iPadஇல் உள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் செய்தல்
டிஜிட்டல் கேமரா, SD மெமரி கார்டு அல்லது கேமராவைக் கொண்ட மற்றொரு iPad அல்லது iPhoneஇல் இருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக ஃபோட்டோஸ் செயலிக்கு இம்போர்ட் செய்யலாம். அதே போல, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் திருத்தப்படாத பதிப்புகளை உங்கள் iPad உடன் இணைக்கப்பட்டுள்ள வெளிப்புற டிரைவ், மெமரி கார்டு அல்லது பிற சேமிப்பகச் சாதனத்திற்கு நேரடியாக எக்ஸ்போர்ட் செய்யலாம்.
புகைப்படங்களையும் வீடியோக்களையும் உங்கள் iPadக்கு இம்போர்ட் செய்தல்
டிஜிட்டல் கேமரா, வெளிப்புற டிரைவ் போன்ற மற்ற சாதனங்களில் சேமித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் iPadஇல் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்கு இம்போர்ட் செய்யலாம்.
கேமரா அடாப்டர் அல்லது கார்டு ரீடரை Lightning கனெக்டர் அல்லது USB-C கனெக்டரில் இணைக்கவும், இல்லையெனில் சாதனத்தை iPad உடன் நேரடியாக இணைக்கவும்.
பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
கேமராவை இணைக்க: அடாப்டரை கேமராவுடன் இணைத்து, கேமராவை ஆன் செய்து, அது பரிமாற்ற பயன்முறையில் இருப்பதை உறுதிசெய்யவும். மேலும் தகவலுக்கு, கேமராவுடன் வந்த ஆவணங்களைப் பார்க்கவும்.
வெளிப்புற சேமிப்பக சாதனத்தை இணைக்க அல்லது SD மெமரி கார்டை கார்டு ரீடரில் செருக: ரீடரில் உள்ள ஸ்லாட்டில் கார்டை வலுக்கட்டாயமாகச் செருக வேண்டாம்; அது ஒரே ஒரு விதத்தில் மட்டுமே பொருந்தும்.
iPhone அல்லது iPadஐ இணைக்க: கேமரா அடாப்டருடன் இணைக்க சாதனத்துடன் வந்த லைட்னிங் அடாப்டர் அல்லது USB-C கேபிளைப் பயன்படுத்தவும். சாதனத்தை ஆன் செய்து அன்லாக் செய்யவும்.
iPadஇல் உள்ள ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.“இம்போர்ட்” என்பதைத் தட்டவும்.
நீங்கள் இம்போர்ட் செய்ய விரும்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேர்ந்தெடுத்து, இம்போர்ட் செய்யவேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அனைத்து ஐட்டங்களையும் இம்போர்ட் செய்ய: “அனைத்தையும் இம்போர்ட் செய்” என்பதைத் தட்டவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டங்களை இம்போர்ட் செய்ய: நீங்கள் இம்போர்ட் செய்ய விரும்பும் ஐட்டங்களைத் தட்டி (ஒவ்வொன்றுக்கும் ஒரு செக்மார்க் தோன்றும்), “இம்போர்ட்” என்பதைத் தட்டி, “தேர்ந்தெடுக்கப்பட்டதை இம்போர்ட் செய்” என்பதைத் தட்டவும்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இம்போர்ட் செய்த பிறகு, அவற்றை கேமரா, கார்டு, iPhone அல்லது iPadஇல் வைத்திருக்கவும் அல்லது நீக்கவும்.
கேமரா அடாப்டர் அல்லது கார்டு ரீடரைத் துண்டிக்கவும்.
புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளிப்புற சேமிப்பக சாதனத்திற்கு எக்ஸ்போர்ட் செய்தல்
iPadஇல் நீங்கள் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக வெளிப்புற டிரைவ், மெமரி கார்டு அல்லது பிற சேமிப்பகச் சாதனத்திற்கு எக்ஸ்போர்ட் செய்யலாம்.
குறிப்பு: திருத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, மாற்றியமைக்கப்படாத அசல் பதிப்பு எக்ஸ்போர்ட் செய்யப்படும்.
Lightning அல்லது USB-C கனெக்டரைப் பயன்படுத்தி உங்கள் iPadஐச் சேமிப்பக சாதனத்துடன் இணைக்கவும் அல்லது சாதனத்தை உங்கள் iPad உடன் நேரடியாக இணைக்கவும்.
iPadஇல் உள்ள ஃபோட்டோஸ்
செயலிக்குச் செல்லவும்.நீங்கள் எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேர்ந்தெடுக்கவும்.
-ஐத் தட்டி, “மாற்றப்படாத அசலைப் பதிவேற்று” என்பதைத் தட்டவும்.உங்கள் சேமிப்பக சாதனத்தைத் தட்டி, (இருப்பிடங்களுக்குக் கீழே உள்ளது) “சேமி” என்பதைத் தட்டவும்.
“மறைத்தவை” ஆல்பம் லாக் செய்யப்பட்டிருந்தால் அதில் உள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் இடமாற்றம் செய்யப்படாது. அதை அன்லாக் செய்ய, அமைப்புகள்
> செயலிகள் > ஃபோட்டோஸ் என்பதற்குச் சென்று, "Face IDஐப் பயன்படுத்து", "Touch IDஐப் பயன்படுத்து" அல்லது "பாஸ்கோடைப் பயன்படுத்து" என்பதை ஆஃப் செய்யவும்.