iPadஇல் கோப்புறைகளில் செயலிகளை ஒழுங்கமைத்தல்

உங்கள் முகப்புத் திரைப் பக்கங்களில் செயலிகளை எளிதாகக் கண்டறியும் வகையில் உங்கள் செயலிகளைக் கோப்புறைகளாக ஒழுங்கமைக்கலாம்.

கோப்புறையை உருவாக்குதல்

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. ஒரு கோப்புறையை உருவாக்க, ஒரு செயலியை மற்றொரு செயலிக்கு இழுத்துச் செல்லவும். பின்னர் மற்ற செயலிகளைக் கோப்புறைக்கு இழுத்துச் செல்லவும்.

    ஒரு கோப்புறையில் பல செயலிகளைக் கொண்ட பக்கங்கள் இருக்கலாம்.

  3. கோப்புறைக்கு மறுபெயரிட, அதைத் தொட்டுப் பிடித்து “மறுபெயரிடு” என்பதைத் தட்டி புதிய பெயரை உள்ளிடவும்.

    செயலிகள் ஜிகிள் ஆகத் தொடங்கினால், முகப்புத் திரையின் பின்னணியைத் தட்டி மீண்டும் முயலவும்.

  4. நீங்கள் நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: முகப்புத் திரையில் செயலிகளை ஒழுங்கமைத்தால் செயலி லைப்ரரியில் செயலிகளின் ஒழுங்கமைப்பு மாறாது.

உங்கள் முகப்புத் திரையில் உள்ள கோப்புறையை நீக்குதல்

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. செயலி ஐகான்கள் ஜிகிள் ஆகும் வரை முகப்புத் திரைப் பின்னணியைத் தொட்டுப் பிடிக்கவும்.

  3. கோப்புறையைத் திறக்க அதைத் தட்டிய பிறகு அதிலிருந்து அனைத்துச் செயலிகளையும் முகப்புத் திரைக்கு இழுக்கவும்.

    கோப்புறை காலியாக இருந்தால், அது தானாக நீக்கப்படும்.

கோப்புறையிலிருந்து செயலியை முகப்புத் திரைக்கு நகர்த்துதல்

ஒரு செயலியை எளிதாகக் கண்டறியவும் திறக்கவும் அதை நீங்கள் கோப்புறையிலிருந்து ஒரு முகப்புத் திரைப் பக்கத்திற்கு நகர்த்தலாம்.

  1. முகப்புத் திரைக்குச் செல்லவும்.

  2. செயலியைக் கொண்ட கோப்புறையைக் கண்டறிந்து, அதைத் திறக்க கோப்புறையைத் தட்டவும்.

  3. செயலிகள் ஜிகிள் ஆகத் தொடங்கும் வரை செயலியைத் தொட்டு பிடிக்கவும்.

  4. கோப்புறையிலிருந்து செயலியை முகப்புத் திரைக்கு இழுக்கவும்.