” வடிவத்தை உருவாக்கவும்). பிறகு பின்ச் செய்யவும்.
வெட்டு, நகலெடு அல்லது ஒட்டு செயல்பாடுகளைச் செய்ய: ரோட்டரைத் திருத்துதல் பயன்முறையில் அமைத்து, உரையைத் தேர்ந்தெடுக்கவும். “வெட்டு”, “நகலெடு” அல்லது “ஒட்டு” என்பதைத் தேர்வுசெய்ய மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்த பிறகு இருமுறை தட்டவும்.
எழுத்துப்பிழை கொண்ட சொற்களைச் சரிசெய்ய: எழுத்துப்பிழை கொண்ட சொற்களைச் சரிசெய்ய ரோட்டரை அமைக்கவும். பின்னர் எழுத்துப்பிழை கொண்ட முந்தைய அல்லது அடுத்த வார்த்தைக்குச் செல்ல, மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும். பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றுதலைத் தேர்வுசெய்ய இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும், பின்னர் மாற்றுதலைப் பயன்படுத்த இருமுறை தட்டவும்.
செயல்தவிர்க்க: செயல்தவிர்க்க விரும்பும் செயலைத் தேர்வுசெய்ய, iPadஐ அசைத்து இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்த பிறகு இருமுறை தட்டவும்.
கீபோர்டு அமைப்புகளை மாற்றுதல்
அமைப்புகள்
> அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் செல்லவும்.பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:
டைப்பிங் ஸ்டைல்: புதிய ஸ்டைலை நீங்கள் தேர்வுசெய்யலாம். இல்லையெனில், ரோட்டரை டைப்பிங் பயன்முறையில் அமைக்கவும், பிறகு மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.
ஒலிப்புமுறை ஃபீட்பேக்: ஒவ்வொரு எழுத்தாக உரையைச் சொல்லும். VoiceOver முதலில் எழுத்தை வாசிக்கும், பிறகு அதன் ஒலிப்புமுறையை வாசிக்கும். உதாரணத்திற்கு, “f” எனச் சொன்ன பிறகு “foxtrot எனச் சொல்லும்.
டைப்பிங் ஃபீட்பேக்: எழுத்துகளையோ வார்த்தைகளையோ அல்லது இரண்டையும் வாசிக்கவோ, இல்லையெனில் எதையும் வாசிக்காத வகையிலும் தேர்வுசெய்யலாம்.
சொல்லும் விதம்: உரையை நீக்குதல் என்பதைத் தட்டவும். நீக்கப்படும் எழுத்துகளை VoiceOver குறைந்த பிட்சில் வாசிக்க, “பிட்சை மாற்று” என்பதைத் தட்டவும்.