iPadஇல் மேம்பட்ட கேமரா அமைப்புகளை மாற்றுதல்

iPad கேமராவில் ஃபோகஸ் மற்றும் எக்ஸ்போஷரை நேரடியாகச் சரிசெய்வது, ஷட்டர் ஒலியை ஆன் மற்றும் ஆஃப் செய்வது மற்றும் பிற அமைப்புகளை மாற்றுவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஃபோகஸ் மற்றும் எக்ஸ்போஷரைச் சரிசெய்தல்

புகைப்படம் எடுப்பதற்கு முன்பு, iPad கேமரா தானாகவே ஃபோகஸ் மற்றும் எக்ஸ்போஷரை அமைக்கும். மேலும் “முகம் கண்டறிதல்” அம்சம் பல்வேறு முகங்களுக்கு ஏற்றபடி எக்ஸ்போஷரைச் சமநிலைப்படுத்தும். ஃபோகஸ் மற்றும் எக்ஸ்போஷரை நேரடியாகச் சரிசெய்ய, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. iPadஇல் கேமராவை கேமரா திறக்கவும்.

  2. தானாக ஃபோகஸ் செய்யப்படும் பகுதி மற்றும் எக்ஸ்போஷர் அமைப்பை (மஞ்சள் நிறத்தில் இருக்கும்) காட்ட, திரையைத் தட்டவும்.

  3. ஃபோகஸ் பகுதியை நகர்த்த விரும்பும் இடத்தின் மீது தட்டவும்.

  4. “எக்ஸ்போஷரை சரிசெய்” பட்டன்ஐ ஃபோகஸ் பகுதிக்கு அருகே, மேலே அல்லது கீழே இழுத்துச் செல்வதன் மூலம் எக்ஸ்போஷரைச் சரிசெய்யலாம்.

    எடுக்கவிருக்கும் ஷாட்களுக்காக உங்கள் மேனுவல் ஃபோகஸ் மற்றும் எக்ஸ்போஷர் அமைப்புகளை லாக் செய்ய, AE/AF லாக் என்பதைப் பார்க்கும்வரை ஃபோகஸ் பகுதியைத் தொட்டுப் பிடிக்கவும். அமைப்புகளை அன்லாக் செய்ய திரையைத் தட்டவும்.

நீங்கள் படமெடுக்கும் காட்சியை கிரிட்டைப் பயன்படுத்தி சீராக்குதல்

நீங்கள் படமெடுக்கும் காட்சியைச் சீராக்கி சரிசெய்ய உதவும் கிரிட்டை கேமரா திரையில் காட்ட, அமைப்புகள்  > கேமரா என்பதற்குச் சென்று, “கிரிட்” என்பதை ஆன் செய்யவும்.

நீங்கள் புகைப்படம் எடுத்த பிறகு, ஷாட்களை மேலும் சீரமைக்கவும், கிடைமட்ட மற்றும் செங்குத்தான காட்சியைச் சரிசெய்யவும் ஃபோட்டோஸ் செயலியில் உள்ள எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தலாம். புகைப்படம் அல்லது வீடியோவை நேராக்கி அதன் காட்சியமைப்பைச் சரிசெய்தல் என்பதைப் பார்க்கவும்.

கேமரா அமைப்புகளைச் சேமித்தல்

  1. அமைப்புகள்  > கேமரா > அமைப்புகளைத் தக்கவைத்தல் என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றை ஆன் செய்யவும்:

    • Live Photo: Live Photo அமைப்பைச் சேமிக்கவும். இந்த அமைப்பு இயல்புநிலையாக ஆன் ஆகிறது.

      Live Photo எடுத்தல் என்பதைப் பார்க்கவும்.

    • கேமரா பயன்முறை: நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய வீடியோ அல்லது பனோ போன்ற கேமரா பயன்முறையைச் சேமிக்கவும்.

      கேமரா பயன்முறைகளுக்கு இடையே மாறுதல் என்பதைப் பார்க்கவும்.

ஷட்டர் ஒலியளவைச் சரிசெய்தல்

  1. iPadஇல் கேமராவை கேமரா திறக்கவும்.

  2. கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, வால்யூம் ஸ்லைடர்-ஐ மேலே அல்லது கீழே இழுக்கவும்.

  3. கேமராவுக்குத் திரும்பிச் செல்ல கட்டுப்பாட்டு மையத்திற்கு வெளியே உள்ள திரையைத் தட்டவும்.

    குறிப்பு: Live Photos “Live Photos” பட்டன் ஆன் செய்யப்பட்டிருந்தால் ஷட்டர் ஒலி எழுப்பாது.

    குறிப்பு: சில நாடுகள் மற்றும் வட்டாரங்களில் ஷட்டர் ஒலியை நீங்கள் மியூட் செய்ய முடியாது.

காட்சி கண்டறிதலை ஆஃப் செய்தல், ஆன் செய்தல்

ஆதரிக்கப்படும் மாடல்களில், “காட்சி கண்டறிதல்” அம்சம் நீங்கள் எதைப் புகைப்படம் எடுக்கிறீர்கள் என்பதை அடையாளம் கண்டு, அந்தக் காட்சியின் சிறந்த அம்சங்களை வெளிக்கொணர அதற்கேற்ற தோற்றத்தைப் பயன்படுத்தும்.

காட்சி கண்டறிதல் அம்சம் இயல்புநிலையாக ஆன் ஆகிறது. “காட்சி கண்டறிதல்” அம்சத்தை ஆஃப் செய்ய, அமைப்புகள்  > கேமரா என்பதற்குச் சென்று, “காட்சி கண்டறிதல்” என்பதை ஆஃப் செய்யவும்.

லென்ஸ் திருத்தத்தை ஆஃப் செய்தல் மற்றும் ஆன் செய்தல்

ஆதரிக்கப்படும் மாடல்களில், முன்பக்க கேமரா அல்லது அல்ட்ரா வைடு கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களில் இன்னும் இயல்பான தோற்றத்தைக் கொண்டுவரும் வகையில் “லென்ஸ் திருத்தம்” அம்சம் புகைப்படங்களைச் சரிசெய்யும்.

லென்ஸ் திருத்தம் இயல்புநிலையாக ஆன் ஆகிறது. “லென்ஸ் திருத்தம்” அம்சத்தை ஆஃப் செய்ய, அமைப்புகள்  > கேமரா என்பதற்குச் சென்று, “லென்ஸ் திருத்தம்” என்பதை ஆஃப் செய்யவும்.

“மெசேஜஸ்” செயலியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சேமிப்பதை நிறுத்துதல்

“மெசேஜஸ்” செயலியில் நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் தானாகவே “ஃபோட்டோஸ்” செயலியில் உள்ள உங்கள் லைப்ரரியில் சேமிக்கப்படும்.

இந்த அம்சத்தை ஆஃப் செய்ய, அமைப்புகள்  > கேமரா என்பதற்குச் சென்று “படமெடுத்தவற்றைப் புகைப்பட லைப்ரரியில் சேமி” என்பதை ஆஃப் செய்யவும்.