iPad நிலை ஐகான்களின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுதல்

திரையின் மேற்புறத்தில் உள்ள ஸ்டேட்டஸ் பாரில் உள்ள ஐகான்கள் iPad பற்றிய தகவல்களை வழங்குகின்றன.

குறிப்பு: நீங்கள் ஃபோகஸை ஆன் செய்தால், ஸ்டேட்டஸ் பாரில் அதன் ஐகான் காட்டப்படும்.

நிலை ஐகான்

இதன் அர்த்தம் என்ன?

“Wi-Fi நிலை” ஐகான்.

Wi-Fi. iPadஇல் Wi-Fi இணைய இணைப்பு உள்ளது. அதிக பார்கள் இருந்தால், இணைப்பு வலுவாக இருக்கும். கிடைக்கக்கூடிய நெட்வொர்க்குகளைப் பார்த்து Wi-Fi உடன் இணைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

மொபைல் சேவை “சிக்னல் வலிமை நிலை” ஐகான் (நான்கு பார்கள்).

மொபைல் சிக்னல். iPad (Wi-Fi + Cellular மாடல்கள்) மொபைல் நெட்வொர்க்கின் வரம்பில் இருக்கிறது. சிக்னல் இல்லை என்றால், “சேவை இல்லை” என்று காட்டப்படும்.

“விமானப் பயன்முறை நிலை” ஐகான்.

விமானப் பயன்முறை. விமானப் பயன்முறை ஆன் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் அல்லாத அம்சங்கள் கிடைக்கும் என்றாலும் வயர்லெஸ் செயல்பாடுகள் முடக்கப்பட்டிருக்கலாம். பயணத்திற்கான அமைப்புகளைத் தேர்வுசெய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“5G நிலை” ஐகான்.

5G. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G நெட்வொர்க் கிடைக்கிறது, ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). iPadஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

“5G நிலை” ஐகான்.

5G UC. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G UC நெட்வொர்க் கிடைக்கிறது, இதில் உங்கள் நெட்வொர்க் வழங்குநருடைய 5Gஇன் உயர் அலைவரிசைப் பதிப்பும் இருக்கும். ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). iPadஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

“5G+ நிலை” ஐகான்.

5G+. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G+ நெட்வொர்க் கிடைக்கிறது, இதில் உங்கள் நெட்வொர்க் வழங்குநருடைய 5Gஇன் உயர் அலைவரிசைப் பதிப்பும் இருக்கும். ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). iPadஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

“5G UW நிலை” ஐகான்.

5G UW. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G UW நெட்வொர்க் கிடைக்கிறது, இதில் உங்கள் நெட்வொர்க் வழங்குநருடைய 5Gஇன் உயர் அலைவரிசைப் பதிப்பும் இருக்கும். ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). iPadஇல் 5Gஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

“5G E நிலை” ஐகான்.

5G E. உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் 5G E நெட்வொர்க் கிடைக்கிறது, ஆதரிக்கப்படும் மாடல்களை அந்த நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கலாம் (அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

“LTE நிலை" ஐகான்.

LTE. iPad (Wi-Fi + Cellular மாடல்கள்) 4G LTE நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. (அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

“4G நிலை” ஐகான்.

4G. iPad (Wi-Fi + Cellular மாடல்கள்) 4G நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. (அனைத்து நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை). மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

“3G நிலை” ஐகான்.

3G. iPad (Wi-Fi + Cellular மாடல்கள்) 3G நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

“EDGE நிலை” ஐகான்.

EDGE. iPad (Wi-Fi + Cellular மாடல்கள்) EDGE நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

“GPRS நிலை” ஐகான்.

GPRS. iPad (Wi-Fi + Cellular மாடல்கள்) GPRS நெட்வொர்க் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

“தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் நிலை” ஐகான்.

தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் இணைப்பு. iPad வேறொரு சாதனத்தின் தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஹாட்ஸ்பாட்டில் சேருதல் கட்டுரையைப் பார்க்கவும்.

“VPN நிலை” ஐகான்.

VPN. iPad, VPNஐப் பயன்படுத்தி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

“வழிசெலுத்தல் இண்டிகேட்டர்” ஐகான்.

வழிகாட்டுதல். iPad படிப்படியான வழியை வழங்குகிறது. டிரைவிங் வழிகளைப் பெறுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

“தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் இண்டிகேட்டர்” ஐகான்.

தனிப்பட்ட ஹாட்ஸ்பாட். iPad தனிப்பட்ட ஹாட்ஸ்பாட்டை வழங்குகிறது. தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் மூலம் உங்கள் இணைய இணைப்பைப் பகிர்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“அழைப்பு இண்டிகேட்டர்” ஐகான்.

ஃபோன் அழைப்பு.iPad ஃபோன் அழைப்பில் உள்ளது. உங்கள் iPadஇல் அழைப்புகளையும் மெசேஜ்களையும் அனுமதிக்க iPhoneஐப் பயன்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

“FaceTime இண்டிகேட்டர்” ஐகான்.

FaceTime. iPad, FaceTime அழைப்பில் உள்ளது. FaceTime அழைப்புகளைச் செய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“பதிவு இண்டிகேட்டர்” ஐகான்.

திரைப் பதிவு. iPad உங்கள் திரையைப் பதிவு செய்கிறது. திரையைப் பதிவுசெய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“கேமரா பயன்பாட்டில் உள்ளது” ஐகான்.

கேமரா பயன்பாட்டில் உள்ளது. ஒரு செயலி உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது. உங்கள் iPadஇல் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோனை எந்தெந்தச் செயலிகள் அணுகலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

“மைக்ரோஃபோன் பயன்பாட்டில் உள்ளது” ஐகான்.

மைக்ரோஃபோன் பயன்பாட்டில் உள்ளது. ஒரு செயலி உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது. உங்கள் iPadஇல் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோனை எந்தெந்தச் செயலிகள் அணுகலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

“ஒத்திசைத்தல் நிலை” ஐகான்.

ஒத்திசைவு. iPad உங்கள் கம்ப்யூட்டருடன் ஒத்திசைக்கப்படுகிறது. iPadஐ மற்ற சாதனங்களுடன் ஒத்திசைத்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

“நெட்வொர்க் செயல்பாட்டு நிலை” ஐகான்.

நெட்வொர்க் செயல்பாடு. நெட்வொர்க் அல்லது வேறு செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது. செயலிச் செயல்பாட்டைக் காட்ட, சில மூன்றாம் தரப்புச் செயலிகள் இந்த ஐகானைப் பயன்படுத்துகின்றன. இணையத்துடன் இணைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்

“லாக் நிலை” ஐகான்.

லாக். iPad லாக் செய்யப்பட்டுள்ளது. iPadஐ வேக் செய்தல், அன்லாக் செய்தல் மற்றும் லாக் செய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“தொந்தரவு செய்ய வேண்டாம்” நிலை ஐகான்.

தொந்தரவு செய்ய வேண்டாம். “தொந்தரவு செய்ய வேண்டாம்” அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளது. ”ஃபோகஸ்” அம்சத்தை ஆன் செய்தல் அல்லது திட்டமிடுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

“திசையமைவு லாக் நிலை” ஐகான்.

திசையமைவு லாக். திரைத் திசையமைவு லாக் செய்யப்பட்டுள்ளது. திரைத் திசையமைவை மாற்றுதல் அல்லது லாக் செய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“இருப்பிடச் சேவைகள் நிலை” ஐகான்.

இருப்பிடச் சேவைகள். ஒரு செயலி இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்துகிறது. உங்கள் iPadஇன் இருப்பிடத்தை எந்தெந்தச் செயலிகள் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

“அலாரம் நிலை” ஐகான்.

அலாரம். அலாரம் அமைக்கப்பட்டுள்ளது. அலாரத்தை அமைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“ஹெட்ஃபோன்கள் இணைக்கப்பட்டுள்ள நிலை” ஐகான்.

ஹெட்ஃபோன்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆன் செய்யப்பட்டு Bluetooth வரம்பிற்குள் உள்ள Bluetooth® ஹெட்ஃபோன்களுடன் iPad இணைக்கப்படும். Bluetooth ஹெட்ஃபோன்களை அமைத்து அவற்றில் கேட்டல் கட்டுரையைப் பார்க்கவும்.

“பேட்டரி நிலை” ஐகான்.

பேட்டரி. iPad பேட்டரி அளவைக் காட்டும். ஐகான் மஞ்சள் நிறத்தில் இருந்தால் குறைந்த ஆற்றல் பயன்முறை ஆனில் உள்ளது என்று அர்த்தம். iPad பேட்டரி சதவீதத்தைக் காட்டுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

“பேட்டரி சார்ஜிங்” ஐகான்.

பேட்டரி சார்ஜ் ஆகிறது. iPad பேட்டரி சார்ஜ் ஆகிறது. ஐகான் சாம்பல் நிறமாக இருக்கும்போது, சார்ஜிங் இடைநிறுத்தப்படும். பேட்டரியை சார்ஜ் செய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“Bluetooth பேட்டரி நிலை” ஐகான்.

Bluetooth பேட்டரி. இணைக்கப்பட்ட ஆதரிக்கப்படும் Bluetooth சாதனத்தின் பேட்டரி அளவைக் காட்டுகிறது. Bluetooth ஆக்சஸரீக்களுடன் இணைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“AirPlay நிலை” ஐகான்.

AirPlay. AirPlay ஆனில் உள்ளது. வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் ஸ்ட்ரீம் செய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“குரல் கட்டுப்பாடு” ஐகான்.

குரல் கட்டுப்பாடு. அமைப்புகள் > அணுகல்தன்மை என்பதில் “குரல் கட்டுப்பாடு” அம்சம் ஆன் செயப்பட்டுள்ளதால் iPadஐப் பயன்படுத்த உங்கள் குரலைப் பயன்படுத்தலாம்.

“RTT நிலை" ஐகான்.

RTT. RTT ஆன் செய்யப்பட்டுள்ளது. RTT அமைத்தல் மற்றும் பயன்படுத்துதல் கட்டுரையைப் பயன்படுத்தவும்.