iPadஇல் Photo Boothஇல் உள்ள புகைப்படத்தை நீக்குதல், பகிர்தல் அல்லது நகலெடுத்தல்

Photo Booth செயலியில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை நீக்கலாம், நகலெடுக்கலாம் மற்றும் பகிரலாம்.

Photo Boothஇல் உள்ள புகைப்படத்தை நீக்குதல்

  1. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள புகைப்பட சிறுபடத்தைத் தட்டவும்.

  2. “நீக்கு” பட்டன்-ஐத் தட்டி “புகைப்படத்தை நீக்கு” என்பதைத் தட்டவும்.

Photo Boothஇல் புகைப்படத்தைப் பகிர்தல் அல்லது நகலெடுத்தல்

  1. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள புகைப்பட சிறுபடத்தைத் தட்டவும்.

  2. “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, “பகிர்” விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    புகைப்படத்தை வேறொரு ஆவணத்தில் ஒட்டுவதற்கு “புகைப்படத்தை நகலெடு” என்பதையோ ஃபோட்டோஸ் செயலியில் உள்ள பகிர்ந்த ஆல்பத்தில் புகைப்படத்தைச் சேர்க்க “பகிர்ந்த ஆல்பத்தில் சேர்” என்பதையோ நீங்கள் தேர்வுசெய்யலாம், ஃபோட்டோஸ் செயலியில் பகிர்ந்த ஆல்பங்களை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.