iPadஇல் பாஸ்கோடை அமைத்தல்
iPadஐ ஆன் செய்யும்போது அல்லது செயல்படுத்தும்போது அதை அன்லாக் செய்யத் தேவையான பாஸ்கோடை அமைத்து சிறந்த பாதுகாப்பைப் பெறலாம். பாஸ்கோடை அமைத்தால் தரவுப் பாதுகாப்பு ஆன் செய்யப்படும், இது உங்கள் iPad தரவை 256-bit AES என்கிரிப்ஷன் மூலம் என்கிரிப்ட் செய்யும். (சில செயலிகள் தரவுப் பாதுகாப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.)
பாஸ்கோடை அமைத்தல் அல்லது மாற்றுதல்
அமைப்புகள்
என்பதற்குச் சென்று, உங்கள் மாடலைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:Face ID & பாஸ்கோடு
Touch ID & பாஸ்கோடு
“பாஸ்கோடை ஆன் செய்” அல்லது “பாஸ்கோடை மாற்று” என்பதைத் தட்டவும்.
பாஸ்கோடை உருவாக்குவதற்கான விருப்பங்களைப் பார்க்க, “பாஸ்கோடு விருப்பங்கள்” என்பதைத் தட்டவும். பிரத்தியேக எண்ணெழுத்துக் குறியீடு, பிரத்தியே எண் குறியீடு ஆகியவை பாதுகாப்பான விருப்பங்களாகும்.
பாஸ்கோடை அமைத்த பிறகு iPadஐ அன்லாக் செய்ய, ஆதரிக்கப்படும் மாடல்களில் Face ID அல்லது Touch IDஐ (உங்கள் மாடலைப் பொறுத்து) நீங்கள் பயன்படுத்தலாம். இருப்பினும், கூடுதல் பாதுகாப்பிற்காக, பின்வரும் சமயங்களில் iPadஐ அன்லாக் செய்ய உங்கள் பாஸ்கோடை எப்போதும் உள்ளிட வேண்டும்:
உங்கள் iPadஐ ஆன் செய்தால் அல்லது மீண்டும் தொடங்கினால்.
48 மணி நேரத்திற்கு மேலாக உங்கள் iPadஐ அன்லாக் செய்யவில்லை என்றால்.
பாஸ்கோடு மூலம் கடந்த 6.5 நாட்களாகவும் Face ID அல்லது Touch ID மூலம் கடந்த 4 மணிநேரமாகவும் உங்கள் iPadஐ அன்லாக் செய்யாமல் இருந்தால்.
உங்கள் iPad தொலைநிலைக் கட்டளையைப் பெற்றால்.
Face ID அல்லது Touch ID மூலம் உங்கள் iPadஐத் தொடர்ந்து ஐந்து முறை அன்லாக் செய்ய முடியாமல் போனால்.
iPad எப்போது தானாக லாக் செய்யப்பட வேண்டும் என்பதை மாற்றுதல்
அமைப்புகள்
> டிஸ்ப்ளே & ஒளிர்வு > தானாகப் பூட்டுதல் என்பதற்குச் சென்று நேர அளவை அமைக்கவும்.

பாஸ்கோடுகளை 10 முறை தொடர்ந்து தவறாக உள்ளிட்டால் தரவு அழிக்கப்படும்
தொடர்ந்து 10 முறை தவறாக பாஸ்கோடை உள்ளிட்டால் அனைத்துத் தகவல்களும் மீடியாவும் தனிப்பட்ட அமைப்புகளும் அழிக்கப்படும் வகையில் iPad அமைக்கப்படும்.
அமைப்புகள்
என்பதற்குச் சென்று, உங்கள் மாடலைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:Face ID & பாஸ்கோடு
Touch ID & பாஸ்கோடு
பாஸ்கோடு
“தரவை அழி” என்பதை ஆன் செய்யவும்.
குறிப்பு: உங்கள் iPadஇன் முகப்புத் திரையில் இருந்துகொண்டு எதுவும் செய்யாமல் இருந்தால், “தானாகப் பூட்டுதல்” நேரம் பாதியாகக் குறைக்கப்படும்.
அனைத்துத் தரவுகளும் அழிக்கப்பட்ட பிறகு, iPadஐ பேக்-அப்பில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். உங்கள் iPadஐ பேக்-அப் செய்திருக்கவில்லை எனில், அதை நீங்கள் மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும்.
பாஸ்கோடை ஆஃப் செய்தல்
அமைப்புகள்
என்பதற்குச் சென்று, உங்கள் மாடலைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:Face ID & பாஸ்கோடு
Touch ID & பாஸ்கோடு
பாஸ்கோடு
“பாஸ்கோடை ஆஃப் செய்” என்பதைத் தட்டவும்.
பாஸ்கோடை மீட்டமைத்தல்
தொடர்ச்சியாக நான்கு முறை தவறான பாஸ்கோடை நீங்கள் உள்ளிட்டால் உங்கள் சாதனம் லாக் செய்யப்படும், மேலும் “உங்கள் iPad முடக்கப்பட்டது” என்ற மெசேஜ் காட்டப்படும். உங்கள் பாஸ்கோடு நினைவில் இல்லையெனில், கம்ப்யூட்டர் அல்லது மீட்டெடுப்புப் பயன்முறை மூலம் உங்கள் iPad தரவுகளை அழித்துவிட்டு, புதிய பாஸ்கோடை அமைக்கலாம். உங்கள் iPad பாஸ்கோடு மறந்துவிட்டால், அதை மீட்டமைக்க உங்கள் Mac அல்லது PCஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
குறிப்பு: உங்கள் பாஸ்கோடை மறப்பதற்கு முன் iCloud அல்லது கம்ப்யூட்டரில் பேக்-அப் செய்திருந்தால், அதிலிருந்து உங்கள் தரவையும் அமைப்புகளையும் மீட்டெடுக்கலாம்.